பொன்னேரி: சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால், ஒரு கிராமமே குடிபெயர்ந்து உள்ளது. கடைசியாக இருந்தவரும், வேலை தேடி வெளியூருக்குச் சென்றதால், தற்போது மக்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லாமல், கிராமம் வெறிச்சோடிக் கிடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோளூர் ஊராட்சியில் அடங்கியது ஆண்டார்தோப்பு கிராமம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, 27 குடும்பங்களில், 120 பேர் வசித்து வந்தனர். அதில், குயவர்கள் பெரும்பான்மையாக இருந் தனர். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
தீவு கிராமம்: ஆண்டார்தோப்பு கிராமம், கோளூர் கிராமத்திற்கு செல்லும் சாலையிலிருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இதற்காக, அங்கு பேருந்து நிறுத்தமும் அமைக்கப் பட்டு உள்ளது. இந்த கிராமத்தை அடுத்து, வேறு கிராமங்கள் இல்லாமல், சுற்றிலும் விவசாய நிலங்களுக்கு, மத்தியில் தீவு கிராமமாக உள்ளது. ஊரில் விநாயகர், பெருமாள், முனீஸ்வரன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி கோவில்களும் உள்ளன. ஒதுக்குப்புறமான இடத் திலும், சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமலும் இருந்ததால், பல வளர்ச்சித் திட்டங்களில் இருந்து இந்த கிராமம் துண்டிக்கப் பட்டது. போக்குவரத்து, சாலை, குடிநீர், மின்விளக்கு வசதி, உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல், மிகுந்த விரக்திக்கு ஆளாகினர். மழை காலங்களில் ஊரைவிட்டு வெளியேற முடியாமலும், குடிநீருக்கு கோளூர் கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
முன்னேற்றம் தேடி...: ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையும், மண்பாண்ட தொழிலையும் செய்து வந்த கிராம மக்கள், சந்ததியரின் கல்வி, சுகாதாரம், வருவாய், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கருத்தில் கொண்டு, கிராமத் தில் இருந்து ஒவ்வொரு குடும்பமாக வெளியேறினர். கடைசியாக ஜெயசீலன் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கிராமமே காலியான சூழ்நிலையில் அச்சம் காரணமாக அவரும் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியேறினார். தற்போது ஆண்டார் தோப்பு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் பூட்டிக் கிடக்கின்றன. மின் கம்பங்களும், ஒயர்களும் அகற்றப் பட்டு உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இடிந்து கீழே விழுந்து நொறுங்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. அதே சமயம், கோளூர், பொன்னேரி, சென்னை என, பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை கிராமத்திற்கு வந்து இஷ்ட தெய்வங்களை வணங்க மட்டும் மறப்பதுஇல்லை.
சாலை அமைப்பு: மக்கள் அங்கு குடியிருக்கும் வரை சாலை வசதி செய்யப்படாத நிலையில், தற்போது யாருமே இல்லாத கிராமத்திற்கு, தார் மற்றும் செம்மண் சாலை வசதி செய்யப் பட்டு உள்ளது. ஆனால் போக்குவரத்து தான் இல்லை. யாருமே இல்லாத இக்கிராமத்தில், 70 வாக்காளர்கள் அட்டைகள் மற்றும் 27 குடும்ப அட்டைகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன. ஊராட்சி வார்டு உறுப்பினரும் உள்ளார், ஆனால், அவருக்கு எவ்வித பணியும் இல்லை. இது குறித்து, ஆண்டார்தோப்பு கிராமத்தில் வசித்து, சென்னை ஆவடியில் குடியேறிய ஜெயசீலன் கூறியபோது, ""எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அப்போது செய்து தரப்படவில்லை. யாரும் அற்ற அனாதைகளாக வாழ்ந்து வந்தோம். வேறு வழியின்றித் தான் குடிபெயர்ந்தோம். தற்போது, அங்கு சாலை வசதிகள் செய்யப் பட்டு உள்ளதாக கேள்விப்பட்டேன். நாங்கள் இருக்கும்போது சாலை வசதிகளை செய்து கொடுத்திருந்தால், நிச்சயம் கிராமத்தை விட்டு வெளியேறி இருக்க மாட்டோம்,'' என்றார்.
நேரில் சென்று ஆய்வு: இது குறித்து, பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் கந்தசாமியிடம் கேட்டபோது, ""ஆண்டார்தோப்பு கிராமத்தின் நிலை குறித்து, நேரில் சென்று ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து அக்கிராமத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். யாரும் இல்லாத கிராமத்திற்கு அர” பணத்தை வீணடிக்க வேண்டுமா என்பது கேள்வியாக உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அய்யா, செய்தியை சரியாக படிக்கவில்லை போலிருகிறது. கடைசியாக இருந்த ஜெயசீலன் ஊரைவிட்டு வெளியேறி
நான்கு ஆண்டுகள் ஆகின்றன என்று போட்டிருக்கிறதே? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யார் ஆட்சியில் இருந்தாது?
இப்போது ஆட்சிக்கு வந்த அம்மையார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறார். ஊரில் எல்லா வசதிகளும் செய்த
பிறகு அந்த ஊர்மக்கள் மீண்டும் அங்கே வந்துவிடுவார்கள். அதற்கான நடவடிக்கைதான் எப்போது நடக்கிறது....
யாருமே இல்லாத அந்த கிராமத்தில் பாழடைந்த அந்த வீடுகளையெல்லாம் இடித்து அந்த இடங்களை விவசாயதிர்கேற்ற நிலமாக மாற்றி விவசாயம் செய்யலாம்......எதிர்காலத்தில் இது போன்ற அவலங்களை தடுத்து கிராம மக்கள் நகரத்திற்கு குடியேறுவதை தடுப்பது அரசின் தலையாய கடமை......அதற்க்கு கிராமங்களில் அடிப்படை வசதியை பெருக்கி விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்பை உண்டாக்குவது அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்........
அது மட்டுமல்ல அந்த கிராமத்தில் உள்ள மக்கள் வெளியேறினாலும், வீடுகள் பூட்டப்பட்டு தான் இருகின்றன.
இடிந்து போகவில்லை. இடிந்து போனது மேல்நிலை தொட்டிதான். அந்த கிராமமக்கள் ஊர் கோவில்களுக்கு வந்து போகிறார்கள் என்ற தகவலும் கூடவே இருக்கிறதே? எனவே, கிராமத்தை சீர்திருத்தினால் அவர்கள் மீண்டும் தங்கள் கிராமத்திற்கே வந்து வாழ வாய்ப்பிருக்கிறது....
சென்னையில் என்ன அடிப்படை வசதி உள்ளதாம் ?? கொழாயைத் தொறந்தா புழு நெளியும் தண்ணீர் இல்லாட்டி காத்து.. வெளியே நடக்கமுடியாத அவலத்தில் தெருக்கள் .. வண்டி ஓட்டத் தகுதி இல்லாத சாலைகள்... மூச்சு விடத் தகுதி இல்லாத காற்று... தடையுள்ள மின்சாரம்... எப்ப வரும், எப்ப போகும் என்று சொல்ல முடியாது.. சன்னலைத் திறந்தாள் காற்றுக்கு பதில் கொசுப் பட்டாளம்.. மழை பெய்தால் ஊர் பூரா மெதக்குது... இந்த லட்சணத்தில் உள்ள "பட்டணத்தில்" .... 1C, 2C, 3C என்று, நானும் ஏதோ பஸ் ரூட்டைத் தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால்...குச்சு வீட்டைக் கூட கோடியில் விலை சொல்கிறார்கள்... கொள்ளை அடித்து பணம் உள்ளவனுக்குத் தான் இந்திய நகரங்கள்.. மற்றவர்களுக்கு அவை வெறும் நரகங்களே......
அடிப்படை வசதிகள் இல்லாததால் படித்தவர்கள் நாட்டை காலி செய்து கொண்டு இருகிறார்கள் வீடு கட்டி வெளிநாட்டு இந்தியர்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கும் சோம்பேறிகளும் , சின்ன கல்லு பெத்த லாபம் என்று சுத்தும் பேராசை பிடித்தவர்களும் நாட்டை கொள்ளை விலைக்கு விற்று விடுவார்கள். மன்மோகன் ப.சி போன்றோர் அதை எளிதாகி விடுவார்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.