18 தனிப்படைகள்:
கிரானைட் தொழிலில் முறைகேடுகள் குறித்து, மதுரை கலெக்டர், அன்சுல் மிஸ்ரா உத்தரவுப்படி, துணை கலெக்டர் குணசேகரன், கலால் உதவி இயக்குனர் ரவீந்திரன் தலைமையில், 18 தனிப்படைகள் விசாரணை நடத்தின. இதில், முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் உட்பட, முறைகேட்டில் ஈடுபட்டதாக, பல கிரானைட் நிறுவனங்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டன. பல கோடி மதிப்புள்ள, கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடுகள் தொடர்பாக, பி.ஆர்.பழனிச்சாமி, மனைவி விஜயலட்சுமி, மகன்களும், கிரானைட் நிறுவனங்களின் பங்குதாரர்களுமான சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் உறவினர் ஒருவர் மீது, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பி.ஆர்.பழனிச்சாமி உட்பட, அனைவரும் தலைமறைவாக இருந்தனர்.எஸ்.பி.,யிடம் சரண்:
இவர்களை கைது செய்ய, போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, குற்றப்பிரிவு, ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் மேற்பார்வையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பி.ஆர். பழனிச்சாமி, போலீஸ் எஸ்.பி., முன் சரணடைவதாக வழக்கறிஞர்கள் மூலம் பத்திரிகை நிருபர்களுக்கு, நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிருபர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். நேற்று பகல், 12.30 மணிக்கு வழக்கறிஞர்கள், புடைசூழ, பி.ஆர்.பழனிச்சாமி எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். பின், அவர், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் முன், பகல், 1 மணிக்கு சரணடைந்தார்."நான் குற்றமற்றவன்...:
மீண்டும் தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' என, பழனிச்சாமி சார்பில், விளக்கக் கடிதம் ஒன்றை, எஸ்.பி.,யிடம் வழக்கறிஞர்கள் கொடுத்தனர். கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அவரை, ரகசிய இடத்திற்கு, தனிப்படை போலீசார் அழைத்சரணடைந்த பின்னணி:
தலைமறைவாக இருந்த பி.ஆர்.பழனிச்சாமியை பிடிக்க, அவருக்கு நெருக்கமானவர்களை பட்டியலிட்டு, அவர்களது வீடுகளில், சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். 23 பேரின் வீடுகள் தொடர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார், "போனில் பழனிச்சாமி தொடர்பு கொண்டால், சரணடையும்படி வலியுறுத்துங்கள்' என்று தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த வழக்குகளை பதிவு செய்யத் துவங்கிய போலீசார், அவரது சொத்து, வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அவர் சரணடையாதபட்சத்தில் மேலும் சில அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலும் சோதனையிட, போலீசார் முடிவு செய்தனர். இதனால், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்த பின், பி.ஆர்.பழனிச்சாமி சரணடைய முடிவு செய்துள்ளார். அதிலும், கோர்ட்டில் சரணடைந்தால், மீண்டும் போலீசார் கஸ்டடியில் எடுத்து, கடுமையாக விசாரிப்பர்; விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தால், வழக்கு விசாரணையின் போது, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு அமையும் என்பதால், எஸ்.பி., அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.யார் இந்த பி.ஆர்.பி.,:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி பின்னத்தேவர் மகன் பி.பழனிச்சாமி,60. இவர், முன்பு, பெரியாறு - வைகை பிரதான கால்வாய் பணியின் ஒரு பகுதியின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவரது மனைவி விஜயலட்சுமி. மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மகள் சிவரஞ்சனி. திருச்சி கல்குவாரி ஒன்றில், கிரானைட் கிடைக்கும் என திருச்சி அரசியல் புள்ளி ஒருவர் தோண்டினார். கிரானைட் கிடைக்கவில்லை. கடும் நஷ்டம் ஏற்பட்டது. அதனை பழனிச்சாமி குறைந்த விலைக்கு வாங்கினார். அக்குவாரியில் ஜல்லி,வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பி.ஆர்.பி. பஸ் வந்தா உடனே நிரம்பி விடும். மதுரை - போடி , மதுரை - கம்பம் AC பஸ் சாதாரண கட்டணத்தில் விட்டாரு, அப்போவும் அவருக்கு லாபம் தான், ஆனா இந்த அரசு பஸ் மட்டும் ஏன் நஷ்டத்தில் ஓடுது. புத்தி சாதுரியமா தொழில் , கடினமான உழைப்பு இருந்தால் வளர்ச்சி தானாகவே இருக்கும். எங்க ஊருப்பக்கம் வசந்த விழா என்ற ஒரு நிகழ்ச்சி சமிபகாலங்களில் நடந்து வருகிறது. என்ன என்றால் ஒரு காரணமும் இல்லாமல் மொய் அல்லது செய்முறை வாங்குவது, ஒரு கூலி தொழிலாளியின் வசந்த விழாவில் வந்த செய்முறை பத்து லட்சம் ரூபாய். அப்போ தமிழ்நாட்டிலேயே கிரனைட் மன்னனிடம் எத்தனை கோடி சொத்து இருக்க வேண்டும். அவர் சரியான முறைப்படியான தொழில் தான் செய்தார், ஆனால் அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் அவரிடம் பிடுங்கி தின்றார்கள். சட்டப்படி பார்த்தால் அவர்கள் மேல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ஆர்.பி. மேல் எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது. அவருடைய தொழில் மிகவும் வெளிப்படையானது. அவருக்கும் பழைய மதுரை மாவட்டத்தில் மிகப்பெரிய இனம் பின்புலமாக உள்ளது, என்பதை எந்த அரசியல் வாதியும் மறக்க வீண்டாம். அவர் எங்களுக்காக எதுவும் செய்யவில்லை இருந்தாலும் அவர் வீழ நாங்கள் விடமாட்டோம். அவர் நிரபராதி.
எங்க ஒர்ல (தேவகோட்டை) இருந்து மதுரை போகும்போது ச.ச கோட்டைக்கு அப்புறம் எவ்வளவு அழகான மலைகள் இருந்தன தெரியுமா, ரசித்தது இன்னமும் என் போன்ற அனைவரது மனதில் அழ்யாமல் உள்ளது. இப்ப மிஞ்சியது ஒத்தகடை யானை மலைதான். போன்ன்களே, இனமம், வந்துட்று, உங்களால அந்த விற்ற க்ராநிடே கற்களை திரும்ப வாங்க முடுயுமா, முதல அந்த இயற்கை வளம் (உருவாக்க முடிஊமா ), இன்னைக்கு 100 நாளிக்கு அதே கல்லு கோடி, அனாலும் திரும்ப கொடுக்க மாட்டன், PRP மெல்ல தப்பு ஒன்னு இல்ல, அறியாமை, எல்லாம் அந்த அதிகாரிகள் தான் மற்றும் அரசுதான்....
பணம்... பணம்... பணம்..... இதுதான் இன்று துப்புரவு தொழிலாளி முதல் மிகப்பெரும் கோடிஸ்வரன் வரை அனைவரின் ஒவ்வொரு நாளைய திட்டமாக உள்ளது. ஆனால் இதில் ஏறக்குறைய அனைவருமே நல்ல வழியை விட குறுக்கு வழியைத்தான் பின்பற்றுகிறார்கள். காரணம் நல்ல வழியை விட குறுக்கு வழியில்தான் பணம் சீக்கிரம் மிக அதிகமாக வருகிறது. ஆனால் இவ்வாறு வரும் பணம் 100 -கு 100 கொடுப்பவரின் மனது நொந்து அல்லது வயிறெரிந்து கொடுக்கப்படும் பணம்கத்தான் இருக்கும். இந்த பணத்தை வாங்குவோரின் குடும்பம் நன்றாக இருக்குமா? கொடுப்பவரின் வார்த்தைகள் பலித்தால் வாங்குவோரின் நிலை என்ன? இதை ஏன் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், பித்தலாட்டம் செய்யும் prp போன்ற பெரும் தொழில் செய்வோர் (இவரை விட நாட்டை ஏமாற்றிய எத்தனையோ பெரும் பணக்கார முதலைகள்) தங்கள் மனதில் வைக்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை. நாட்டையும் ஏமாற்றி, தொழிலார்களையும் ஏமாற்றி, வாங்கும் வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி, குடும்பத்துக்கும் சாபம் சம்பாதித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அப்படி பெரிய தொழிலதிபர் எனபேர் வாங்கினாலும், முகத்துக்கு நேர் மரியாதையை தருவதுபோல் தந்து பின் மானங்கட்டவர் எனும் சொல் வாங்கும் எத்தனயோ பேர் நம் நாட்டில் நடைபிணமாக வாழ்ந்து வருகிறார்கள். "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது கவிஞர் வாக்கு. இவர் போன்றோருக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், மேலும் இவரின் தொழில் சார்ந்த அத்தனை அதிகாரிகள், ஆடிடர்கள், சக தொழில் செய்வோர், ஊழியர்கள், நண்பர்கள் என பெரும் கூட்டமே இவரின் பின்னல் நிற்கும். காரணம் மிரட்டல், பணம், அன்பு, நன்றிக்கடன் என எத்தனயோ இருக்கும். இவர் போன்றோர் தான் நம் நாட்டின் சாபம். இவர்களுக்கு உதவி செய்த, செய்யும் அத்தனை அதிகாரிகளுக்கும் சேர்த்து தண்டனை பெற்று தந்தால்தான் இவர் போன்றோர் கொஞ்சம் ஒடுங்குவர். ஆனால் இதெல்லாம் நம் நாட்டில் நடக்காது. இன்னும் ஒருசில மாதங்களில் இவ்வழக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும். நாமும் எப்போதும்போல் தினமலரில் இதுபோன்ற வேறு ஒரு வழக்குக்கு இவ்வாறு வெட்டியா குமுரிகொண்டே இருப்போம். ஜெய் ஹிந்த்
ஊழலை ஒழிக்க ஒரு யோசனை. பெரும்பாலான ஊழல் மற்றும் லஞ்சம் பெருகுவது இதுபோன்ற பெரும் நிறுவனங்களால் தான். அதுமட்டுமல்லாமல் தங்கள் கடமையை மறக்கும் அதிகாரிகளாலும் எதிலும் கமிஷன் பார்க்கும் அரசியல்வியாதிகளாலும் நாடு முன்னேற்றம் அடையாமல் உள்ளது. என்னவே அரசாங்கம் பெரிய தொழில் நிறுவனங்களிற்கு வரி முற்றிலும் தள்ளுபடி செய்யவேண்டும். அதற்கு பதில் அந்த நிறுவனம் தங்கள் பகுதியில் உள்ள சாலை, சுகாதாரம், கல்வி, அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றை செய்து தரவேண்டும். இதன் மூலம் தரமான சாலை, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்றவை அந்தபகுதி மக்களுக்கு கிடைக்கும். இதனால் அரசாங்கத்திற்கு பெரும் செலவு மிச்சமாகும். உதாரணம் ஒரு சாலை இப்பொழுது அரசாங்கத்தால் போடபடுகிறது என்றால் அதன் செலவு 1 கோடி எனும் போது அதில் 50 லட்சம் மட்டுமே செலவு செய்யப்படும். இது இல்லாமல் சாலை தரமில்லாமல் இருந்தால் ஒவ்வொரு முறையும் சாலை போடும்போது அதிக கமிஷன் கிடைக்கும் அதிகாரிகளுக்கு. ஆனால் இதையே தனியார் நிறுவனத்திடம் இந்த பணியை கொடுத்தால் தங்கள் நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு மிகச்சிறப்பாக நிரந்தரமான சாலையை அமைத்து தருவர். இதன் மூலம் அரசாங்கத்திற்கு திரும்ப திரும்ப நிகழும் செலவுகள் குறையும். மேலும் இதில் எந்த ஒப்பந்ததாரரும் பயன்பெற முடியாது. அதிகாரிகளாலும் அரசாங்க பணத்தை சுருட்ட முடியாது. இது போலவே பிற துறைகளிலும் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கலாம். இதனால் அரசாங்கத்திற்கு வருவாய் அதிகரிக்கும் மற்ற நிர்வாக செலவுகள் குறையும். எப்படியும் இந்த பெரும் நிறுவனங்கள் தங்கள் உண்மையான வரவு செலவு கணக்குகளை காட்டபோவது இல்லை. பல கோடி ருபாய் லாபம் ஈட்டினாலும் நஷ்டக்கணக்கு மட்டுமே காட்டும். அதற்கு அதிகாரிகள் துணை வேறு எனவே அரசாங்கம் இந்த முறையை பின்பற்றும் போது மாநிலத்தின் அணைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி ஏற்படும்.
இவர் மீது எந்த குற்றமும் இல்லை இவர் இடங்களை விலைக்கு வாங்கித்தான் எடுத்துள்ளார். கிரனைட். is not come under the category of indian rare earth act. இவரிடம் இருந்து முறைப்படி வருமான வரி ய் வாங்கி விட்டு முறைப்படி தொழில் தொடங்க அனுமதிக்க வேண்டும். இதனால் இவரால் பல குடும்பங்கள் வாழும். கோடிஸ்வரர்கள் யாரும் பிறப்பால் கோடீஸ்வரர்கள் அல்ல. இவர் சாமி சிலை கடத்தவில்லை,கடத்தல் தொழில் செய்யவில்லை, லஞ்சம் வாங்கவில்லை,
ஆயிரம் ரூபாய் பெறாத மணலை அள்ளும் மாட்டு வண்டியை மடிக்கி பிடித்து போஸ் கொடுக்கும் கனிமவளத்துறை,பொதுபணிதுறை,வருவாய்துறை அதிகாரிகள் எவ்வளவு நாள் எங்கே போனார்கள்??. அளவுக்கு மீறி ஏற்றுமதி செய்து மத்திய அரசிடம் விருது வாங்கும் போது மாநில அரசு அதிகாரிகள் எங்கே யாருக்கு வேலை பார்த்தார்கள்?? . ஊழல என்று பிரச்னை வெளியே வந்ததும் எப்போது அரசியல்வாதியை கை நீட்டும் அரசு அதிகாரிகள் எதற்கு மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்க வேண்டும் பேசாமல் அரசியல் வாதிகளுக்கு எடுபிடி வேலை செய்ய சென்று விடலாமே. நேர்மையான அரசு அதிகாரிகள் வேலை செய்தால் மட்டுமே நாடு தலை நிமிரும்.
பெல்லாரி ரெட்டிகள் செய்தால் கொள்ளை. அதையே PRP செய்தால் கைராசியா?. எங்கு என்ன உள்ளது என்று தெரிந்துகொண்டு, திட்டமிட்டு அடித்த கொள்ளை. இவருக்கு தெரிதாது அரசுக்கு முன்கூட்டியே தெரியாமல் இருந்திருக்கலாம். இவர் தோண்டிய பின்பு அரசுகள் கொட்டமிடுகின்றன. அதையேதான் ரெட்டிகளும் செய்தார்கள். இன பழமைவாதிகளான ஹெக்டே, கரந்துவஜாலே மற்ற மதவாத பழமைவாதிகள் மற்றும் அரசியல் சட்ட குண்டர்களான பரத்வாஜ் போன்றோரால் சகிக்க முடியவில்லை. இவர்களுக்கெல்லாம் வகாலத்து வாங்கிய தினமலர், இப்போது PRP க்கு சப்பைக்கட்டு கட்ட முயல்வது ஏன்?.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.