Drunkers angry over TASMAC workers | "குடிமகன்'கள் கடுப்பு; அரசுக்கு வருவாய் இழப்பு: "சஸ்பெண்ட்' ஆனாலும் அடங்கவில்லை ஆட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"குடிமகன்'கள் கடுப்பு; அரசுக்கு வருவாய் இழப்பு: "சஸ்பெண்ட்' ஆனாலும் அடங்கவில்லை ஆட்டம்

Updated : ஆக 17, 2012 | Added : ஆக 15, 2012 | கருத்துகள் (14)
Advertisement

ஏராளமான ஊழியர்களை, "சஸ்பெண்ட்' செய்த பின்னும், தமிழகத்தில் மதுக் கடைகளில், முறைகேடுகள் தொடர்கின்றன.


தமிழகத்தில் உள்ள, "டாஸ்மாக்' கடைகள் பெரும்பாலானவற்றில், "பார்'களும் செயல்படுகின்றன. எப்போதும் இல்லாத வகையில் இப்போது, இந்த கடைகளின் மீது, புகார்கள் அதிகரித்து வருகின்றன.


அதிரடி சோதனை: மதுக்கடைகளில், மிக அதிக விலைக்கு மது வகைகள் விற்கப்படுவதாக, புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து, உயரதிகாரிகள் பலர், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இத்தனை நடவடிக்கைக்குப் பின்னும், மதுக்கடைகளில் நடக்கும் முறைகேடுகள் தொடர்கின்றன. புதுப் புது முறைகேடுகள் தலை தூக்குவதாக, புகார்கள் கிளம்பியுள்ளன. அரசு நிர்ணயித்த விலையை விட, அதிக விலைக்கு மது பானங்கள், வழக்கம் போல் விற்கப்படுகின்றன.


புது புகார்: குறைந்த விலை சரக்குகளை மட்டும், வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து விட்டு, விலை உயர்ந்த மது ரகங்களை, அருகிலுள்ள ஓட்டல், "பார்'களுக்குக் கொடுத்து விடுகின்றனர் என்பது, புதுப் புகார். அரசு விதித்த கூடுதல் வரி காரணமாக, ஓட்டல் "பார்'களுக்கு, இதே சரக்கு வகைகள் விற்கப்படுகின்றன என்பதே, இதன் பின்னணி. இதுபற்றி, "டாஸ்மாக்' உயரதிகாரிகள் விசாரித்தால், உண்மை வெளிவரலாம். இது மட்டுமின்றி, ஒரு சில கடைகளில் நேரடியாக விற்கப்படாத மது வகைகள், அதே கடைகளில் இயங்கும், "பார்'களில் மட்டும் கிடைப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. உயர் ரக மது வகைகளை, குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டும் அனுப்புவதற்கு, "டாஸ்மாக்' அலுவலகத்திலேயே ஏற்பாடு நடப்பதாகவும், "டாஸ்மாக்' வட்டாரம் கூறுகிறது.


முற்றுப்புள்ளி தேவை: இந்த முறைகேடுகளால், குடிப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மை என்றாலும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது, கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், அதிகாரிகள் அதிரடியில் இறங்கினால் மட்டுமே, இத்தகைய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழக அரசு விரைவில் மதுக்கடைகளை மூடப்போவதாகப் பரவி வரும் வதந்தியும், முறைகேடுகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. வேலை போய் விடுமோ என்ற அச்சத்திலேயே, புதுப்புது முறைகேடுகளை அரங்கேற்றி, வேக வேகமாக சம்பாதிக்கும் முயற்சியில், "டாஸ்மாக்' ஊழியர்கள் இறங்கியிருப்பதாக, அவர்களில் சிலரே ஒப்புக் கொள்கின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.sridhar - pkk,இந்தியா
19-ஆக-201211:15:16 IST Report Abuse
p.sridhar good business
Rate this:
Share this comment
Cancel
moorthy - madurai,இந்தியா
17-ஆக-201200:35:23 IST Report Abuse
moorthy பரமக்குடி-ல் ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் 10 ரூ ,பிளாக் விற்பனை நடைபெறுகிறது . கூலிங் பீர் எக்ஸ்ட்ரா 30
Rate this:
Share this comment
Cancel
moorthy - madurai,இந்தியா
17-ஆக-201200:30:44 IST Report Abuse
moorthy அரசு விலையை விட பாட்டிலுக்கு 5 ,10 என டாஸ்மாக் கடையில் விற்பனை நடக்குது, கவர்மேண்டில் அதிக சம்பளம் டாஸ்ம்ர்க் ஊழியருக்குதான் . ஒரு நாள் வருமானம் எவ்வளவு யப்பா ? அத்காரிக்கு கமிசன் யுண்டு .
Rate this:
Share this comment
Cancel
karthi - udumalpet,இந்தியா
16-ஆக-201218:01:49 IST Report Abuse
karthi arasu எதனை attru நடத்தினாலும் ஊழல் இல்லாமல் irunthal சிறப்பான தமிழகமாக uruvagum
Rate this:
Share this comment
Cancel
Ram - Panavai,இந்தியா
16-ஆக-201213:56:02 IST Report Abuse
Ram நாம கேட்ட சரக்கு கிடைத்தெல்லாம் அந்த காலம்...அவர்கள் கொடுத்ததை குடிக்க வேண்டும் இந்தக்காலம்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
16-ஆக-201213:46:01 IST Report Abuse
ஆரூர் ரங தினமலர்ல டாஸ்மாக் சிறப்புப் பகுதின்னு தினமும் வெளியிடலாம். குடிமக்கள் தேடித் தேடி /&39பார்/ த்துப் படிக்காமல் சைடு டிஷாக நினைக்காமல் தவறாமல் படிப்பர்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-ஆக-201211:52:51 IST Report Abuse
villupuram jeevithan அரசுக்கு வருவாய் இழப்பு, இது தான் கண்ணுக்கு தெரிகிறது??.
Rate this:
Share this comment
Cancel
dravida Aryan - thanjavur,இந்தியா
16-ஆக-201208:48:03 IST Report Abuse
dravida Aryan கழகத்தின் தமிழ் "குடி" கடை திட்டம் அபார வருவாய் பிடி திட்டம் தலைமுறை பல கொண்டான் திட்டம்
Rate this:
Share this comment
Cancel
ganstan - coimbatore,இந்தியா
16-ஆக-201207:36:14 IST Report Abuse
ganstan அதிகாரிகளும் அவரவர் பங்குக்கு மதுபான கம்பனிகளிடம் லஞ்சம் வாங்கிகொண்டு தரம் குறைந்த மதுவை அதிகமா விற்று கொடுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஆக-201206:13:18 IST Report Abuse
Lion Drsekar அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி செலவு செய்வதை விட அருகில் உள்ள பாண்டிச்சேரிக்கு அனுப்பி அங்கு நடைபெறும் வியாபார முறையைக் கற்றாலே போதும் அரசுக்கும் வருமானம், குடிமகன்களும் ஆனந்தமாக இருப்பார்கள்., வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை