நீதித்துறையை விமர்சித்த மம்தாவுக்கு சட்ட நிபுணர்கள் கடும் கண்டனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: நீதித்துறையை விமர்சித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய பேச்சுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மேற்கு வங்க சட்டசபையின் ஆண்டு விழாவையொட்டி, கோல்கட்டாவில், நேற்று முன்தினம் நடந்த விழாவில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:


சாதக தீர்ப்பு: இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சட்டசபையில், இதை கூறுவதற்கு எனக்கு வருத்தமாக உள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற விசாரணை கமிஷன்களால் எந்த பயனும் இல்லை. அதிகாரிகளை அழைத்து பேசுவதுடன் சரி.


கண்டனம்: இதை நான் கூறியதற்காக, என் மீது, அவதூறு வழக்கு தொடரக் கூடும். சிறையில் கூட அடைப்பர். ஆனாலும், இதை, எங்காவது ஒரு இடத்தில் கூறித் தான் ஆக வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசியிருந்தார். மம்தாவின் இந்த பேச்சுக்கு, அரசியல் கட்சி தலைவர்களும், சட்ட நிபுணர்களும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


சரியல்ல: பா.ஜ., மூத்த தலைவர் பல்பீர் புஞ்ச் கூறுகையில், ""நீதித்துறைக்கு எதிராக, முதல்வர் பொறுப்பில் உள்ள ஒருவர், கேள்வி எழுப்புவது, சரியான நடவடிக்கை அல்ல. நீதித்துறையை குறை கூறும் பட்சத்தில், அதற்கு தேவையான ஆதாரங்களை, அவர் சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான, முகமது சலீம் கூறுகையில், ""முதல்வர் என்ற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் மம்தா பானர்ஜி, சட்டசபைக்குள்ளேயே, நீதித்துறையை விமர்சித்து பேசியது, கண்டனத்துக்குரியது. நீதித்துறை மட்டுமல்ல, அனைவருக்குமே, இதுபோன்ற நெருக்கடியை ஏற்படுத்துவது, அவருக்கு வாடிக்கையாகி விட்டது,'' என்றார். மூத்த வழக்கறிஞர் சொலி சொராப்ஜி கூறுகையில், ""மம்தா, இதுபோன்ற முதிர்ச்சியற்ற வார்த்தைகளை பயன்படுத்துவார் என, நான் எதிர்பார்க்கவில்லை,'' என்றார். மூத்த வழக்கறிஞர்களும், மம்தா பேச்சுக்கு, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (46)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ulagarasan - Kolkatta,இந்தியா
16-ஆக-201219:14:45 IST Report Abuse
Ulagarasan மம்தா அவர்கள் கூறியது மிகவும் சரியே. ஜாமீன் வழங்க கோடி கோடி பணம் பெற்ற நீதிபதி இப்போது சிறையில். ஒருவரல்ல இருவர். வைப்பு நிதி பணத்தை தன் வங்கிக் கணக்கில் போட்ட நீதிபதி தீவிரவாதிகளுடன் தொலை பேசியில் பேசிய நீதிபதி கொடுங்கோலை செய்தாலும் அது ரேறேஸ்ட் அல்ல என்று மிகவும் மிதமான தண்டனை இது போல் எத்தனை எத்தனையோ செய்திகள் வெளியில் வராமல் தங்கி விடுகின்றன என்று நினைக்கக் கூடிய வகையில் நீதித் துறையில் ஊழல் தலை விரித்தாடுகிறது. இதை யாராவது சொன்னாள் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். மெய்யை பொய்யாகவும் பொய்யை மெய்யாகவும் சித்தரிக்கும் இவர்கள் பிழைப்பு ச்சே
Rate this:
Share this comment
Cancel
Abuyafanaapm - jeddah,சவுதி அரேபியா
16-ஆக-201216:44:55 IST Report Abuse
Abuyafanaapm மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதில் என்ன தவறு இருக்கிறது. பணத்துக்காக ஜாமின் கொடுத்த நிதிபதி இலலையா? இந்த செய்தி வெளியில் வந்தது, வெளியில் வராதது இன்னும் எததனை உண்டோ? ஒரு முறை கோர்ட் படி ஏறிப்பார்த்தால் தெரியும், கோர்ட், கேஸ், நீதி, நீதிபதி இவர்களைப் பற்றி ஒரு முறை சென்று வெளியில் வந்து விட்டால் மறுபடி செல்லாமல் விட்டுக் கொடுக்கவும், சமாதானமாகப் போகவுமே மனம் வரும். ஆனால் எனக்கு வெகு நாளாகவே ஒரு சந்தேகம், கீழ் கோர்டடில் தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு வழக்கு மேற்கோட்டில் ரத்து செய்யப்படுகிறதே அது எபபடி? ஏன்? இரண்டு கோர்ட்டில் உள்ள நீதிபதிகளும் படிக்கும் சட்ட புத்தகம் வேறு வேறா?
Rate this:
Share this comment
Cancel
Rajasekar A - chennai,இந்தியா
16-ஆக-201216:13:21 IST Report Abuse
Rajasekar A மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நீதித்துறை தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தாமதமான தீர்ப்பு தண்டனையை விட கொடுமையானது
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
16-ஆக-201216:06:20 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar கூச்சல் தலைவர்கள் நீதிமன்றம் - அவமதிக்க கூடாது - சட்டத்தை அறிந்து .., மக்கள் பிரச்னை தீர்க்க சட்டம் பார்த்து இயற்ற வேண்டும் - இது தான் நடைமுறை - அல்லது வக்கீலாக வாதட வேண்டும் எல்லா தலமுறை அறிந்திட வேண்டும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
16-ஆக-201214:53:24 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. மம்தாவின் இந்த கருத்து, தன்னை விமர்சனம் செய்து, கார்டூன் போட்டவரை, கைது செய்து வழக்கு போட்ட காவல்துறையினருக்கு, அபராதம் விதித்த நீதிபதிகளை பார்த்து, பாதுகாப்பான இடத்தில இருந்து சொன்ன வார்த்தைகள்...மற்றபடி...நீதித்துறையின் மீதுள்ள ஆதங்கத்தால் வந்ததல்ல இவை..என்ன சொல்வது...பொறுமைக்கு பெயர்போன பெண்கள்...அகங்காரத்தால் ஆடுகிறார்கள்...சகித்து தான் ஆகவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
16-ஆக-201213:55:27 IST Report Abuse
jaikrish பொம்பளைங்க ஆட்டம் தாங்க முடியலப்பா...வீட்டுல..வீட்டுல...
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
16-ஆக-201213:54:35 IST Report Abuse
Devanand Louis மம்தாக்கு எப்படி பேசவேண்டும் என்று தெரியாது அதனால்தான் இப்படி பேசி இருக்கிறார் அரசியல் நாகரீகம் கொஞ்சம் கம்மிதான் அவர்க்கு
Rate this:
Share this comment
Cancel
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
16-ஆக-201213:51:28 IST Report Abuse
Desabakthan தீதி ரொம்பவே துணிவானவர். ஒரு சில என்று கூறியதில் தவறில்லை என்பது என் கருத்து. ஒட்டு மொத்த நீதி துறை என்று குதிக்க வேண்டாம். மூத்த வழக்கறிங்கர்களே உங்கள் சட்டை பையில், இல்லை இல்லை நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் ஊழல் நடக்க வில்லை அந்த படிகளில் என்று? நானும் படியேறி கொஞ்சம் வேதனை அனுபவித்தவன் தான். தவறை சுட்டி காட்டினால் திருத்தி கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Navas ahamed Shahib - riyadh,சவுதி அரேபியா
16-ஆக-201213:23:16 IST Report Abuse
Navas ahamed Shahib இந்தியாவில் மம்தா ஒருவர் தான் நல்ல உள்ளம் கொண்ட அரசியல்வாதி(மம்தா - பொருள் - உயர்ந்த மனம் உடையவர் ), அவர்கள் நாட்டின் பிரதமராக வந்தால் நாட்டிற்கு வளர்ச்சி ஏற்படுகிரோதோ இல்லியோ, ஆனால் நாடு அமைதியாகவும், சுகந்திரமாகவும் மக்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும். மற்றபடி மத திவிரவாதிகோ , அல்லது இந்திய ஒருபிரிவனற்கு தான் சொந்தம் என்று சொல்லும் தலைவருக்கோ , அல்லது அரசியல் அனுபவம் இல்லாத வாரிசுகளையோ பிரதமர் ஆக்கினால் ,கட்டாயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் .
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-ஆக-201211:34:13 IST Report Abuse
villupuram jeevithan எல்லாத் துறை ஈரல்களும் கெட்டுவிட்டன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்