75 year old tree replace to another place | 75 வயது மரத்தை வேருடன் பெயர்த்து மற்றொரு இடத்தில் வளர்க்க திட்டம்: திருப்பூரில் 22ம் தேதி நடக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

75 வயது மரத்தை வேருடன் பெயர்த்து மற்றொரு இடத்தில் வளர்க்க திட்டம்: திருப்பூரில் 22ம் தேதி நடக்கிறது

Added : ஆக 18, 2012 | கருத்துகள் (11)
Advertisement
 75 வயது மரத்தை வேருடன் பெயர்த்து மற்றொரு இடத்தில் வளர்க்க திட்டம்: திருப்பூரில் 22ம் தேதி நடக்கிறது

திருப்பூர்: திருப்பூரில் 75 வயது மரத்தை வேருடன் "அலேக்'காக தூக்கிச்சென்று வேறு இடத்தில் நட்டு வளர்க்கும் முயற்சி, வரும் 22ம் தேதி நடைபெறகிறது.

திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஊத்துக்குளி ரோடு டி.எம்.எப்., மருத்துவமனை அருகே, ரயில்வே சுரங்க பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதன் பின், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்ந்த பணிகள் துவங்க உள்ளன. அப்போது, ரயில்வே சுரங்க பாலத்தின் தெற்கிலிருந்து கோர்ட் வீதிக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால், அங்கிருந்த சிறிய விநாயகர் கோவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது. கோவில் அருகே, 75 வயதுள்ள வேம்பு மற்றும் அரச மரங்கள் பின்னி பிணைந்து வளர்ந்துள்ளன. அம்மரங்களை வெட்டி அகற்ற ரயில்வே துறை முடிவு செய்திருந்தது.

ஆனால், அம்மரங்களை வெட்டக்கூடாது. வேருடன் பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் நட்டு வளர்க்க வேண்டும், என, திருப்பூரிலுள்ள "நிப்ட்-டீ' கல்லூரி கூறியது. அப்பணியில் ஈடுபட அனுமதியும் கோரியது; ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து விட்டது.

நிப்ட் - டீ கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது
:75 வயதான வேம்பு-அரசு என இரு மரங்கள் ஒன்றாக பின்னி பிணைந்து வளர்ந்துள்ளன. தாய் மண்ணுடன் மரங்களை தோண்டி எடுத்துச்சென்று, "நிப்ட்-டீ' கல்லூரி வளாகத்தில் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பல ஆண்டுகள் வளர்ந்த மரத்தை வெட்டுவது ஒரு நிமிட வேலை; ஆனால், மரத்தை வளர்ப்பது மிகவும் சிரமமானது. வேளாண் துறை நிபுணர் குழு உதவியுடன், இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வரும் 22ம் தேதி மரங்கள் தோண்டி எடுக்கப்படும். "டிரக்'கில் எடுத்துச்சென்று, நடும் பணிக்காக, இரண்டு"கிரேன்' வாகனங்களை இலவசமாக வழங்கவும் ஒரு நிறுவனம் தானாக முன்வந்துள்ளது.மரம் தோண்டி எடுக்கும்போது, அவற்றின் கிளைகள் அகற்றப்பட்டு, மண்ணில் நடப்படும். கிளைகளில் இருந்து 10 மரங்களை உருவாக்கவும் வேளாண் துறை நிபுணர்கள் முன்வந்துள்ளனர். இதேபோல், வெளிநாடுகளிலும், இந்தியாவில் சில இடங்களிலும் ஏற்கனவே நடந்துள்ளதாக வேளாண் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iyappan Vallinayagam - Tirunelveli,இந்தியா
19-ஆக-201218:45:45 IST Report Abuse
Iyappan Vallinayagam நல்ல விசயம்தான்
Rate this:
Share this comment
Cancel
M. ESAKKIMUTHU - Tuticorin,இந்தியா
19-ஆக-201215:40:55 IST Report Abuse
M. ESAKKIMUTHU வாழ்த்துக்கள் "நிப்ட் -டீ" மேனாஜ்மென்ட்.
Rate this:
Share this comment
Cancel
Tamilkizham - கன்னியாகுமரி,இந்தியா
19-ஆக-201213:57:14 IST Report Abuse
Tamilkizham சுசீந்திரம் பாலத்திற்க்கு அருகில் உள்ள புளிய மரத்தையும் இதே முறையில் பாதுகாத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்........
Rate this:
Share this comment
Cancel
Ganesh Ramakrishnapillai R - Tiruchirapalli (Trichy),இந்தியா
18-ஆக-201217:56:50 IST Report Abuse
Ganesh Ramakrishnapillai R வெல் டன் . புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
vaan - Bangalore,இந்தியா
18-ஆக-201216:45:37 IST Report Abuse
vaan வரவேற்கவேண்டிய விஷயம் பொது நலன் கருதி "வெட்டிதான் ஆக வேண்டும்" என்று உள்ள மரங்களை இத்திட்டத்தின்கீழ் கொண்டுவந்து அனைத்து மரங்களையும் காப்பாற்றி விடலாம். இதனால் வாயு மண்டலம் சுத்திகரிக்கப்படுவதுடன், மழையும் பருவம் தவறாமல் பொழிய நிறைய வாய்ப்புள்ளது. பசுமையை நேசித்தால் சுகாதாரமாக வாழலாம். இப்பணியை செய்ய முன்வந்த "நிப்ட்-டீ" கல்லூரிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
18-ஆக-201213:45:43 IST Report Abuse
Kankatharan  நல்ல விசயம்தான் ஆனால் இங்கேயும் ஊழல் அணுகாமல் பார்ர்த்துக்கொள்ல வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஆக-201209:54:26 IST Report Abuse
Pannadai Pandian சீனாவில் நெடுஞ்சாலைகளிலும் பூங்காக்களிலும் பெரிய ஹோட்டல் வளாகம், அரசு அலுவலகம் சாதாரண ரோடுகளின் தென்படும் வரிசையாக உள்ள மரங்கள் யாவும் ஓரிடத்தில் இருந்து பிடுங்கி இந்த இடங்களில் பதித்ததே. இந்தியாவில் இந்த தொழிற்நுட்பம் இன்னும் வளரவில்லை. நமக்கு அஸ்தேடிக் சென்ஸ் மிகவும் குறைவு. சீனர்கள் இதற்கென்றே நாற்றாங்கால் நிறைய வைத்திருக்கிறார்கள். மரத்தை நட்ட பின் அதற்கு ஒரு இன்ஜெக்ஷன் கொடுப்பார்கள். அது மரத்தை உயிருடன் வைத்திருக்கும். குளிர் காலங்களில் மரத்தின் அடிப்பாகத்தை கிளைகள் வரை வைக்கோல் பிரியால் சுற்றி அதன் மேல் பிளாஸ்டிக் தாள்களை சுற்றி விடுவர். இது எப்படிப்பட்ட குளிரியும் தாங்கும் சக்தி உள்ளது. மறுபடியும் ஸ்ப்ரிங் சீசனில் இந்த பிரிகளை பிரித்து விடுவார்கள். குப்பை அள்ளுதல், இது போன்ற மரங்களை பாதுகாப்பது, ரெகுலராக தண்ணீர் வழங்குவது, வெய்யல் காலங்களின் ரோட்டில் தண்ணீரை பீச்சி அடிப்பது போன்ற நகராட்சிகளின் பணிகளை மிகுந்த சிரத்தையுடன் நிர்வாகம் செய்கிறது. அதை நாம் கற்று கொள்ள வேண்டும். நம் ஊர் போல பார்க்குகளில் மாடுகளை கட்டி வைப்பது, அங்கு கோழி மேய்ப்பது, ஆடுகளுக்கு மரங்களில் உள்ள கிளைகளை வெட்டி போடுவது போன்ற நற் காரியங்களை இவர்கள் எப்போதும் செய்வது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Karthikeyan Chandrasekar - Tiruchirapalli (Trichy),இந்தியா
18-ஆக-201209:15:53 IST Report Abuse
Karthikeyan Chandrasekar Wow.....Nice to hear like this.....great idea :) :) superb and wishes to them from me :)
Rate this:
Share this comment
Cancel
ramesh - coimbatore,இந்தியா
18-ஆக-201206:37:13 IST Report Abuse
ramesh நல்ல முயற்சி, நல்ல முன்னுதாரணம். இதை கோவையில் பின்பற்றி இருந்தால் அவினாசி சாலை, மேட்டுபாளையம் சாலை விரிவாக்கத்தின் போது எண்ணற்ற மிக வயதான மரங்களை வெட்டியதை தவிர்த்து இருக்கலாம். 50 ஆண்டு (எனக்கு தெரிந்து) மேற்பட்ட மரம் சித்ரா அருகில் இருந்து நீக்கபட்டது மிகுந்த துயரத்தை அளித்தது. அந்த மரம் பல GPT PSG முன்னாள் மாணவர்களின், ஏன் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் பால் வண்டிகாரர்களின் ஞாபக சின்னமாகவே இருந்தது என்பதை மறக்க முடியாது. இனியாவது இது போன்று நடக்காமல் இருக்கட்டும். அழிப்பது எழிது, ஆக்குதல் எவ்வளவு கடினம் என்பதை உணர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
18-ஆக-201202:48:09 IST Report Abuse
ganapathy சூடானில் மரத்தை பிடுங்கி நடுவது சாதாரணமாக நடக்கும் விஷயம். இந்த மரம் பெரியதும் மற்றும் நிறைய வேர் பூமியில் பரவி இருக்கும். இந்த முயற்சி பாராட்ட தக்கது. இதை மரம் வெட்டு வதற்கு பதிலாக எல்லா இடத்திலும் செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை