Independance day: PM speech | ' செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவோம் ' சுதந்திரதின உரையில் பிரதமர் சூளுரைத்தார் !| Dinamalar

' செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவோம் ' சுதந்திரதின உரையில் பிரதமர் சூளுரைத்தார் !

Updated : ஆக 15, 2012 | Added : ஆக 15, 2012 | கருத்துகள் (69)
Advertisement

புதுடில்லி: உலக அளவில் பெருமை கொள்ளும் படி செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா சார்பில் விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சியை துவக்குவோம் என சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து பிரதமர் நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் சூளுரைத்தார். இந்தியாவின் 66வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். முன்னதாக காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முப்படை தளபதிகளை சந்தித்தார். பின்னர் 7.34 மணிக்கு கொடி ஏற்றினார்.


தேசிய கொடியேற்றி பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: உணவு தானியங்கள் வீணாவது நாட்டின் முக்கிய பிரச்னையாக உள்ளது. உலக பொருளாதாரம் வறுமை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பருவ மழை குறைவான காரணத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடையும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மின் உற்பத்தி பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாண்டுகளில் மின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக இந்தியா சார்பில் விண்கலம் செலுத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதாரத்தை பொறுத்தவரை இந்தியா போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் போன்ற சம்பவங்கள், வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் . நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதும் வறுமையை ஒழிப்பதும் அவசரத்தேவையாக உள்ளது. நாட்டில் அரசியல் கட்சியினரிடம் ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை . இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஆக-201216:52:51 IST Report Abuse
Nallavan Nallavan அதெல்லாம் வேணாம் இருக்குற அரசியல்வாதிங்க மொத்தமா அங்கே போங்க தலை முழுகறோம்
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
16-ஆக-201214:16:25 IST Report Abuse
Ramasami Venkatesan நீங்கள் செவ்வாய் கிருஹத்துக்கு விண்கலம் அனுப்புவதற்கு முன்பே அங்கே நம் நாட்டு விலை வாசி ஏற்றம் போய் சேர்ந்து அதையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
SPB - Chennai,இந்தியா
16-ஆக-201211:28:47 IST Report Abuse
SPB போங்க மண் மோகன் ஜி எப்ப பாத்தாலும் ஒட்டு போட்ட மக்களை பார்த்தல் உங்கள்ளுக்கு ஒரே காமெடி.... வேணும்னா சோனியாஜி கிட்ட சொல்லி வர தீபாவளிக்கு ஒரே ஒரு ராக்கெட் விட்டுகோங்க...
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
16-ஆக-201201:44:05 IST Report Abuse
Sundeli Siththar 1 லட்சம் டன் உணவு தானியம் மழையிலும், வெயிலிலும் நனைந்து வீணானது.. இதை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கொடுத்திருந்தால் மக்கள் பசி குறைந்திருக்கும். குறைந்தபட்சம் இந்திய உள்நாட்டு சந்தையில் விற்றிருந்தால் விலைவாசி அடங்கியிருக்கும்... இதை குறைக்க போர்கால அடிப்படையில் தானிய சேமிப்பு கிடங்கு அமைப்போம் என்று சொல்லமுடியவில்லை... செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பராராம்... என்னவோ செவ்வாய் கிழமை வெண்கலம் வாங்குவோம் என்ற ரேஞ்சில் பேசுகிறார்.... நாட்டின் பிரதமருக்கு, நாட்டிற்கு எது தேவை என்பக்கூட தெரியவில்லை..
Rate this:
Share this comment
Cancel
Shanmuga Vel - Bangalore,இந்தியா
16-ஆக-201201:42:44 IST Report Abuse
Shanmuga Vel ஒருத்தனுக்கு எந்திருச்சு நிக்கவே வக்கிலையாம்
Rate this:
Share this comment
Cancel
Saravanakumar Subramanian - Singapore,சிங்கப்பூர்
16-ஆக-201200:31:33 IST Report Abuse
Saravanakumar Subramanian கறுப்பு பணம், லஞ்ச ஊழல், விலைவாசி ஏற்றம், உணவு தானிய உற்பத்தி மற்றும் வினியோகம், விவசாயிகள் தற்கொலை, பிராந்திய வன்முறைன்னு லிஸ்ட் நீளுது. முடிஞ்சா இதல ஒன்னு ரெண்டயாவது சரி பண்ணுங்க. அத விட்டுட்டு வெத்து வேட்டு அறிக்கையெல்லாம் போட வேண்டாம் எங்க கலைஞர் மாதிரி...
Rate this:
Share this comment
Cancel
Balaji Gopalan - Nouakchott,மொரிட்டானியா
16-ஆக-201200:00:38 IST Report Abuse
Balaji Gopalan முதலில் உள்ளூர் ல ஓனான் பிடிங்க அப்புறன் வெளியுல போகலாம் ,,, இங்க அவன் அவன் சோத்துக்கு வழி இல்லாம எத்தனையோ பேரு சாகிறான் ,,, உங்களுக்கு வேற பொழப்பு இல்லையா ,,, உங்க (காங்கிரஸ்) கட்சி கிட்ட இருந்து நாடு சுதந்திரம் பெறனும் அப்போ தான் நிசமா சாதாரண குடிமக்கள் சந்தோசமா இருப்பங்கோ
Rate this:
Share this comment
Cancel
vijaykumar - madurai  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201219:39:46 IST Report Abuse
vijaykumar உங்களை வீட்டுக்கு அனுப்பினால் தான் இந்த நாடு உருப்படும். அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் தான் நீங்கள் ஆட்சி செய்றீங்க! அத ஞாபகத்ல வச்சுக்கங்க - 'மேலூர்' குமார்
Rate this:
Share this comment
Cancel
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
15-ஆக-201218:52:02 IST Report Abuse
Gilbert karunagaran உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
Rate this:
Share this comment
Cancel
raasukutty - London,யுனைடெட் கிங்டம்
15-ஆக-201218:46:58 IST Report Abuse
raasukutty இந்த (காங்கிரஸ்) கிரக பெயர்ச்சி எப்பா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை