Put Zero mark to DMK, ADMK parties: vijayakanth | தி.மு.க.,-அ.தி.மு.க.,வுக்கு "0' போடணும்: விஜயகாந்த் ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,-அ.தி.மு.க.,வுக்கு "0' போடணும்: விஜயகாந்த் ஆவேசம்

Updated : ஆக 19, 2012 | Added : ஆக 17, 2012 | கருத்துகள் (135)
Advertisement
 தி.மு.க.,-அ.தி.மு.க.,வுக்கு "0' போடணும்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆவேசம்,Put Zero mark to DMK, ADMK  parties: vijayakanth

கரூர்: ""வரும் எம்.பி., தேர்தலில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வுக்கு பொதுமக்கள் ஜீரோ போட வேண்டும்,'' என, கரூரில், தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசினார்.

தே.மு.தி.க., சார்பில் கால்நடைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், கரூர் 80 அடி ரோட்டில் நடந்தது. நலத்திட்ட உதவிகளை வழங்கிய, தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் புதியதாக எதுவும் இல்லை. ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்த திட்டங்கள் தான் உள்ளது. தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.கடந்த, தி.மு.க., ஆட்சியில் என்ன நடந்ததோ, அதே தான், அ.தி.மு.க., ஆட்சியிலும் நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு போய் விட்டது. என்னுடைய ரிஷிவந்தியம் தொகுதியில் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அரசு தடையாக உள்ளது.

தற்போது, தி.மு.க.,வினர் மீது நிலஅபகரிப்பு ஊழல் என்றால், வரும் காலத்தில், அ.தி.மு.க.,வினர் மீது குளம், குட்டை ஆக்கிரமிப்பு ஊழல் வரும். மணல் குவாரி, கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு ஏழைகளிடம் ஒப்படைக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன். ஆனால், தமிழக அரசு பதில் சொல்லவில்லை. ஆறுகளை தூர்வார ஒதுக்கப்பட்ட பணத்தை, ஆளுங்கட்சியினர் கொள்ளையடிக்கின்றனர். புகார் கூறுவதால், என் மீது வழக்கு போட்டாலும் நான் பயப்படமாட்டேன். வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன்.

தமிழக மக்களுக்கு, மத்திய அரசு எதுவும் செய்ய வில்லை. இதனால் தான் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தோம். தண்ணீர் அதிகம் வந்தால் திறந்து விட்டு, தமிழகத்தை மற்ற மாநிலங்கள் வடிகாலாக மாற்றி விட்டது. இலவசம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், வீட்டுக்கு ஒரு வேலை கொடுங்கள்.தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சி செய்யும், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், மின் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தவில்லை. கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் உடனடியாக வர வாய்ப்பில்லை. மக்களுக்கு இடையூறு செய்தால், கடும் விளைவு ஏற்படும் என, முதல்வர் ஜெயலலிதா சொல்கிறார்.

ஆனால், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை நடத்தி மக்களுக்கு இடையூறு செய்தவர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்.நேர்மையாக செயல்பட்ட கலெக்டர்கள் சகாயம், பாலாஜி ஆகியோர், அ.தி.மு.க., ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களை மாற்ற, அ.தி.மு.க., வினருக்கு, 150 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியோடு தான், வரும் எம்.பி., தேர்தலில், தே.மு.தி.க., கூட்டணி வைக்கும். தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில் மாற்று திறனாளிகளுக்கு வேலை வழங்கவில்லை. சங்மா, ஐஸ்வந்த்சிங் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவால் வெற்றி பெறவைக்க முடியவில்லை.

தமிழகத்தில் பேச்சு, எழுத்துரிமை பறிக்கப் பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் முன்னேறவில்லை.கர்நாடகத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் வெற்றி பெறுவதுதான் ஜெயலலிதாவின் குறிக்கோளாக உள்ளது. இலங்கை தமிழர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களுக்கு வரும், எம்.பி., தேர்தலில் மக்கள் ஜீரோ போட வேண்டும்.

கருணாநிதிக்கு சின்ன ஜால்ரா போதும். ஆனால், ஜெயலலிதாவுக்கு செண்டை மேளம் மாதிரி, பெரிய ஜால்ரா போட்டால் தான் பிடிக்கும். ஆனால், நான் யாருக்கும் ஜால்ரா போட மாட்டேன்.
கரூரில் சாயப்பட்டரைகளில் ஆர்.ஓ., பிளாண்ட் அமைக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் கலெக்டரிடம் எது கேட்டாலும் அமைச்சர் (செந்தில் பாலாஜி) பார்த்துக்கொள்வார் என்கின்றனர். அப்ப இவர்கள் ஏன் பொறுப்பில் இருக்கின்றனர். கவுன்சிலர்கள், நகராட்சி கூட்டத்தில் குறைகளை சொல்ல முடியவில்லை.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naren - Chennai,இந்தியா
22-ஆக-201217:27:56 IST Report Abuse
naren முதல்ல தமிழ் நாட்டுல இருக்கிற கட்சிங்க தங்களோட கொள்கைகள கரெக்டா சொல்ல சொலுங்க பாப்போம். எல்லாருக்கும் முதல் கொள்க கொள்ளை அடிப்பது தான். இத ஜனங்க கரெக்டா புரிஞ்சிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Theekutchi Neruppu - Chennai,இந்தியா
18-ஆக-201221:49:36 IST Report Abuse
Theekutchi Neruppu paavam mariyaa vaayila etchi ooruthu .. captan நம்ம பக்கம் வந்திரதிர மாட்டாரா னு... உங்க &39எதிர்க்கட்சி&39 ஸ்தானத்த &39கபளீகரம்&39 பண்ணது அவர்தான்னு தெரிஞ்சிகோங்க ...அது யாராலே னு .. ஹி ஹி .. ungalukku theriyaathaa enna?????
Rate this:
Share this comment
Cancel
vikramasarathi - doha,கத்தார்
18-ஆக-201220:32:47 IST Report Abuse
vikramasarathi பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்னு சொல்றீங்களே ஒழிய சட்டசபைக்கு போக பயப்படுறீங்களே!.
Rate this:
Share this comment
Jayaprakash Selvaraj - chennai,இந்தியா
22-ஆக-201215:38:21 IST Report Abuse
Jayaprakash Selvarajசட்ட சபைக்கே போயிட்டு இருந்தா மக்கள் பிரச்சினயை யார் பார்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Manikr - Trichy,ஓமன்
18-ஆக-201220:21:21 IST Report Abuse
Manikr முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் டாஸ்மாக் துறை ஒன்றை ஆரமிச்சு அந்ததுறை அமைச்சரா விஜயகாந்த நியமிசுருங்க ...வேற ஏதும் பேசமாட்டார்
Rate this:
Share this comment
Cancel
Parasuraman Prabu - Guwahati,இந்தியா
18-ஆக-201219:45:43 IST Report Abuse
Parasuraman Prabu தமிழ் நாட்டில் படித்தவரின் ஓட்டு வைகோவுக்கு தான்
Rate this:
Share this comment
Cancel
Logu Dindigul - Dindigul,இந்தியா
18-ஆக-201217:43:42 IST Report Abuse
Logu Dindigul கேப்டன் உங்களுக்கு பேசவே தெரியல. வீட்ல பெரியவங்க இருந்தா பேச சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
kannan - Tiruvannamalai,இந்தியா
18-ஆக-201216:47:42 IST Report Abuse
kannan திரு வியகாந்த் அவர்களே எனக்கு வயது 29 என்னோட ஜெனரசன் பசங்களுக்கு விஜய் , அஜித் கால ஹீரோ தான் பிடிக்கும் .... ஆனால் சிறுவயதில் நாள் உங்களின் தீவிர ரசிகன் அதற்காக உங்களை என்னால் தலைவனாக ஏற்றுகொள்ள முடியாது உங்களுக்கு அந்த தகுதி இல்லை . ஜெயா, ஸ்டாலின் இவர்களும்கூட உங்களை போலத்தான் இருந்தார்கள் ஆனால் இவர்கள் இப்போது நல்ல தலைபண்பை வளர்துகொண்டனர் . நீங்கள் உங்கள் தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் உங்கள் ஆதரவை வைகோ போன்ற நல்ல தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் . நடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கொடுத்த ஆதரவு விழலுக்கு இரைத்த நீர்
Rate this:
Share this comment
Cancel
anbu - cuddalore ,pathirakottai,இந்தியா
18-ஆக-201216:12:22 IST Report Abuse
anbu விஜயகாந்த் உங்களுக்கு வேலை இல்லையா எதோ படத்துல விவேக் வடிவேல் போன்றவர்களை படத்தில் முதல்வருன்னு சொல்லசொல்லி பெருமையா நினைக்கரத விட்டுட்டு மக்களிடம் என்னை முதல்வரக்கு பிரதமருக்கு இன்னு காமெடி பன்னரிக்க. வடிவேல் சொலரமாதிரி சின்னபுள்ளதனம்யிருக்கு
Rate this:
Share this comment
Cancel
Prithivi . - Chennai 9500791791,இந்தியா
18-ஆக-201215:46:17 IST Report Abuse
Prithivi . பாவம் பா தலைய விடுங்க.. யாரு எழுதி கொடுத்த தோ எந்த அளவு மப்புல இருக்கும் பொது இத சொன்னாரோ..?
Rate this:
Share this comment
Cancel
Senthilkumar Avaneeswaran - coimatore,இந்தியா
18-ஆக-201214:29:54 IST Report Abuse
Senthilkumar Avaneeswaran ஜமைக்கா அவர்களே இங்கு இப்போது நமது நாட்டில் இருக்கும் சிஸ்டத்தை ஒழுங்காக, நேர்மையாக ,தைரியமாக சட்ட விதி மீறல் இல்லாமல் கடைபிடித்தாலே போதும் . அந்த தைரியமும், நேர்மையும் விஜயகாந்த் அவர்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன் .மற்ற இரு திராவிடக் கட்சி தலைவர்களிடத்தில் இல்லாத ஊழல் செய்யக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.ஆகவே அது போதும் அவரிடத்தில் ஒரு முறை ஆட்சியை ஒப்படைப்பதற்கு வேறு எந்த விசேஷ காரணமும் தேவையில்லை . தானாகவே நேர்மையுடன், ஊழல் அற்ற ஆட்சி செய்தால் எல்லாப் பிரச்சினைகளும் படிப்படியாக தீர்ந்து விடும் .ஆகவே இங்கு கமெண்ட் எழுதும் அனைவரும் அவரவர் கட்சி சார்பாக எழுதாமல் நடுநிலைமையோடு சிந்தித்து எழுதினால் அது நாம் நாட்டுக்கு செய்யும் சிறு உதவியாக இருக்கும். இதை ஆளும் கட்சியின் ஜால்ரா மலர் பிரசுரிக்குமா என்பது சந்தேகம் தான் .
Rate this:
Share this comment
Nandu - Chennai,இந்தியா
18-ஆக-201219:19:10 IST Report Abuse
Nanduசினிமா பார்த்து கெட்டுப் போனவர்களில் நீங்களும் ஒருவர் என நினைக்கிறேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் இருந்த இவரால் தரமான ஒரு படத்தை எடுக்க முடிந்ததா? முடியுமா? சினிமாவை பார்த்து நம்புவதை விட்டுவிட்டு இவரால் ஏழு கோடி மக்களை வழி நடத்த முடியுமா.. என்று யோசயுங்கள். எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்து பல சாதனைகளை செய்தவர். அவர் கதா நாயகர் வேடம் போட்டவர் மட்டுமல்ல, மிகுந்த அறிவாளி, ஆற்றல் மிக்கவர். அவரோடு சினிமாவிலிருந்து வருகிற யாரையும் தகுதி திறமையை கவனிக்காமல் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். விஜகாந்திற்கு யோசிக்கும் திறமை இருந்தால் தன் அறிவு ஆற்றலை கருதி இப்படியெல்லாம் அரசியல் பண்ண வேண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. வைகோ நல்ல மனிதர் என்பதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் இன்று கெட்டுபோன அரசியல்வாதிகள் மத்தியில் அவரால் கட்சியை வளர்க்க முடியவில்லை. ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை