Advertisement
வருவாயில் தி.மு.க., கட்சிக்கு முதலிடம்: அடுத்த இடத்தில் அ.தி.மு.க.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

20 ஆக
2012
00:09
பதிவு செய்த நாள்
ஆக 18,2012 23:31

சென்னை: தமிழகத்தில், தி.மு.க.,விற்கே அதிகப்படியான சொத்துகள் உள்ளன. அதிகப்படியான வருவாய் உடைய கட்சியாகவும், அக்கட்சியே திகழ்கிறது. இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க., உள்ளது.தமிழகத்தில், 1967ம் ஆண்டு முதல், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, இரண்டு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அதேநேரத்தில், இக்கட்சிகளின் வருவாயும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும், அ.தி.மு.க.,வுடன் ஒப்பிடுகையில், தி.மு.க.,விற்கே, அதிகப்படியான வருவாய் கிடைத்துள்ளது. அதிகப்படியான சொத்துகளைக் கொண்ட கட்சியாகவும், தி.மு.க., திகழ்கிறது. இருந்தாலும், அ.தி.மு.க.,வும், தன் வருவாய் மற்றும் சொத்துகளை பெருக்கிக் கொண்டே செல்கிறது. இந்த இரு கட்சிகளின், வருமான வரி கணக்கு மற்றும் இருப்பு நிலை அறிக்கையின் அடிப்படையில், இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.


அ.தி.மு.க,.வின் வருவாய், 12.14 கோடி ரூபாய்:



அதன் விவரம் வருமாறு: 2008-09ம் ஆண்டில், தி.மு.க.,வின் மொத்த ஆண்டு வருமானம், 16.81 கோடி ரூபாய். அதுவே, 2007-08ல், 2.66 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது ஒரு ஆண்டில், இந்தக்கட்சியின் வருவாய் 531 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து, தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் கூறுகையில், ""2007-08 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008-09ம் ஆண்டில் வருவாய் அதிகரித்ததற்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து தேர்தல் நிதி வசூலித்ததே காரணம்,'' என்றார். தமிழகத்தில், 2011ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெற்றதன் மூலம், அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட்டது.



இதனால், 2011-12ம் நிதியாண்டில், அக்கட்சியின் வருவாய், 12.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து, வேட்பு மனு கட்டணமாக வசூலித்த தொகையால், வருமானம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த, 2010 -11ம் ஆண்டில், அ.தி.மு.க.,வின் வருவாய், 9.74 கோடி ரூபாய். வருவாய் கணக்கு சமர்ப்பித்துள்ள, இந்தக் கட்சிகள், கட்சிகளுக்கு நிதி வழங்கிய நபர்கள், அவர்கள் வழங்கிய தொகை போன்ற விவரங்களையும் சமர்ப்பித்துள்ளன. மேலும், சொத்துகளைப் பொறுத்தமட்டில், அ.தி.மு.க.,வை விட, அதிக சொத்துகளை கொண்ட கட்சியாக, தி.மு.க., உள்ளது.


2006-07ம் ஆண்டு முதல், 2011-12ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், தி.மு.க.,வின் மொத்த சொத்து மதிப்பு, 289.85 கோடி ரூபாய். இதே காலகட்டத்தில், அ.தி.மு.க.,வின் மொத்த சொத்து மதிப்பு 258.45 கோடி ரூபாய். அதேநேரத்தில், 2007-08 ம் ஆண்டில், 40.26 கோடி ரூபாயாக இருந்த அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு, 2009-10ம் ஆண்டில், 35.97 கோடி ரூபாயாக குறைந்தது. தற்போது அ.தி.மு.க., 55.83 கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள, மற்றொரு திராவிடக் கட்சியான வைகோவின் ம.தி.மு.க., இந்த இரண்டு கட்சிகளை ஒப்பிடுகையில், குறைந்த வருவாய் கொண்டதாக உள்ளது. 2009-10ம் ஆண்டில், இக்கட்சிக்கு கிடைத்த வருவாய் 5.58 கோடி ரூபாய். ஆனால், 2008- 09ம் ஆண்டில் 70 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. விஜயகாந்தின் தே.மு.தி.க., 2011-12ம் ஆண்டில் மட்டுமே, வருவாய் விவரங்களை சமர்ப்பித்துள்ளது. அதில், 79 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இக்கட்சியின் மொத்த சொத்து மதிப்பு, 4.44 கோடி ரூபாய். ஆனாலும், சொத்துகள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. அதுபோல், ம.தி.மு.க.,- பா.ம.க.,வின் சொத்துகள் பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (41)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayan - Salem,இந்தியா
24-ஆக-201213:18:14 IST Report Abuse
jayan வருவாயில் முதலிடம் எடுப்பதுனா சும்மாவா எவ்வளவு ஊழல் செஞ்சு இருக்கோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Prabu Arumugam - ariyalur,இந்தியா
20-ஆக-201210:40:19 IST Report Abuse
Prabu Arumugam உலகிலேயே, காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான் முன்னணியில் இருப்பார்கள்.ரெண்டு கழகமும் வேறு வேறு அல்ல பெயரளவில் மட்டுமே அவர்கள் வேறு கட்சி உண்மையில் மக்கள் காசை அடிப்பதில் ஒருத்தருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.. மக்கள் வேக்கமின்ரி மாத்தி மாத்தி அவர்களையே நம்புவது கேவலமாக உள்ளது..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
20-ஆக-201201:11:13 IST Report Abuse
Bebeto உலகிலேயே, காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான் முன்னணியில் இருப்பார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
anand vijay - Chennai,இந்தியா
19-ஆக-201219:47:00 IST Report Abuse
anand vijay நம்ம விஜயகாந்த் கட்சிக்கு எவ்வளவு நு சொல்லலையே....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
19-ஆக-201219:44:08 IST Report Abuse
SHivA ரெண்டு கழகமும் வேறு வேறு அல்ல பெயரளவில் மட்டுமே அவர்கள் வேறு கட்சி உண்மையில் மக்கள் காசை அடிப்பதில் ஒருத்தருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.. மக்கள் வேக்கமின்ரி மாத்தி மாத்தி அவர்களையே நம்புவது கேவலமாக உள்ளது..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
19-ஆக-201218:55:04 IST Report Abuse
Ramasami Venkatesan கட்சி தொண்டர்களும் இதை அறிவார்களா. கட்சி சொத்து பற்றி. நாளை கட்சி சிதறும்போது தொண்டர்களுக்கும் சொத்தில் பங்கு உண்டல்லவா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Gajini Muhd - Chennai,இந்தியா
19-ஆக-201218:03:37 IST Report Abuse
Gajini Muhd தி மு க வில் வாரி சுருட்டும் வசூல் கர்த்தாக்கள் மக்களை ,வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் வாங்கிய தில் எவ்வளவு கட்சிக்கு என்று கணக்கு பார்த்தாலே கால்குலடருக்கும் தலை வலிக்கும் ....உலகிலேயே பெரிய சொத்து சேர்த்த கட்சி தி மு க என்று சொல்லுங்கள் > அ தி மு க 2 வது மக்களை விலைக்கு வாங்கும் கட்சி .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
madhu Rajendran - chennai ,இந்தியா
19-ஆக-201217:39:46 IST Report Abuse
madhu Rajendran சாதாரண மனிதனை போன்று அல்லாது சாமர்த்தியமாக தெரிவிக்கப்பட்டுள்ள சொத்து கணக்கே நமக்கு மலைப்பை தருகிறது எனினும் , இனி எந்த கட்சிதான் ஆட்சிக்கு வரணும் என்கிற சிந்தனையை நமது இளைஞர்கள் மனதில் உலவ , இது வழி செய்யும் என நம்பலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
19-ஆக-201215:57:54 IST Report Abuse
V Gopalan Only Income shown against DMK/AIADMK, but failed to give the sources of income. If income is raised in three digits because of MLA/MPs ion, from where these persons got the income, sources etc. Only batons are changed but Tamilnadu remain backward to Kamaraj period. Yes, in one aspect Tamilnadu improved because of these two dravidian parties rule is - Kidnap, Murder, Land grabbing, Decoit, government officials from top to bottom party affiliations, heavy corruption in govt offices sharing with their ministers. If these two parties run for another one decade, certainly the rowdy sheeters will have a safe heaven. These two dravidian parties can give an advertisement at the cost of public exchequer depicting their past and present income with the sources, the business with which their party cadres derived and also the position of general public&39s status, road conditions, water resources, how much commission per dealing they had from contractors, liquor barons etc - saying INCREDIBLE INDIA. Also, present CM can also include a line as to how public money is being drained for the last 15 years for her personal graft case being held at Bangalore, background for submission resignation of Govt Advocate who is presenting case, let it be transparency on her dealings. Kudos for Democracy. Also, Print/Elec media can give the assets of the so called mother of invention of corrupon - Congress, the assets of their leader, prince, princess, son in law also, let the Nation know as to how Democracy functions.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
SIVAKUMAR NEYVELI - kuwait,குவைத்
19-ஆக-201215:47:05 IST Report Abuse
SIVAKUMAR NEYVELI வருவாய் என்பதை எடுத்துவிட்டு ஊழல் என்று போட்டுப்பார்த்தால் மிகச்சரியாய் இருக்கும்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.