Advertisement
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2012,23:37 IST
கருத்துகள் (54)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

பெங்களூரு: "கர்நாடகாவில் தங்கியுள்ள, ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் மீது, தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என்ற வதந்தி பரவியதால், ஏராளமானோர் பெங்களூருவில் இருந்தும், அந்த மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், தங்கள் மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். இந்த வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியதால், அங்குள்ள வட மாநிலத்தவர் மத்தியிலும் பீதி உருவானது. அசாம் மாநிலத்தில் நடந்து வரும் இனக் கலவரத்தைக் கண்டித்து, மும்பையில் நடந்த போராட்டத்தில், இருவர் கொல்லப்பட்டனர். புனேயில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த, 10 மாணவர்கள் தாக்கப்பட்டனர். இம்மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் கல்லூரி மாணவர்கள். சிலர் ஐ.டி., நிறுவனங்களிலும், சிலர் கட்டுமான நிறுவனங்களிலும் பணி செய்கின்றனர். இவர்கள் மீது தாக்குதல் நடக்கலாமென்ற வதந்தி காரணமாக, புதன் கிழமை மாலையில் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் அவசரம் அவசரமாக சொந்த மாநிலம் செல்ல, பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். வழக்கமாக புதன் கிழமையன்று, இரவு, 11.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு - கவுகாத்தி ரயில் முழுவதுமாக நிரம்பி விட்டதால், மேற்கொண்டு டிக்கெட் வழங்க ரயில்வே நிர்வாகம் மறுத்தது. கூட்டத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் பின்னர் ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், தகவலறிந்து பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷன் வந்த துணை முதல்வர் அசோக், வடகிழக்கு மாநிலத்தினரை சந்தித்து, "தேவையான பாதுகாப்பு அளிக்க, போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார். தாங்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள வீட்டு உரிமையாளர்கள் தான், எங்களை காலி செய்யும்படி வற்புறுத்துகின்றனர்; சில சமூக விரோதிகளும் மிரட்டுகின்றனர் என்று அவர்கள் புகார் கூறினர். இவர்களில் பெரும்பாலானோர் பெங்களூருவில் கோரமங்களா, நீலச்சந்திரா, ஈஜிபுரா போன்ற பகுதிகளிலும், சுற்றுப்புறங்களிலும் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை நேரடியாக போன் மூலம் தொடர்பு கொண்டு பேசும் போது, "கர்நாடகாவில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தினர் உயிருக்கும்,

உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். கர்நாடகா போலீஸ் துறையும் பூரணபாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தது. இருப்பினும், சிறப்பு ரயில்கள் மூலம் ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர். நேற்று முன்தினம் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள், ரயில்வே ஸ்டேஷனில் படுத்திருந்தனர். நேற்று காலையிலிருந்து பெங்களூருவில் வசிக்கும் பல அசாம் மாநிலத்தினர், மூடை முடிச்சுகளுடன் பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு படையெடுத்தனர். பகலில், அசாமுக்கு ரயில் இல்லாததால், ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், ரயில்வே ஸ்டேஷன் வந்து அசாம் பயணிகளை சந்தித்து, "யாரும் பெங்களூருவை விட்டு வெளியேற வேண்டாம்; தேவையான பாதுகாப்பை அரசு கொடுக்கும்' என்றார். ஆனாலும், அசாம் பயணிகள் கேட்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்பினர், இஸ்லாமிய அமைப்பினர், கன்னட அமைப்பினர் பலர், ரயில்வே ஸ்டேஷன் வந்து பயணிகளை சமாதானப்படுத்தி, பெங்களூருவை விட்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் அசோக், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், முதல்வர் ஷெட்டர் கூறியதாவது: பெங்களூருவில் அனைத்து மாநிலத்தவரும் வசிக்கின்றனர். இதுவரை யாருக்கும் பிரச்னை ஏற்பட்டதில்லை. அசாம், மணிப்பூர் மாநிலத்தினர் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். போன், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலம் அவர்களுக்கு

Advertisement

தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வசிக்கும் அசாம், மணிப்பூர் மாநிலத்தவர் பயப்படத் தேவையில்லை. தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். தவறான தகவல் கொடுத்தவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பல்வேறு மதத் தலைவர்கள், வட மாநிலத்தவருடன், கர்நாடக போலீஸ் டி.ஐ.ஜி., தன் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு மாநிலத்தவர், பெங்களூருவை பொறுத்தவரை மிகவும் பாதுகாப்பாகவே உள்ளனர். சில நேரங்களில் அவர்களுக்குள்ளாகவே எழும் மோதல்களைத் தவிர, பிற இனத்தவர்களால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். "வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படலாம்' என்ற வதந்தி, நேற்று ஆந்திராவின் ஐதராபாத்திற்கும் பரவியது. அதேநேரத்தில், தமிழகத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஓட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், இங்கு அது போன்ற பீதி எதுவும் பரவவில்லை.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (54)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somayaji Subramanyam Rajagopalan - New York,யூ.எஸ்.ஏ
18-ஆக-201201:54:38 IST Report Abuse
Somayaji Subramanyam Rajagopalan இந்தியாவின் பொருள் ஆதார வளர்ச்சி,மேல் நாடுகளில் இந்தியாவுக்கு உள்ள நல்ல பெயர் இவைகள் பெரிதாக பாதிக்க படும். நம் நாட்டின் ஒற்றுமை இப்பொழுது மிகவும் அவசியம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
S T Rajan - Ettayapuram ,இந்தியா
17-ஆக-201219:07:06 IST Report Abuse
S  T Rajan இது போன்ற காரியங்களில் ஈடுபடும் அயோக்கியர்களுக்கு கடும் தண்டனை தரவேண்டும்.....நாம் எல்லோரும் ஒரே தாயின் பிள்ளைகள், அதாவது இந்தியத்தாயின் பிள்ளைகள் என்பதை உணரவேண்டும்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Yogeshwaran - Chennai,இந்தியா
17-ஆக-201218:49:26 IST Report Abuse
Yogeshwaran இதே போல பெங்களூரில் தமிழர்களுக்கும் பிரச்சினை வரும் போது சொல்வார்களா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rajkumar Sakthivelu - coimbatore,இந்தியா
17-ஆக-201218:24:25 IST Report Abuse
Rajkumar Sakthivelu ஆடிக்காத்துல அம்மியே பறக்கும்னு பழமொழி இருக்கு .... ஆவணி காத்துல அஸ்ஸாமியே பறக்கும்னு இன்னொரு பழமொழி உருவாய்டுமோ ?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
17-ஆக-201215:55:56 IST Report Abuse
s.r.ramkrushna sastri தற்போது ஹைதரபாதில் எந்த வன்முறையும் இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
17-ஆக-201215:41:11 IST Report Abuse
A R Parthasarathy தங்கை ராஜாவின் கருத்து ஏற்புடையது தான் ஓரளவிற்கு. நாட்டில் ஒற்றுமை thevai என்பது மட்டுமே ஏற்புடையது மிகபெரிய மதகலவரம் நடக்க திட்டமிட்டிருபதாக கருதவோ, அடுத்த தேர்தலை மனதில் வைத்தோ இவை நிகழ்வதாக தெரியவில்லை. இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. மேலும் எந்த சம்பவமும் நிகழாமலே வடகிழக்கு மாநிலத்தவர்கள் வதந்திகளை நம்பி ஒடனினைபது சரியாகபடவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய அரசு அதை செய்யத்தவறி இருந்தால் நீங்கள் சொல்வது சரி என்று ஒப்புக்கொள்ளலாம். வீணாக அரசியல் பண்ணி பிரச்சனைகளை பெரிது படுத்தத்தீர்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Gajini Muhd - Chennai,இந்தியா
17-ஆக-201214:32:00 IST Report Abuse
Gajini Muhd அட மனிதனாக பிறந்து மனிதனையே அழிக்கும் மடமை இந்த யுகத்தில் இதற்க்கு தீர்வு இல்லை இந்தியர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று வீணாக தேசிய கீதம் பாடுகிறார்கள் அவரவர் மனதில் ஆயிரம் கத்திகள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
17-ஆக-201213:56:39 IST Report Abuse
Sathyamoorthy இங்கே பெங்களுருவில் சில பகுதிகளில் மட்டுமே அப்படி ஒரு நிலை உள்ளதாக கருதலாம். ஆனால், இது ஒரு வதந்தியாக மட்டுமே பாவிக்கபடவேண்டும்... இங்கே தமிழனை மட்டும்தான் எதிரியாக பார்ப்பார்கள். மற்றவரை ஒன்றும் தொல்லை செய்ய மாட்டார்கள்... முழுக்க முழுக்க மத்திய அரசின் அரசியல் நாடகம் தான் இது...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-ஆக-201213:38:57 IST Report Abuse
Nallavan Nallavan இந்த விதமான வதந்திகளைப் பரப்புவதன் மூலம் பெரும்பான்மையினர் அச்சறுத்தல் கொடுப்பவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள் என்ற எண்ணத்தைப் பரப்ப முயற்சி நடக்கிறது வதந்தி பரவிய இடங்களை வைத்து இதை ஊகிக்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
17-ஆக-201213:25:18 IST Report Abuse
umarfarook தமிழ் நாட்டிலும் பரவி விட்டது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
17-ஆக-201218:09:35 IST Report Abuse
A R Parthasarathyசென்னையிலே இருக்கிற எங்களுக்கு தெரியாமல், திண்டுக்கல் வரையில் பரவிவிட்டதா?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.