மதுரை: தோண்டத் தோண்ட கிரானைட் கற்கள் வந்ததுபோல, புதிய, புதிய முறைகேடுகளும் தினமும் வந்து சேர்கின்றன. இந்த கிரானைட் முறைகேடுகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் குறித்தும் ஆய்வு நடக்கிறது.
கிராம வி.ஏ.ஓ.,க்கள் முதல் சென்னை உயரதிகாரிகள் வரை அனைவரது கைங்கர்யமும் இதில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக விசாரணைஅதிகாரிகள் கருதுகின்றனர். அனுமதிக்கப்பட்ட குவாரிகளில், அனுமதித்த அளவைவிட கூடுதலாக கற்களை வெட்டி எடுத்தது, அனுமதியே பெறாத குவாரிகளிலும் கணக்கில்லாமல் வெட்டி எடுத்தது, கழிவு கற்களை கண்மாய், குளம், நீராதாரங்களில் சேமித்தது, இதனால் நீராதார பாதிப்புகளை கண்டும் காணாமல் இருந்தது என பல வகையிலும் நடந்த முறைகேடுகளில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்தது. அதிகாரிகள் ஆசி இல்லாமல், இத்தனை குவாரி முறைகேடுகள் நடந்திருக்காது.
இதுதொடர்பான ஆதாரங்களும், தற்போது அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. இவ்வகையில் கீழ்நிலையில் உள்ள வருவாய், சர்வே துறை முதல் கனிமவளம், டாமின் துறைகளின் உயரதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு.குவாரிகள் ஆக்கிரமிப்பால் அழிந்து வந்த கண்மாய்களைக் கூட உயரதிகாரிகள் பலர், நல்ல முறையில் இருந்ததாக சான்று அளித்துள்ளனர். கிரானைட் கற்களை ஆய்வு செய்யும் பணி ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் அதிகாரிகளை கண்காணித்து ஆராயும் பணியும் நடக்கிறது.
இவ்வகையில் 20 ஆண்டுகளில், மதுரையில் பணியாற்றிய வருவாய், நிலஅளவை, போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சில கலெக்டர்கள் உட்பட மாவட்ட உயரதிகாரிகள் சிலரும் விசாரணை வளையத்திற்குள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர்களுக்கெல்லாம் இறைவன் தான் தண்டனை கொடுக்க வேண்டும் கோர்ட் தண்டனையெல்லாம் சும்மா. இறைவா எங்கள் நாட்டை காப்பாத்து காந்தி பாரதி சிதம்பரம் வாங்கி தந்த சுதந்திரம் வீணா போச்சு ...............ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்திருந்தாலே போதுமானது ..................... எங்கள் நாட்டில் லஞ்சம் கொள்ளை இதுக்கு மட்டும் தான் சுதந்திரம் வேறு எதுக்குமே சுதந்திரம் இல்லை .............ஜெய் ஹிந்த்
20 ஆண்டுகாலமாக அரசு அதிகாரிகள் மட்டும் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி , கனிமத்துறை பொறுப்பிலிருந்த அமைச்சர்களுக்கும் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது.எனவே கடந்த 20 ஆண்டுகளில் பணி புரிந்த அரசு அதிகாரிகளுடன், கனிமத்துறை பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் விசாரணை நடத்தப்பட்டால் அவை அனைத்தும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்கும் ......
...காலதாமதங்கள்தான் நமது நாட்டின் பெரிய சாபக்கேடு.... இதுவே பெரிய பெரிய தவறுகளும், ஊழல்கள் தொடர் கதையாக மாறுவதற்கும் முக்கிய காரணம்.... ஊழல் செய்வதற்கும், மக்களின் பணத்தையும், அரசின் பணத்தையும் கொள்ளையடிப்பதற்கு யாரும் பயப்படுவதே இல்லை.... ஏனென்றால் இதுவரை பெரிய ஊழல்களில் எல்லாம் யாருக்கும் தண்டனையே கிட்டவில்லை.... அவர்கள் அனைவரும் பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்.... இவர்கள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக வெளியில் உலவுவதும், அவர்களின் செல்வ செழிப்பும் மற்றவர்களையும் தவறு செய்ய தூண்டுகிறது மற்றும் தவறு செய்தால் பயம் இல்லாமல் இருக்கச்செய்கிறது என்பதே அப்பட்டமான உண்மை........
இந்த விஷயத்தை பொறுத்தவரை நேரடியாக,மறைமுகமாக இதில் சம்பந்தபட்ட அனைவரிடமும் நேர்மையாக விசாரணை செய்து அவர்கள் தற்போது பணியிலிருந்தாலும் அல்லது ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். முதல்வர் உண்மையாலுமே நாட்டில் லஞ்சத்தை ஒழித்து நேர்மையாக உழைப்பவர்களுக்கு ஆதரவுதந்து நல்ல தலைமையை நாட்டு மக்களுக்கு தர நினைத்தால் இந்த ஒரு பிரச்சனையை நேர்மையாக கையாண்டு நியாயம் வெளிக்கொணர வழிசெய்தால் போதும். இத்தகைய தவறுகளில் கடைநிலை ஊழியர்களிடமிருந்தே பெரும்புள்ளிகளை சுற்றிவளைக்க தேவையான ஆதாரங்களை பெறமுடியும்.எனவே முறையான விரிவான நேர்மையான விசாரணை தேவை என்பதை முதல்வர் உணர்வாராக.மேலும் தவறில் சம்பந்தப்பட்டவர்களை அவர்களின் வாரிசுகள் (நாட்டு மக்களின் மீது அக்கறைகொண்டவர்கள் எனில்) தற்போதே புறக்கணிக்கவேண்டும்.செய்த தவறுக்காக தங்களது குழந்தைகளே தங்களை புறக்கணிப்பது ஒரு தவறுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனையாகும்.இதை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் செய்வார்களாக.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.