E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஈமு கோழி பண்ணையாளர் சொத்து பறிமுதல்: முதல்வர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

18 ஆக
2012
00:14
பதிவு செய்த நாள்
ஆக 17,2012 23:47

சென்னை:ஈமு கோழிகளை பாதுகாக்க கால்நடைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பண்ணை
உரிமையாளர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

புகார்: இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக, ஈமு கோழிப் பண்ணைகளில் முதலீடு செய்தால் அதிகளவு லாபம்ஈட்டலாம் என்று கூறி, 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களிடம் இருந்து, லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வைப்பு நிதியாக, சில ஈமு கோழிப்பண்ணைகள் திரட்டின.ஈமு கோழிகளை வளர்க்க இடமில்லாதவர்களிடம் பணத்தைப் பெற்று, அதற்கு ஈடாக கோழிகளை வளர்த்து, அதை விற்று, அதன் அடிப்படையில் முதலீட்டுத் தொகைக்கு லாபமும் சேர்த்து வழங்கப்பட்ட திட்டம் அமல்படுத்தப்பட்டது.இத்திட்டப்படி, மாதா மாதம் வழங்கப்பட வேண்டிய தொகையை, ஆகஸ்ட் மாதம் முதல், முதலீடு செய்தவர்களுக்கு, அந்த நிறுவனங்கள் வழங்கவில்லை. இது தொடர்பாக, சில ஈமு பண்ணை நிறுவனங்கள் மீது, 16 புகார்கள் போலீசாரால் பெறப்பட்டுள்ளன.புகார்கள் மீதான நடவடிக்கையில், 33 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, நால்வர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

ஆய்வு கூட்டம்:இந்நிலையில், ஈமு பண்ணையில் முதலீடு செய்தவர்களை ஏமாற்றிய ஈமு பண்ணை நிறுவனங்கள் மீது விரைந்துநடவடிக்கை எடுப்பது குறித்து, முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், தலைமைச் செயலர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை செயலர் உள்ளிட்ட அரசுஅதிகாரிகள் கலந்து கொண்டனர். தலைமறைவானவர்களை விரைவாக கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துக்களை, கோர்ட் மூலம் பறிமுதல் செய்யவும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கவும் போலீசுக்கு உத்தரவிட்டார் முதல்வர்.

ஈமு கோழி பராமரிப்பு:
ஈமு பண்ணை நிறுவனத்தினர், தலைமறைவாகிய காரணத்தாலும், பணியாளர்கள் அங்கிருந்து சென்று விட்டதாலும், பண்ணைகளில் உள்ள ஈமு கோழிகள் இறக்கும் சூழல்ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தீவனம் அளித்து, அந்த கோழிகளைப் பாதுகாக்க, உத்தரவிடப்பட்டிருக்கிறது. நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கால்நடை பராமரிப்புத் துறையில் இருந்தும், கால்நடை டாக்டர்கள் இந்த பண்ணைகளுக்குச் சென்று, கோழிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து உள்ளனர்.ஈமு குஞ்சுகள் முழுமையான வளர்ச்சியடைய, இன்னும் மூன்று மாதம் ஆகும் என்பதால், அவற்றை பராமரிக்கத் தேவையான நிதியை கால்நடைபராமரிப்புத் துறைக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.அவை முழு வளர்ச்சியடைந்த வுடன் அவற்றை விற்பனை செய்து, அதன் மூலம் பெறப்படும் தொகை, தீவனச் செலவிற்கு ஈடு செய்யப்பட்டு, மீதத்தொகை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (42)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
18-ஆக-201223:21:28 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy அரசாங்கம்னா என்னனு இப்போது புரிஞ்சுக்கோ Makkalukkaga மக்களால் நடத்தப்படும் அரசு.நதி நீராகட்டும், இலங்கை பிரச்சினையாகட்டும், கூடங்குளமாகட்டும், granite பிரச்சினையாகட்டும், இந்த இமு வாகட்டும் மிகவும் துணிச்சலாக mudivu எடுத்திருக்கார் நம் முதல்வர் இதே Manjal துண்டை போல் பேசனும்ன "பேராசைக்காரர்கள் இந்த தமிழ் நாடு மக்கள் என்றிருப்பார்" illaiyael சோற்றால் adiththa பிண்டங்கள் என்றிருப்பார் அப்படியா பேசினார் நம் மக்கள் முதல்வர் அவர்தான் சொல்லிவிட்டாரே "உங்களுக்காக நான் என்பது மட்டும் இல்லாமல் ungalaal நான்" இதைவிட இன்னும் ஏதேனும் வேணுமா மக்களே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
18-ஆக-201219:23:31 IST Report Abuse
Chenduraan இந்த மாதிரியான கவர்ச்சி திட்டங்கள் எல்லாம் வரும் இடம் கோவை, ஈரோடு தான். ஏன்யா அங்கே உள்ளவங்கள் எல்லாம் ஏமாளிகள் என்று நினைத்து புதுசு புதுசா விளம்பரம் பண்ணுறாங்க பவம் கௌண்டர் மக்கள் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
18-ஆக-201222:38:53 IST Report Abuse
KAARTHIபடிச்சவுங்க அங்கே அதிகமா இருகிறதால யா ?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vaithi Esvaran - Chennai,இந்தியா
18-ஆக-201217:01:54 IST Report Abuse
Vaithi Esvaran எப்போதோ படித்த ஜோக் நினைவுக்கு வருகிறது - முதல் நாள், அதிகாரி 1 கோழிபண்ணை அதிபரிடம் - உங்கள் கோழிகள் எப்படி புஷ்டியாக இருக்கு? பண்ணை அதிபர் - அதுவா தினமும் நாங்கள் கோழிக்கு அரை கிலோ பாதாம் அல்வா கொடுப்போம், அதிகாரி 1 - அப்படி என்றால் நாள் ஒன்றுக்கு ரூபா 57 லட்சம் செலவு செய்யும் நீங்கள் வருடம் ஒன்றிற்கு 3 கோடி ரூபா வருமானத்திற்கு ரூபா 67 லட்சம் கட்டவேண்டும்.நாங்கள் வருமான வரி அதிகாரிகள். மரியாதையாக ரூபா 10 லட்சம் லஞ்சம் கொடு இல்லை ரூபா 67 லட்சம் வரி கட்டு. இரெண்டாம் நாள் :, அதிகாரி 2 கோழிபண்ணை அதிபரிடம் - உங்கள் கோழிகள் எப்படி புஷ்டியாக இருக்கு? பண்ணை அதிபர் - (சற்று தெளிவுடன் ))நாங்கள் அதன் உணவு விஷயத்தில் தலையிடுவது இல்லை. நாள் முழுக்க அவை வெளியில் மேய்ந்து விட்டு மாலையில் திரும்பும். அதிகாரி 2 - நாங்கள் ப்ளூ கிராஸ் நிறுவனத்திலிருந்து வருகிறோம் கோழிகளை பட்டினி போட்ட உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போகிறோம். (அதிபர் இரண்டவது அதிகாரியையும் கவனித்து அனுப்புகிறார்.) முன்றாம் நாள், அதிகாரி 3 - உங்கள் கோழிகள் எப்படி புஷ்டியாக இருக்கு? பண்ணை அதிபர் - (சற்று கலவரத்துடன் ) அதுவா ? தினசரி காலை ஒவ்வொரு கோழி கண்முழிததும் அதனிடம் நாங்கள் ரூபா 10 / நாள் ஒன்றுக்கு கொடுத்து விடுவோம். அவை எங்கே உணவு வாங்குகின்றது என்பதை பற்றி நான் கவலை படுவது இல்லை. (அதிகாரி தலை தெறிக்க ஓடுகிறார்). வைத்தி, Chennai
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
anand - Thanjavur,சவுதி அரேபியா
18-ஆக-201220:28:22 IST Report Abuse
anandவைத்தியா கொக்கா, நாங்க மூன்று நண்பர்கள் இதை படித்து சிரித்து சிரித்து வயிறு வலி வந்துவிட்டது...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஆக-201213:03:29 IST Report Abuse
Nallavan Nallavan இது அதிமுகவினரின் "பசி"யைத் தீர்க்கவா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
rajaram avadhani - Tiruchy,இந்தியா
18-ஆக-201212:26:38 IST Report Abuse
rajaram avadhani நண்பர்களே, நம்முடைய படிப்பு, அனுபவம், திறமை இவற்றை வைத்துகொண்டு கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். விளம்பரங்களை பார்த்து நாம் ஈர்க்கப்பட்டு ஏமாந்தால் நடிகர் என்ன செய்வார்? அவர் என்ன ஈமு கோழியைப்பற்றி கால் நடை மருத்துவ கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் படித்து பட்டம் வாங்கினாரா? வாங்கின காசுக்கு நடிக்கிறார். அவ்வளவுதான். அவருடைய பேச்சை கேட்டுதான் ஏமாந்தார்கள் என்பது எவ்வளவு அறிவீனம் அந்த நடிகர் ஒரு சினிமாவில் டாக்டராக நடித்தால் உடனே அவரிடம் வைத்தியத்திற்கு போவோமா? கிட்டத்தட்ட அதுபோலதான் இதுவும். "ஷாருக்கான்" ஒரு சென்ட் விளம்பரத்தில் சென்ட் போட்டு கொண்டவுடன் பத்து அழகான பெண்கள் அவரை சுற்றி வளைக்கின்றனர். உடனேயே நாமும், அந்த செண்டை உபயோகித்து விட்டு அதுபோல யாரும் நம்மை சுற்றி வரவில்லையே என்று அவர் மீது கேஸ் போடா முடியுமா? விளம்பரத்தில் நடித்த எந்த நடிகரையும் இது விஷயமாக சட்டபடி "டச்" பண்ணமுடியாது ஈசியாக அவர்கள் வெளியில் வர சட்டத்தில் இடமுண்டு. இது சட்டத்தின் ஓட்டை இல்லை "வாங்குபவரே, ஜாக்கிரதை" என்கிற ( CAVEAT EMPTOR- LET THE BUYER BEWARE) சித்தாந்ததை அடிப்படையாக கொண்டது. கலெக்டர் எச்சரித்தும் மக்கள் அதில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய அறியாமையா, பேராசையா, என்னத்தே சொல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஆக-201213:06:49 IST Report Abuse
Nallavan Nallavanஅதிக வட்டி தருவதாக வாக்குறுதி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் கூட தமிழகத்தைத்தான் குறி வைத்தன பக்கத்து வீட்டினர், எதிர் வீட்டினரை நம்பத் தயங்கும் தமிழன் இது போன்றவர்களிடம் எளிதில் ஏமாறுவான்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
18-ஆக-201222:38:05 IST Report Abuse
KAARTHINallavan Nallavan சார்... இதுங்க அண்ணன் தம்பிகளையே நம்புறதில்லை ........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
AllAre AreJuju - Chennai,இந்தியா
18-ஆக-201207:20:05 IST Report Abuse
AllAre AreJuju தலீவா, கஷ்டப்பட்டு தமிழ்-ல டைப் அடிச்சத சுட்டுராதீங்க. கொஞ்சம் publish பண்ணுங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
K Manickam - Namakkal,இந்தியா
18-ஆக-201207:09:18 IST Report Abuse
K Manickam பாராட்ட வேண்டிய முடிவு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
18-ஆக-201207:02:43 IST Report Abuse
Samy Chinnathambi அதிமுக ஆட்சி கூட கவர்ச்சி விளம்பரம் தான்... ஊழலுக்கு எதிரா கடும் நடவடிக்கைன்னு சொல்லுவாங்க. ஆனா அந்த ரெண்டு எழுத்து ஊழல் பேர்வழி கூடவே இருப்பாங்க. அவங்க சொந்த கார அஞ்சு எழுத்து காரங்க தமிழ்நாடு பூரா கட்டிங்க வாங்கறது, கமிசன் வாங்கறது, காலேஜ் தொறக்கறது, தாய்லாந்து மற்றும் பிலிப்பின்ஸ் பெண்களை கூட்டி வந்து மசாஜ் பார்லர் வைக்கிறது, பார் வைக்கிறது, தட்டி கேக்கரவங்களை தட்டி வைக்கிறது, நிலத்தை வாங்கறதுன்னு ஒரே பிசி...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
18-ஆக-201213:05:35 IST Report Abuse
மதுர முனியாண்டிஎன்னையா chaami உங்க கருப்பு உளறுவதை போல் நீயும் எதையோ உளறி கொட்டி இருக்க.....ரெண்டு எழுத்து...நாலு எழுத்து...இந்த கன்றாவியெல்லாம் படிச்சி தொலைச்சது எங்க தலைஎழுத்து........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
18-ஆக-201222:34:55 IST Report Abuse
KAARTHISamy Chinnathambi ... அரசன நம்பி புருஷன கைவிட்டுட்டு ஒட்டு போட்டாங்க....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rayappan Nanjappan - Coimbatore,இந்தியா
18-ஆக-201206:42:07 IST Report Abuse
Rayappan Nanjappan makkale engal paguthi somanuril oru group 10000 rupai muthalidu seithal matham 850 rupai kodupathaga semayaga vasul nadadkirathu ithai ketka all illaiya
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
18-ஆக-201210:22:48 IST Report Abuse
A R Parthasarathyசோமனூரில் நடக்கும் இது போன்ற தில்லு முல்லுகள் பல இடங்களில் நடக்கின்றன. அரசின் பார்வைக்கு வரும்போது நடவடிக்கை எடுப்பார்கள். எத்தனையோ தில்லுமுல்லுகள் அரசின் பார்வைக்கு வராமலே கொள்ளையர் கல் பணத்துடன் காணாமல் போகிறார்கள் என்று பல முறை - திரும்பவும் சொல்கிறேன் பலமுறை - செய்திகளை படித்த பிறகும் மக்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றால் தவறு யாருடையது. மக்களின் பேராசை ஒழிய வேண்டும். தனிமனித ஒழுக்கம் வளரவேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வாசுதேவன் - Doha,இந்தியா
18-ஆக-201212:18:18 IST Report Abuse
வாசுதேவன்வேறன்ன.. பேராசை.. சீக்கிரத்தில் பணக்காரன் ஆகணும்.. மஞ்சள் துண்டிடம் பாடம் படிக்கணும் 90 வயதிலும் அயராமல் சொத்து சேர்க்க வேறு யாராலும் முடியாது ( உளியின் ஓசை , பெண் சிங்கம்..போன்ற உலக புகழ் பெற்ற திரைப்படங்கள் எழுதி சம்பாதித்தது....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
18-ஆக-201206:40:47 IST Report Abuse
N.Purushothaman அரசின் அனுமதி இல்லாமல் இது போன்ற தொழில்கள் எப்படி தொடங்கப்பட்டன என்பது புரியாத புதிராக உள்ளது.....அதே போல் அவர்களுக்கு கவர்ச்சி விளம்பரம் செய்ய துணை போன நடிகர்,நடிகைகள் மற்றும் டி .வீ நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..... எப்போதுமே பட்டு தெரிந்து கொள்வதற்கு பதிலாக இது போன்ற அவலங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறா வண்ணம் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
18-ஆக-201210:30:51 IST Report Abuse
A R Parthasarathyமுற்றிலும் உண்மை. ஈமு கோழி விவகராத்தில் நடிகர்களின் விளம்பரங்களால் தான் இந்த பிசினஸ் இந்த அளவிற்கு சூடு பிடித்தது. இப்போது மட்டிகொண்டார்கள். அடுத்து ரியல் எஸ்டேட் பிசினஸ். அதிலும் நடிகர்களின் ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. இதற்க்கு ஊடகங்களும் துணை போகின்றன. கூடிய விரைவில் இதிலும் மிகபெரிய தில்லுமுல்லுகள் நடந்தததாக செய்திகள் வெளிவர போகின்றன. மக்கள் இப்போதே சுய கட்டுபாட்டோடு இருந்து கொண்டு தங்கள் பணத்தை சரியான இடங்களில் முதலீடு செய்ய வேண்டும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ravi Chandran - Panaji,இந்தியா
18-ஆக-201217:19:33 IST Report Abuse
Ravi Chandranஒரு நடிகர் சாப்பாட்டுக்கு பதில் வேறு ஏதாவது சாப்பிடுங்கள் என்று சொன்னால் இவர்கள் அதை பின்பற்றுவார்களா,அவர்கள் தொழில் நடிப்பது இதையே நீங்கள் ஈமுவில் முதலீடு செய்யாதீர்கள் என்று நடிக்க சொன்னாலும் அவர்கள் நடித்து கொடுப்பார்கள்...அதற்காக அவர்களை குறை சொல்வது தவறு...பேராசை மற்றும் முட்டாள்தனமே இதற்கு காரணம்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.