திருச்சி: ""வரும், 2020ம் ஆண்டில் இந்தியா சார்பில், நிலவில் மனிதன் கால் பதிக்கும் ஆயத்தப்பணிகளில், "இஸ்ரோ' விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்,'' என்று தலைமை நெறியாளர் சிவதாணு பிள்ளை பேசினார்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, இயற்பியல் துறை சார்பில், கல்லூரியின் முன்னாள் இயற்பியல்துறை மாணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் அறக்கட்டளை சொற்பொழிவு நேற்று நடந்தது.
அதில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தலைமை நெறியாளரும், "இஸ்ரோ' விஞ்ஞானியுமான சிவதாணு பிள்ளை பேசியதாவது:உலகின் சக்தி வாய்ந்த,. பி-5 நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.இந்தியாவை மேம்படுத்த, பலப்படுத்த, 2020ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர், 2013ம் ஆண்டு செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் திட்டம் துவங்குகிறது. 2020ம் ஆண்டில், இந்தியா சார்பில் நிலவில் மனிதன் கால் பதிக்கும் ஆயத்தப்பணிகளில், "இஸ்ரோ' விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது, 4,780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 2020ம் ஆண்டில், 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டிய அளவுக்கு, நமக்கு தேவைகள் உள்ளன. உலகத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தோரியம் இந்தியாவில் உள்ளது.
தோரியம் கனிமத்தை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்ய, "பாஸ்ட் பீரிட் ரீயாக்டர்ஸ்' (கொதிகலன்கள்) மூலம் சோடியத்தை சுத்திகரித்து மின்சக்தியை தயாரிக்க வேண்டும். நானோ தொழில்நுட்பத்தில் அதிவேகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வருங்காலத்தில் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு பொருட்களை தயாரிக்கப்படும். குறிப்பாக, நானோ தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை மூளை, வருங்காலத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பமாக திகழும்.ஆரம்பக்கட்டத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டையிட்டு கொண்டனர். பின்னர் நிலத்துக்காக, முதல், இரண்டாம் உலகப்போரில் ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். வருங்காலத்தில் விண்வெளியில் சாட்டிலைட் நிறுவ, "சைபர் வார்' சண்டை நடக்கும்.இந்தியாவின் மனிதவளம் எந்த நாட்டிலும் இல்லை. 35 வயதுக்குட்பட்ட, 580 மில்லியன் இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர். இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகவும், புதிய சிந்தனையோடும் பல திட்டங்களை தீட்டவேண்டும்.சிறிய இலக்கு என்றும் எளிதாகவே இருக்கும். சிறந்த இலக்கு என்பது பிரம்மாண்டமாக இருக்கும். வார்த்தைகளால் வேலை செய்யக்கூடாது. கடின உழைப்பினால் வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.வாழ்க்கை என்பது பிரச்னை நிறைந்தது. பிரச்னைகளை புரிந்து கொண்டு எதிர்கொள்ளவேண்டும். வாழ்நாள் முழுவதும் பிரச்னைகளை எதிர்கொண்டு, அவற்றை வெற்றி கொள்வதே சிறந்த வாழ்க்கை.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், கல்லூரிச்செயலாளர் ஜான்பிரிட்டோ, முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை, கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெலிங்டன் பெர்னாட்டோ, இயற்பியல் துறை தலைவர் விக்டர் வில்லியம்ஸ், பேராசிரியர் பேட்ரிக் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Indians are good in science . If wanted we can even go to mars to put out flag there. Hats off to ISRO . But when pak makes an tunnel to to india and china crosses border we always come to know very lately . Cant our experience in science be put in good efforts to safe guard our home?? There is lot we would do to support army . ISRO pls do that first then we can look at moon . No one is going to take the moon away.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.