"விக்கி லீக்ஸ்' நிறுவனர் அசாஞ்சை கைது செய்ய லண்டன் போலீஸ் முடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லண்டன்: "விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், ஈக்வடார் நாட்டு தூதரகத்தை விட்டு வெளியே வரும் போது, கைது செய்ய லண்டன் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர், ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, சுவீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். சுவீடன் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட் இவருக்கு, ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, சுவீடன் கோரியது. இதை எதிர்த்து, அசாஞ்ச் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் ஏழு நீதிபதிகளில், ஐந்து நீதிபதிகள், அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, அசாஞ்ச், மேல் முறையீடு செய்தார். ஆனால், இவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, அசாஞ்சை கைது செய்து, சுவீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்காக, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில், கடந்த, ஜூன் 19ம் தேதி தஞ்சம் புகுந்தார். இதுகுறித்து, அசாஞ்ச், முன்பு குறிப்பிடுகையில், "சுவீடனுக்கு என்னை நாடு கடத்தினால், அமெரிக்காவிடம் நான் ஒப்படைக்கப்படுவேன். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக, எனக்கு, அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது' என்றார். அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க, ஈக்வடார் அதிபர் ரபேல் கொரியா, தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ஈக்வடார் அதிபர் ஒப்புதல் அளித்தாலும், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தை விட்டு அசாஞ்ச் வெளியே வரும் போது அவர் கைது செய்யப்பட உள்ளார்.

"அசாஞ்சை கைது செய்யாமல், பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க முடியாது' என, போலீசார் தெரிவித்துள்ளனர். ஈக்வடார் தூதரகத்துக்குள் புகுந்து அசாஞ்சை கைது செய்ய, போலீசார் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. "ஈக்வடார், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இல்லை. எனவே, பிரிட்டன் எங்களை நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது' என, ஈக்வடார் அரசு தெரிவித்துள்ளது. அசாஞ்சை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், ஈக்வடார் தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தினர். இதனால், போலீசாருக்கும், அசாஞ்ச் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajaram avadhani - Tiruchy,இந்தியா
17-ஆக-201209:29:37 IST Report Abuse
rajaram avadhani ஜூலியன் அசஞ்சே அவர்களே உங்களுக்கு தெரியாத ரகசியங்களே இல்லை என்ற நிலைமையில், எங்கள் நாட்டின் கருப்பு பணத்தை ஸ்விஸ் மற்றும் பல்வேறு நாடுகளில் பதுக்கி வைத்தவர்களின் பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jeevanantham - Dungun,மலேஷியா
17-ஆக-201205:46:02 IST Report Abuse
Jeevanantham பிரிட்டிஷ் அரசை எதிர்த்து அனைவரும் போராட்டம் நடத்தவேண்டும், மனித நேயம் ஜனநாயகம் எங்கே போய்விட்டது? உலகத்தில் உள்ள அணைத்து பத்திரிக்கைகளும் இவருக்கு ஆதரவாக களமிரங்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kudimagan - chennai,இந்தியா
17-ஆக-201205:08:50 IST Report Abuse
kudimagan ஒன்னு கற்பழிப்பு வழக்குல இருந்து வெளிய வரணும் .... இல்ல அமெரிக்க கிட்ட மாட்டிகிட்டு அங்க பாணின தப்புக்கு மன்னிப்பு கேட்கணும் ....இல்லைனா சாக வேண்டியது தான் .... எவ்ளோ நாள் இப்டி ஓடி ஒழிய முடியும் ?
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
17-ஆக-201203:11:32 IST Report Abuse
Srinath மேற்கு நாடுகளின் யோக்கியதைக்கு ஒரு சான்று இந்தச் சம்பவமே. ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் இவர்கள் தாங்கள் பாதிக்கப்படும் பொது ஜனநாயகத்தை புதைத்து விட்டு, தங்களது சுயரூபத்தைக் காட்டுவது வாடிக்கையே. பல்லாண்டுகள் முன்பு, அமேரிக்கா தனது எதிரிகளை வீழ்த்துவதற்கு மனித உரிமை ஆயுதத்தைப் பயன்படுத்தியதும் புதிதல்ல. கோட்-சூட் போட்டவன் அனைவரும் கண்ணியவான் அல்ல, அவனது கருப்பு மனத்தை மறைப்பதற்காகவே அந்த உடையைப் பயன்படுத்துகிறான்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
17-ஆக-201201:36:14 IST Report Abuse
தமிழ் சிங்கம் குறைந்தபட்சம் ஈகுவடார் அரசுக்கு ஆவது முதுகெலும்பு உள்ளதே என்று பெருமைப்பட வேண்டிய விஷயம். அசான்ஜ் மீது போடப்பட்ட போலி கற்பழிப்பு புகாரை வைத்து அவரை கைது செய்து அமெரிக்காவிற்கு கடத்த நினைத்த ஸ்வீடன், பிரிட்டின் போன்ற நாடுகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்