Give a change: Vijayakanth to voters | ஆட்சிக்கொடுத்தால் தங்கத்தட்டில் தாலாட்டு: விஜயகாந்த் வாக்குறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சிக்கொடுத்தால் தங்கத்தட்டில் தாலாட்டு: விஜயகாந்த் வாக்குறுதி

Updated : ஆக 17, 2012 | Added : ஆக 15, 2012 | கருத்துகள் (127)
Advertisement

திருச்சி: ""தி.மு.க.,- அ.தி.மு.,க., என, இரண்டு கட்சிகளும் மாறி, மாறி கொள்ளையடிக்கின்றன. ஒரு தடவை என்னிடம் ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன்,'' என, தே.மு.தி.க., கட்சித்தலைவர் விஜயகாந்த் பேசினார்.


சுதந்திர தினத்தையொட்டி, திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில், தே.மு.தி.க., சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. வேஷ்டி, துண்டு, சால்வை, கைத்தடி உள்ளிட்ட, 20 பொருட்களை தியாகிகளுக்கு வழங்கி, தே.மு.தி.க., கட்சித்தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான விஜயகாந்த் பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று, 66 ஆண்டாகியும், தமிழகத்தில் எழுத்துரிமை, பேச்சுரிமை இல்லை. அரசின் குறைகளை சுட்டுக்காட்டும் கருணாநிதியும், நானும், பத்திரிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தியாவில் ஜனநாயக தழைக்க எதிர்க்கட்சிகள் வேண்டும் என்று கூறும் ஜெயலலிதா, தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படும், எங்கள் மீது மட்டும் ஏன் வழக்கு போடுகிறார்? மதுரை கிரானைட் குவாரிகளில், 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு ஒரு அமைச்சர் கூட சென்றுப் பார்க்கவில்லை. குரூப்-2 தேர்வில் நடந்த மிகப்பெரிய மோசடி குறித்து ஜெயலலிதா வாய் திறக்கவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரத்தில் தமிழகம் பின் தங்கியுள்ளது. ஆனால், பல லட்சம் பேருக்கு வேலை என்று ஜெயலலிதா அறிக்கை விடுக்கிறார். தமிழகத்தில் எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளார் என்று வெள்ளை அறிக்கை வெளியிட ஜெயலலிதா தயாரா? தமிழக போலீஸார் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். எப்போது, தி.மு.க., போலீஸ், அ.தி.மு.க., போலீஸ் என்ற நிலை மாறுகிறதோ அன்று தான் தமிழ்நாடு உருப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல், லஞ்சம் பெருகியுள்ளது. சுதந்திர தினத்தன்று இனி நாட்டில் குண்டே வெடிக்காது என்று பிரதமர் பேசிய அடுத்த சில மணி நேரத்தில், மணிப்பூரில் வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை. விலைவாசி உயர்ந்துவிட்டது. பஸ், பால், மின் கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. மின்சாரத்துக்கு காற்றை நம்பியிருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். தி.மு.க.,- அ.தி.மு.,க., என, இரண்டு ஆட்சிக்காலத்திலும் மொத்தம், 100 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. இரு கட்சிகளும் மாறி, மாறி கொள்ளையடிக்கின்றன. மொத்தத்தில் தமிழக மக்களை இரண்டு கட்சிகளும் ஏமாற்றுகின்றன. ஒரு தடவை என்னிடம் ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கொள்கைப்பரப்புச்செயலாளர் சந்திரகுமார், திருச்சி மாவட்டச்செயலாளர்கள் எம்.எல்.ஏ., செந்தில்குமார், விஜயராஜன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


கொட்டிய மழை! விழா துவங்கிய சிறிது நேரத்திலேயே மழை கொட்டத் துவங்கியது. நாற்காலிகளை குடையாக்கி கட்சித்தொண்டர்கள் விஜயகாந்த் பேச்சை ரசித்தனர். அப்போது விஜயகாந்த், ""தியாகிகளும், விஜயகாந்த்தும் வந்தததால் தான் திருச்சியில் மழை பெய்கிறது என்று மாவட்டச்செயலாளர் விஜயராஜன் கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்று கூறியபோது கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
17-ஆக-201207:53:21 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy Engaludaiya அரசியல் கடை எப்போதும் திறந்து வைத்துள்ளோம் முதலில் தெய்வத்துடன் கூட்டணி வியாபாரம் நடத்தினார் பின்பு யாருடன் வியாபாரம் நடத்த கடையை மீண்டும் விரிவு படுத்தினார் ஆனால் போண்டி ஆனார் மீண்டும் யாருடனும் சேர்ந்து வியாபாரம் செய்ய மாட்டேன் என்றார் இப்போது நல்லவர்களுடன் இனைந்து வியாபாரம் செய்யப்போரராம் இவர் ஒரு வியாபாரி
Rate this:
Share this comment
Cancel
Sathish kumar - Erode,இந்தியா
16-ஆக-201219:22:14 IST Report Abuse
Sathish kumar தகர டப்பால தாலாற்றதுக்கே வழிய காணோம். இவரு தங்க தட்டுல தாலாற்றாராம்
Rate this:
Share this comment
Cancel
Kamaloodin Ahmed - toronto,கனடா
16-ஆக-201218:29:40 IST Report Abuse
Kamaloodin Ahmed இவர ஆட்சியில் வைத்தால் டாஸ்மாக் இலவசம் .மக்களே எங்கள் ஒட்டு விஜயகாந்துக்கே
Rate this:
Share this comment
Cancel
Ravikumar J - PUNE,இந்தியா
16-ஆக-201217:11:59 IST Report Abuse
Ravikumar J நல்லது செய்யுங்க உங்களுக்கு தங்க தட்டுல வோட்டு கிடைக்கும். அதை வீட்டு இது என்ன..... தங்க தட்டை கொள்ளை அடிகுரமாத்ரி இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
MAKKALIN MANASAATCHI - chennai,இந்தியா
16-ஆக-201216:34:40 IST Report Abuse
MAKKALIN MANASAATCHI அன்பான வாசகர்களே இதுவே நான் முதன் முதலாக தினமலர் வாசக பக்கத்தில் என் பதிவை செய்கிறேன் என்னை பொறுத்த வரை தமிழக மக்களுக்கு சினிமாவின் மோகம் முற்றிலுமாக மறையவேண்டும் குடும்பத்தோடு சினிமா சென்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும் நம் நேரங்களை நம்மக்கலோடும் நண்பகர்லோடும் செலவழிக்க வேண்டும் அப்படியே சினிமா பர்ர்தாலும் தேர்வு செய்து பார்க்க வேண்டும் அந்த படத்தில் வரும் கதையையும் நடிகரையும் தியோட்டேர்லேய விட்டு விடவும் இப்போது நான் சொல்லவருவது என்னவென்றால் நடிகர்கள் அவர்கள் தொழிலை செய்கிறார்கள் கதைக்கு ஏற்றார் போல நடிக்கிறார்கள் அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதன் தான் அவர்களுக்கு வீட்டை ஆள கூட தகுதி இல்லதவர்கள ஆனால் தமிழகத்திலே திரையில் தோன்றியவன் எல்லோருமே தமிழ் நாட்டை ஆள துடிக்கிறான் இங்கே இருக்கும் மக்களின் சினிமா பைதியம் சற்றே சிந்தித்து பாருங்கள் தமிழகத்தில் எத்தனையோ நல்ல தலைவர்கள் இருந்தும் அவர்களுக்கு மதிப்பு கிடையாது குறிப்பாக திரு . நல்லகண்ணு , வைகோ ,சிதம்பரம் இவர்கள் நல்ல திறமையான தலைவர்கள் ஆனால் இங்கோ இன்னும் மக்கள் நல்ல தலைவர் என்று நினைக்குறதே விஜயகாந்த் ,விஜய், கார்த்திக், ரஜினிகாந்த்,குஸ்பு , நடிப்பு துறையில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள் மறுப்பதற்கில்லை ஆனால் அவர்கள் இந்த நாடு மக்கள் என்று ஒதுங்கியே இருக்கிறார்கள் நம்முடைய அண்டை மாநிலம் கேரளா எத்தனையோ திறமையான நடிகர்கள் இருந்தாலும் மக்கள் தலைவர்களாக ஏற்பதும் இல்லை அவர்களும் அரசியல் துறைக்கு வருவதும் இல்லை அவர்கள் அதை தொழிலாக மட்டுமே பார்கிறார்கள் அதனால் தான் இன்றைய இந்திய அரசியலில் அவர்கள் இல்லாத எந்த துறையும் இருக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டை வீட இவர்கள் பவரானவர்கள் ஆகையால் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்ல வூக்கம் கொடுங்கள் சினிமாவை தவிருங்கள் உங்கள் குழந்தைகளையும் சினிமாவின் தாக்கத்தை குறைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள் நமது அடுத்த தலைமுறையாவது நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-ஆக-201216:33:19 IST Report Abuse
villupuram jeevithan டாஸ்க்மாக்கில் தூங்கவைக்காமல், தாலாட்டில் தூங்க வைப்பேன் என்கிறார், எப்படியோ மக்கள் விழிக்கக் கூடாது என்பது தான் குறிக்கோள்.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
16-ஆக-201215:20:31 IST Report Abuse
ganapathy இவர் தன் கட்சி தொண்டர்களை சேர்த்துக்கொண்டு, ரத்த தானம், கண் தானம் (இறந்த பிறகு) மற்றும் சமூக சேவை செய்யலாமே. சேரி குப்பம் போன்ற இடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு சுகாதாரம், மற்றும் படிப்பு சொல்லி கொடுத்தல் ( பட்டதாரிகள் அணியில் உள்ள வாலிபர்கள் சனி ஞாயிறு நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கலாம்) அல்லது கிராமங்களில் உள்ள குளம் தூர் எடுக்கலாம். தண்ணீர் தொட்டிய சுத்தம் செய்யலாம் . உருப்படியா எதாவது செஞ்சு புட்டு பதவிய கேளுங்க. அடுத்தவன் குற்றத்தில் குளிர் காய முடியாது ரொம்ப நாளைக்கு
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
16-ஆக-201215:16:08 IST Report Abuse
ram prasad ஜெ ஆட்சிக்கு வந்தது இரண்டு மணி மின் தடைக்கு நிரந்தர விடை கொடுப்பேன் என்று சொன்னாரே சொன்னது மட்டும் அல்ல இரண்டு மணி மின் தடைக்கு நிரந்தர விடை கொடுத்து பத்து பன்னிரண்டு நேர மின் தடையா மாற்றி சாதனை செய்தார் அது போல உம்மால் செய்ய முடியுமா ?
Rate this:
Share this comment
Cancel
V.Muthukumar - Tamilnadu, Madurai,இந்தியா
16-ஆக-201214:55:49 IST Report Abuse
V.Muthukumar உங்க எல்லாருக்கும் வேற வேலையே இல்லையா. ஒருத்தர் நல்லது பண்ணா அவர பாராட்டனும். பாராட்ட மனசு இல்லைனா செய்திய மட்டும் படிச்சுக்கிட்டு பொத்திக்கிட்டு இருக்கணும். நீங்களும் பண்ண மாட்டிங்க.. உதவி செய்ரவங்களையும் இப்படி கேவல படுத்துவிங்க... இங்க கருத்து சொன்னவங்க எத்தன பேர் மத்தவங்களுக்கு உதவி பண்ணிருக்கிங்க.. கொஞ்சம் யோசிச்சு கருத்து சொல்லுங்க நண்பர்களே........
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
16-ஆக-201216:47:19 IST Report Abuse
K.Sugavanamஎல்லாம் உங்கள மாதிரிதான்.நீங்க ஆதரவா பேசறீங்க,காரணம் உங்களுக்கு தான் தெரியும்.அவங்க எதிர்த்து பேசறாங்க,அது அவங்களுக்குதான் தெரியும்.ஆமா கேப்டன் கொஞ்சம் நல்ல அளவு சரியான குல்லா போட்டுக்கிட்டு இருக்கலாமே."பாவர்ச்சி"குல்லா மாதிரி இருக்கு....
Rate this:
Share this comment
K Gopi Nathan - Gingee,இந்தியா
16-ஆக-201217:23:59 IST Report Abuse
K Gopi Nathanபிரதிபலன் எதிர்பாராமல் செய்வதுதான் உதவி நண்பரே, இவர் உஅதவி செய்யவில்லை கடன் கொடுக்கிறார், புரியவில்லையா விரலை கொடுத்து உரலை இழுக்க பார்கிறார். என்னை ஒருமுறை ஆட்சி கட்டிலில் அமரசெய்யுங்கள் என்கிறாரே தெரியவில்லையா? உமக்கு. அவர்கள் கொள்ளை அடித்து கொழுதுவிட்டர்கள் கொஞ்சம் நான் கொள்ளை அடித்து விட்டதை பிடிக்கிறேன் என்று ஊர் ஊராக சென்று மேடை நாடகம் நடத்துகிறார். உண்மையாகவே உதவி செய்கிறார் என்றால் அவருக்கு விளம்பரம் தேவை இல்லை. இவர் இப்போது உதவி செய்யவில்லை உதவி என்ற பெயரில் அடுத்த தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கிறார். பால் விலை, மின்சார கட்டணம் மற்றும் பஸ் கட்டணம் என்ற பழைய பல்லவியே பாடிக்கொண்டு இருக்கிறார் இந்த விலை ஏற்றம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை பிற மாநிலத்தோடு ஒப்பிடுகையில் தமிழ் நாட்டில் மேற்கூறிய அனைத்து விலைவாசியும் மிகவும் குறைவுதான். உங்களுக்கு தமிழ் நாடு முன்னேறவும் வேண்டும் அனால் விலைவாசியும் ஏற கூடாது. வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று சொல்லப்படும் குஜராத்தில் சென்று பாரும் அங்கே கட்டணங்கள் எப்படி என்று தலை சுற்றிவிடும். உங்களுக்கெல்லாம் மின்சாரம் 24 மணி நேரமும் வேண்டும் மின்கட்டணமும் ஏற்ற கூடாது. உங்க விஜராசாவை கொஞ்சம் வடநாட்டுல வந்து ஒரு பாத்து நாலு தங்கிட்டு போக சொல்லுங்க அப்பா தெரியும் அவருக்கு தமிழ் நாட்டின் நிலை என்னவென்று. தமிழ் நாட்டுல கல்வி பின்தங்கி உள்ளது என்றாரே, தமிழ் நாடு கல்வில இந்திய அளவுல எத்தனாவது இடத்துல இருக்குனு அவருக்கு தெர்யுமா? சும்மா சினிமாவுல புள்ளிவிவரத்த இயக்குனர் எழுதி கொடுத்து படிச்சிட்டா போதாது. உண்மை நிலவரம் தெரிஞ்சு பேசணும். சும்மா ஊர் ஊரா சென்று பாமர மக்களை யாமற்றும் வேலை நிறுத்த சொல்லுங்கள். ...
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
16-ஆக-201214:40:36 IST Report Abuse
ram prasad அப்போ ஏழு கோடி மக்களுக்கேற்றவாறு தங்க தட்டு வாங்கினால் போதும் ஜெ விடம் கூட்டணி சேர எவ்வளவு வாங்கினீர் ? ஜெ வை குறை சொல்லுமுன் அவர் ஆதரவால் பெற்ற MLA பதிவியை ராஜினாமா செய்ய திராணி இருக்கா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை