Kovail is best corporation in TN: Where is Madurai? | தமிழகத்தில் முதலிடம் கோவை: எந்த இடத்தில் இருக்கு மதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் முதலிடம் கோவை: எந்த இடத்தில் இருக்கு மதுரை

Updated : ஆக 18, 2012 | Added : ஆக 16, 2012 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

மதுரை: சிறந்த மாநகராட்சியாக, தமிழக அரசு சார்பில், கோவை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையின் நிலை "தலை கீழாய்' போய்க்கொண்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக பெரிய மாநகராட்சி என்ற "பெத்த' பெயருக்கு சொந்தமான மதுரை; தன்னிறைவில் இன்னும் "பெரிய கிராமமாகவே' உள்ளது. நிறைவேறாத தேவைகள் ஒருபுறம் இருக்க, என்றும் மறையாத முறைகேடுகளும், ஒரு புறம் தொடர்கிறது. வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாநகராட்சிக்கு, முறைகேடுகள் முட்டுக்கட்டை போடுகின்றன. இவற்றை களைந்ததால் தான், கோவை மாநகராட்சி, முதலிடத்தை பிடித்துள்ளது. வளர்ச்சியில், மதுரைக்கும், கோவைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அடிப்படை வசதியான, சாக்கடை, குடிநீர், ரோடு, தெருவிளக்கு வசதியில் இன்னும் பல வார்டுகள் தத்தளிக்கின்றன. முந்தைய வார்டுகளிலேயே இந்நிலை என்றால், விரிவாக்கத்தில் இணைந்த பகுதிகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை. தேவைகள் தான் இந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால், வரக்கூடிய குற்றச்சாட்டுகள் அதை விட மோசமாக உள்ளது. கடந்த ஆட்சியில், ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தில், பணி நடக்காமலே, ரூ.50 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்த சம்பவம், விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது. அதற்குரிய விசாரணை நடத்ததா என்றால், இதுநாள் வரை இல்லை. அதன் விளைவு, சமீபத்தில், பணி நடக்காமலே ரூ.1.60 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அந்த முறைகேட்டில், முக்கிய அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருக்கும் விஷயம் வெளிவந்ததும், குறிப்பிட்டத் தொகையை திருப்பி செலுத்தியுள்ளனர். காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இது உதாரணம் மட்டுமே. இதுபோல், இன்னும் எத்தனையோ முறைகேடுகள், வெளிவந்தும், வெளிவராமலும் உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், முறைகேட்டில் தான் மதுரைக்கு முதலிடம் கிடைக்கும் போலும். தொலைநோக்கு பார்வையுடன், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மாநகராட்சி நிறைவேற்ற வேண்டும். இதற்கு போதிய நிதியை பெருக்க வேண்டும். கமிஷனர் நந்தகோபால் கூறுகையில்,""வளர்ச்சிப்பணியில் 50 சதவீத இலக்கை அடைந்து விட்டோம். துப்புரவு பணிகள், சிறப்பாக நடக்கிறது. அடுத்த ஆண்டில் மதுரை முதலிடம் பிடிக்கும். கடந்த 7 ஆண்டுகளாக இருந்த தவறான அணுகுமுறையே, கசப்பான நிகழ்வுகளுக்கு காரணமாகும். அவை சீர்செய்யப்படும்,'' என்றார். மேயர் ராஜன்செல்லப்பா கூறுகையில், ""கோவை மாநகராட்சி வளமானது. மதுரைக்கு இன்னும் தேவைகள் உள்ளன. அதை பூர்த்தி செய்யும் பாதையில் பயணிக்கிறோம். முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை, அதிகாரிகள் சிலர் தொடர நினைக்கின்றனர்.

அதை கட்டுப்படுத்தி, வளர்ச்சி பாதைக்கு வழி செய்வோம். அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, அடுத்த ஆண்டு அரசிடம் முதல் பரிசை பெறுவோம்,'' என்றார். அதிகாரிகளே.. .கவுன்சிலர்களே...வார்டுகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள், வருமானத்தை(மாநகராட்சியின்) பெருக்குவதில் ஆர்வம் செலுத்துங்கள்; பொதுமக்களின் வசதியை கருத்தில் கொள்ளுங்கள். அப்போது, அடுத்த முறை மதுரைக்கும் கிடைக்கும் தமிழக அரசின் பரிசு.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilar Neethi - Chennai,இந்தியா
17-ஆக-201215:59:37 IST Report Abuse
Tamilar Neethi இதுக்கு காரணம் இருக்கு. கோவை தமிழர்வசம் இல்லை . மலயாளிகள் வசம் போய்விட்டது பெரும்பகுதி, மீதி மார்வாடி வசம் . இருந்த ஆலைகள் எல்லாம் மூடி கிடக்கு. . தமிழர்கள் கோவை நகரை சுத்தி உள்ள கிராமங்களில் விவசாயம் செய்துகொண்டு நீரை தேடி கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். வளர்சிக்கு வைத்துள்ள குறிஈடு??? யோசிக்க வேண்டும்... அதாவது இருக்கும் நகராட்சிகளில் கோவை சிறந்தது ??? ஆனால் நகரத்தின் எந்த அமசம்களும் கோவை கும் இல்லை . மதுரை அதன் மிகிமை விரிந்து கிடக்கும் நிலபரப்பு , தூங்காமல் உழைக்கும் தன்மை , நேர்மை , பெருவாரியான தமிழர்கள் இப்படி ...அப்புறம் வறண்ட வைகை... சுத்தி வறட்சி... இடப் பெயர்ச்சி - பல பாரம்பரிய வீடுகள் - 5000 ஆண்டு பழமையான நகரம் ... ஒரு கருத்து சொல்வார்கள் - வெளிநாட்டில் நகர அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள, வெளிநாட்டு பயணம் செல்ல காமராஜர் - முதல்வர் அனுமைதி வேண்டி பல பொறியாளர்கள் கேட்டு கொண்டார்களாம் . அதற்கு காராசர் மதுரையை போய் பாருங்கள் வெளிநாட்டை விட நகர அமைப்பு சிறப்பாய் உள்ளது என்றாராம் ...அப்படி பட்ட மதுரை இன்று அரசியல்வாதிகள் , அரசு அதிகாரிகள் லஞ்ச கண் பட்டு இப்படி மதிப்பெண் வாங்குகிறது .... எப்படி நகர வளர்ச்சி பற்றி யோசித்து அறிவிபார்களோ - மெல்ல ஆக்கிரமிக்க அனுமதித்து , நடைபாதை ஆக்கிரமித்து , அடாவடிகளை வைத்து பொது இடத்தை ஆக்கிரமித்து , சட்டம் மீறி கடை வைத்து அப்புறம் களவுகள் கழிவுகள் ஏற்பட வகை செய்து - இல்லாமல் ஆக்கி- திரும்ப சரி செய்யதிட்டம்கொள்ளை மாறி மாறி - ஒரு வளர்ச்சி திட்டம் / வளர்ச்சி வைத்து ஒட்டு கேட்டு , வளர்ச்சி நோக்கி ஆட்சி புரியும் அரசியல் தலைவர்கள் இல்லாமல் - ஜாதி , வன்முறை , இலவசம் சொல்லி ,தேர்தல் காலத்தில காசு கொடுத்தல் இப்படிதான் நல்ல நகரம் நாறி போகும் வந்தேறிகள் குடியிருக்கும் இடம் வளர்ந்து போகும் மெல்ல தமிழன் தன் தலயில் தான் மண்ணை அள்ளி போடும் நிலைமை ... பகுதி அமைச்சர்கள் தான் சொந்த ஊர் வளர்ச்சி பத்தி பேச , நிதி ஒதுக்க CM அனுமதி கேட்கும் காலம் அப்புறம் எப்படி தேர்தெடுத்த MLA , MP தான் பகுதி வளர்ச்சி பத்தி யோசிக்க முடியும் ..வந்தேறிகள் அதிகாரிகள் மூலம் சாதிகிரார்கள் ...அதான் கேள்வி -இப்படி பழமை வாய்ந்த நகரம்கள்-??? முதலிலில் முதல் அமைச்சர் அனுமதி பெறாமல் ஒரு முறை ஏதாவது ஒரு அமைச்சர் ஒரு பொது நிகழ்ச்சில கலந்து கொள்ள முடியுமா???அப்புறம் எப்படி பகுதி மேயர் தான் நகராட்சி வளர்சிக்கு சுயமாய் யோசித்து ,,,,,நல்ல பெயர் எடுக்க முடியும் இப்போது நிதி ஸ்ரீரங்கம் பகுதிக்கு அடுத்து எஞ்சியது நிதி ஒதுக்கும் நிதி அமைச்சர் -ஊகும் அதுவம் OPS மதுரைபக்கம் அப்புறம் எப்படி இப்படி ????
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
17-ஆக-201215:01:26 IST Report Abuse
Rangarajan Pg கோயம்புத்தூர் முதலிடத்தில் இருப்பது எல்லாம் சரி. எப்பொழுது தான் அந்த மேட்டுபாளையம் ரோட்டை முழுவதுமாக போட்டு முடிப்பீர்கள்? அதை சொல்லுங்கள். எப்பொழுது தான் அந்த சாய் பாபா COLONY JUNCTION சரியாகும். அதை சொல்லுங்கள். எப்பொழுது தான் DRAINAGE FACILITY க்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும். அதை கூறுங்கள். எப்பொழுது தான் நிழல் தரும் மரங்களை வெட்டி தள்ளுவது குறையும். அதை சொல்லுங்கள். ஊர் மொத்தமும் ஒரே மண்ணாக இருக்கிறதே. தார் சாலை ஓரங்களில் ஒரு TRACK மொத்தமும் மண் சாலை போல இருக்கிறதே. அதை எப்பொழுது சரி செய்வீர்கள். காந்திபுரம் பஸ் நிலையம் மொத்தமும் அல்லோலகல்லோல படுகிறதே அதை எப்படி சரி செய்வீர்கள். இது மிக சில தான். இன்னமும் ஏராளம் இருக்கிறது. மேம்போக்காக ஒரு சில இடங்களை MAINTAIN செய்து விட்டு இது தான் கோவை. இது நம்பர் ONE என்று கூறி கொண்டால் போதுமா? ஆனால் மதுரையை ஒப்பிடும்போது கோவை நூறு மடங்கு பரவாயில்லை. ஆனால் நம்பர் ONE என்று கூறி கொள்வது டூ மச். வேண்டுமானால் இருப்பதில் நம்பர் ONE என்று எடுத்து கொள்ளலாம். அந்த அளவிற்கு இருக்கிறது மற்ற நகரங்களின் அழகு.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-ஆக-201214:56:53 IST Report Abuse
Nallavan Nallavan மதுரை என்றாலே சங்கம் வளர்த்தது தற்போது நினைவுக்கு வருவதில்லை ஏனோ ஹார்லிக்ஸ் தான் நினைவுக்கு வருது
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
17-ஆக-201214:41:17 IST Report Abuse
Rangarajan Pg மதுரை தானே. வளர்ச்சிக்கு அஞ்சா நெஞ்சனை கேட்டு கொண்டால் அவர் சீரிய திட்டம் தீட்டி, ஆழ ஊடுருவி, பல பல தொலைநோக்கு பார்வை பார்த்து, பல வித கட்டுமான பணிகளை தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை வைத்து மதுரைக்கு கொண்டு வந்து கொட்டி விடுவார். இதை தான் அவர் போன ஆட்சியில் செய்து கொண்டிருந்தார். மதுரையும் ""முதலிடத்தில்"" இருந்தது. ஆனால் மதுரை மக்களின் போதாத காலம், திடீரென ஆட்சி மாறி விட்டது, மதுரை மறுபடியும் கீழ் நிலைக்கு சென்று விட்டது. இதற்கெல்லாம் காரணம் அஞ்சா நெஞ்சனை ஓரம்கட்டியது தான். அவர் ஒருவரால் தான் மதுரையை தூக்கி நிமிர்த்திட முடியும். ஜெயா அவர்கள் ஈகோ பார்க்காமல் ஒரு நடை மதுரை சென்று அஞ்சா நெஞ்சனை சந்தித்து மதுரையை எப்படி எல்லாம் சீர்படுத்தலாம். என்று ஒரு SITTING போட்டு ஆலோசனை கேட்டு விட்டு வரலாம். இது நடந்தாலே, மதுரை சீரடைந்து விடும். உலக மெகா நகரங்களுக்கு இணையாக மதுரையும் உயர்ந்து விடும். இதற்கான எல்லா ஐடியாவும் அஞ்சா நெஞ்சனிடம் இருக்கிறது. உலக புகழ் பெற்ற திருமங்கலம் பார்முலாவை உண்டாக்கிய மகான் அவர். அவர் வாழும் ஊர் இந்த அளவிற்கு கீழ்த்தரமாக MAINTAIN செய்யபடுவது மிக மிக பரிதாபம். அவரையும் அவரது EXPERTISE ஐயும் இந்த அரசு நன்றாக உபயோகபடுத்தி கொள்ள வில்லை. அது மதுரை மக்கள் செய்த பாவம்.
Rate this:
Share this comment
Cancel
saravan - Coimbatore,இந்தியா
17-ஆக-201213:49:41 IST Report Abuse
saravan ஜெயலலிதா அறிவித்துவிட்டால் கோவை முதலிடம் என்று அர்த்தமா? நானும் ஒரு கோயம்புத்தூர்காரன் பிறப்பாலும் வளர்பாலும். கோவையில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் சுகாதார திட்டத்தயும் அரசு செயல் படுத்தவில்லை. ஏன் ரோடுகள் கூட போன ஆட்சியில் செம்மொழி மாநாடு சமயத்தில் போடபட்டவைதன். எல்லா மாநகராட்சிக்கும் பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கபட்டது? கோவைக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது? கோவையை வஞ்சிப்பது மட்டுமே இவர்கள் வேலை. இங்கு இருக்கும் தொழிலதிற்பகளும், உழைபளிகளும் மட்டுமே கோவை உயர்துள்ளது. அரசியல்வதிகளினாலும், அதிகரினளும் அல்ல. தினமலர் உண்மையின் உரைகல் என்று சொல்லிக்கொண்டு பொய் செய்தி போடாதே
Rate this:
Share this comment
Bharathi - Chennai,இந்தியா
17-ஆக-201215:42:54 IST Report Abuse
Bharathiஅத்தனையும் உண்மை.. இதில் இன்னொரு கொடுமை என்னன்னா பொள்ளாச்சி சிறந்த நகராட்சியாம்.. மொதல்ல பொள்ளாச்சி&39க்கு ஒரு நடை போயிட்டு வந்துட்டு விருது குடுக்க சொல்லுங்கப்பா.. ஒரு ரோடு உருப்படி கெடையாது.. ஒரு ரயில்வே பாலம் 5 வருஷமா கட்றாங்க.....
Rate this:
Share this comment
Naga - Chennai,இந்தியா
17-ஆக-201215:43:58 IST Report Abuse
Nagaகோவை மட்டுமல்ல..இந்தியா முழுவதும் அப்படித்தான்...மக்களின் கடின உழைப்பால் இந்தியா வளருகிறதே தவிர எந்த ஒரு நல்ல தலைவனும் வழிநடத்திசெல்லவில்லை .....
Rate this:
Share this comment
Cancel
pinkthamizhan - Budapest,ஹங்கேரி
17-ஆக-201213:08:18 IST Report Abuse
pinkthamizhan தொடர்ந்து சென்னைக்கே முக்கியத்துவம் கொடுத்தால் மற்ற மாநகராட்சிகள் எப்படி வளரும்?வீடு வாடகை முதற்கொண்டு விண்ணை முட்டும் செலவுகள் சென்னையில் தான் அதிகம்மற்ற நகரங்களிலும் தொழிட்சாளைகளை நிறுவ முயற்சி மேற்கொண்டால் சீரான வளர்ச்சி இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
17-ஆக-201211:42:54 IST Report Abuse
Indiya Tamilan தொழிற்சாலைகள் இல்லாமல் மதுரை வளராது. இங்கு அம்மாதிரி திட்டங்களை கொண்டுவந்து தொழில்மய படுத்தும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் தேர்தல்களை புறக்கணிக்கவேண்டும். அதையெல்லாம் மதுரை மக்களிடம் எதிர்பார்க்கலாமா? நடக்குமா?
Rate this:
Share this comment
Cancel
Madhiyalagan Pichandi - Vellore,இந்தியா
17-ஆக-201211:41:33 IST Report Abuse
Madhiyalagan Pichandi வேலூர் மாநகராட்சி எந்த இடத்தில இருக்கிறது ?
Rate this:
Share this comment
Naga - Chennai,இந்தியா
17-ஆக-201215:45:18 IST Report Abuse
Nagaஅது மாநகராட்சி லிஸ்டில் இல்லைங்கோ....ஹி..ஹி..ஹி.....
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
17-ஆக-201211:37:09 IST Report Abuse
Indiya Tamilan தினமலர் மதுரையை பற்றிய எங்கள் மன குமுறலை அப்படியே வெளியிட்டுள்ளது.சென்னைக்கு அடுத்த பெரிய ஊர் மதுரை என்ற பெயருக்கு ஏற்றவாறு எந்த ஆட்சியிலும் இங்கு வளர்ச்சி பணிகள் மட்டுமல்ல தொழில் ரீதியான திட்டங்களும் வந்தது இல்லை வர போவதுமில்லை காரணம் இங்குள்ள மக்களுக்கே அந்த ஆர்வம் இல்லை, கேட்டு போராட வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்கிறபோது அரசியல்வாதிகளுக்கு எங்கே ஆர்வம் வரும்?. இந்த பெரிய கிராமம் இன்னும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் வளர்ச்சி அடையாது மற்ற சிறிய நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துவிடும். இது கசப்பான உண்மை மதுரையில் உள்ள படித்தவர்கள் தற்போது சென்னையில் செட்டில் ஆக விரும்புகிறார்கள் ஆகி கொண்டிருக்கிறார்கள். எனது சொந்த ஊரான மதுரையின் வளர்ச்சியின்மையை நினைத்து வெட்கமாக இருக்கிறது மனம் மிகவும் வேதனைப்பட்டு ரத்தகண்ணீர் வடிக்கிறது. தொழிற்சாலைகள் இல்லாத மதுரை எப்படி வளரும்? எந்த அரசும் கொண்டு வர தயார் இல்லையே? கேட்டு போராட மக்களும் தயார் இல்லையே? தெலுங்கானா போன்ற உணர்ச்சிகரமான போராட்டம் இங்கு வரவேண்டும் இல்லையெனில் கந்து வட்டி,ரவுடித்தனம்,டீக்கடைகளில் வெட்டி அரட்டை,கிராமத்துக்கே உண்டான பழக்க வழக்கங்கள்,இரவுநேர பரோட்டா கடைகள்,ஜாதி ரீதியான மோதல்கள் இவற்றிலே மூழ்கி போன மதுரையில் வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Balachandran - chennai,இந்தியா
17-ஆக-201215:11:25 IST Report Abuse
Balachandranமதுரையில் நகரபேருந்துகளில் கட்டணம் மிக அதிகம். மீட்டர் போடாத ஆட்டோ மது \ரையிலிரிந்துதான் மற்ற ஊர்களுக்கும் பரவியது...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஆக-201211:32:32 IST Report Abuse
Pugazh V கோவை சிறந்த மாநகராட்சி ஆனதில் அரசு ஊழியர் பங்கு இல்லையா? அவர்களும் பொன் அஆட்சியில் பணியில் இருந்தவர்கள் தானே யாரோ ஒருவர், அரசு ஊழியர் பதவிக் காலமும் ஐந்து வருடங்கள் என்கிறார்- குடும்பம் குழந்தைகள் இருப்பவர் எனில் இப்படிப் பேச மாட்டார். கவை சிறந்து விளங்குவதற்கு முந்தைய ஆட்சி காரம் இல்லையாம்- ஆனால் மதுரை முன்னேறாமல் இருப்பதற்கு போன ஆட்சி காரணமாம்- பொங்கு ஆட்டமா இருக்கே இது இதிலிருந்து ஒன்று தெரிகிறது - இங்கே தி மு க வை எதிர்ப்பவர்களின் கருத்துக்களுக்கு மட்டும்......- விடுங்க சார்- சொல்பவர்களுக்கே டேஹ்ரியும், அடிபப்டையே இல்லாமல் பேசுகிறோமென்று. தெரிந்தே பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. படித்துவிட்டு போக வேண்டியது தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை