திருப்புவனம்:மாமூல் வசூலிக்க, மப்டியில் வந்த மதுவிலக்கு போலீசார் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் காயமடைந்த போலீசார், வேன் டிரைவரை செருப்பால் அடித்தனர். ஆத்திரமடைந்த கிராமத்தினர், போலீசாரை தாக்கினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலிருந்து 3 கி.மீ., தூரத்தில் கலியாந்தூர் உள்ளது. இங்குள்ள சிலர் பாரில் வேலை பார்ப்பவர்கள், சரக்குகளை விதிமீறி விற்பதாக கருதும் மதுவிலக்கு போலீசார், அவ்வப்போது வந்து மாமூல் வசூலிப்பதுண்டு. சிவகங்கை மதுவிலக்கு போலீஸ்காரர் அய்யப்பன், தனபாலன் நேற்று மதியம் கலியாந்தூருக்கு டூவீலரில் (டிஎன் 58 டி 1458) வந்துள்ளனர். அப்போது, பின்னால் வந்த வாழை இலை ஏற்றிய வேன், டூவீலர் மீது மோதியதில், நிலை தடுமாறிய போலீசார் கீழே விழுந்து காயமடைந்தனர்.
ஆத்திரமடைந்த அவர்கள், வேன் டிரைவர் அங்குச்சாமியை செருப்பாலும், கம்பாலும் தாக்கினர். டிரைவர் அங்குச்சாமி எவ்வளவு சொல்லியும் கேட்காத போலீசாரை சமாளிக்க, கிராமத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். திரண்டு வந்த கிராம மக்கள் சமரசம் செய்தனர். இதை ஏற்காத போலீசார் வாக்குவாதம் செய்ததால், ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர்கள் இருவரையும் கிராம மக்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சமரசம் செய்தார். டிரைவர் அங்குச்சாமி,போலீசார் தனபாலன், அய்யப்பனை அழைத்துச் சென்றார்.
கிராமத்தினர் கூறுகையில், ""மதுவிலக்கு போலீசார் அடிக்கடி வந்து மாமூல் வசூலிக்கின்றனர். பணம் கொடுக்காவிட்டால், தகராறு செய்கின்றனர். சில நாட்களுக்கு முன், இதேபோல் இரவில் வந்து தகராறு செய்தனர். நேற்று வேனில் இவர்களே மோதி விட்டு டிரைவரை செருப்பால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்,''என்றனர்.
போலீஸ் வட்டாரத்தில் கூறுகையில், சமரசமாக சென்றதால் வழக்கு பதியவில்லை, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மது தயாரிபவர்களுக்கு பெரிய அந்தஸ்து சமுகத்தில் தொழில் அதிபர் என்னும் மரியாதை ஆயிரம் சலுகைகள் வேறு.. அரசு வருமானத்தில் முக்கிய பங்கு மது விற்பனையில் இருந்து.. தெருவுக்கு தெரு டாஸ் மாக் .. 247 தட்டுபாடு இல்லாத விநியோம் இத்தனையும் செய்றது நமது அரசு... அட சாமி இங்க மது விலக்கு போலிஸ் எதுக்கு..? அவங்களுக்கு என்னபா வேலை...? அவங்க மதுவை எங்கையா போய் விலக்கனும்...? கண்டிப்பா வல்லரசு ஆகிறலாம்..@

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.