Karunanidhi accuses Jayalalithaa | வசதிக்கு ஏற்ப வழக்கை இழுத்தடிக்கின்றனர்: கருணாநிதி குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வசதிக்கு ஏற்ப வழக்கை இழுத்தடிக்கின்றனர்: கருணாநிதி குற்றச்சாட்டு

Updated : ஆக 20, 2012 | Added : ஆக 18, 2012 | கருத்துகள் (95)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: "அனைத்து சட்டங்களையும், தங்கள் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப, துஷ்பிரயோகம் செய்தவர்கள் தான், சொத்துக்குவிப்பு வழக்கினையும், இழுத்தடிக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.


மேல்முறையீடு மூலம் நாட்கள் கடத்தல் :

ஜெயலலிதா மீது, கடந்த 1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஏற்கனவே, இந்த கோர்ட்டில், இரண்டு நீதிபதிகள் விசாரித்த பின், தற்போது விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி மல்லிகார்ஜுனையாவும், இம்மாதம் ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கில், விளக்கத்திற்கு மேல் விளக்கம்; கேள்விக்கு மேல் கேள்வி; வாய்தாவிற்கு மேல் வாய்தா கேட்டே, நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களது கோரிக்கைக்கு எதிராக தீர்ப்பு வரும்போது, மேல்முறையீடு செய்து நாட்களை கடத்தி வருகின்றனர். இறுதியாக, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கே, தகுதியில்லை என்று ஜெயலலிதா தரப்பினர் முறையிட, "அந்த நீதிபதிக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா' என்ற விசாரணை தான், தற்போது கர்நாடகா ஐகோர்ட்டில், நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக, ஆரம்பம் முதல் தொடர்ந்து வாதிட்டு வரும், மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், அவர் சந்தித்த நெருக்கடிகள், மிரட்டல்களை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில், மாரியப்பன் என்பவரின் மேல் முறையீட்டு மனு, 14 ஆண்டுகள் நிலுவையில் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், மூன்று மாதங்களுக்குள், விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, 14 ஆண்டுகள் நடந்த வழக்குக்கு என்றால், 16 ஆண்டுகளாக நடக்கும் ஜெயலலிதா தரப்பினரின், சொத்துக்குவிப்பு வழக்குக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா. இவ்வாறு கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar M - vellore,இந்தியா
20-ஆக-201207:23:06 IST Report Abuse
Baskar  M ஏய் இங்க கருத்து எழுதுற கந்தசாமிகளா உங்கம்மா குட்ட்ரமற்றவர்ணா எதுக்குடா பயபடுது , போய் கோர்ட்டுல நிரபராதின்னு நிரூபிக்க வேண்டியதுதானே . இந்த பொம்பளைய கோர்டுக்கு கூட்டிட்டு வரவே எங்களுக்கு 15 வருஷம் ஆச்சு. சும்மா லூசு தனமா கருத்து எழுதுராணுக . கருணாநிதி தப்பான வழில சொத்து வச்சுருக்கர்ணா அவர்மேலையும் கேசு போடு அவரு இந்த பொம்பள மாதிரி வாய்தா வாங்காம வழக்க சந்திப்பாரு. வெவரம் தெரியாம மடத்தனமா எழுதுறீங்க. சப்போர்ட் பண்றதுக்கும் ஒரு நியாயம் வேணாம். மடையன்க.
Rate this:
Share this comment
Cancel
A.Muralidaran - Chennai,இந்தியா
19-ஆக-201219:04:13 IST Report Abuse
A.Muralidaran p r p யை நெருங்க நெருங்க இப்பிடித்தான் எதாவது வரும்.
Rate this:
Share this comment
இரா. சந்திரன் - தமிழகம்,இந்தியா
20-ஆக-201200:06:54 IST Report Abuse
இரா. சந்திரன்சரியாக சொன்னதற்கு ஒரு சபாஷ்.....
Rate this:
Share this comment
Cancel
Devakumar James - Kadatchapuram,இந்தியா
19-ஆக-201217:46:28 IST Report Abuse
Devakumar James சரி.. சரி.. எனக்கு ஒரு விஷயம் வெளங்கவே மாட்டேங்குது.. வெவரம் தெரிஞ்சவங்க..அல்லது மரியா அல்போன்ஸ்.. யாராவது கொஞ்சம் வெளக்குங்களேன்..கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மேல நெறையா கேஸ் போட்டாருல்ல.. அதுல எத்தன கேசுல எத்தன பேருக்கு தண்டனை கிடைச்சிச்சி.. எத்தன கேச வாபஸ் வாங்குனாங்க.. சொத்து குவிப்பு வழக்கைத் தவிர மற்ற கேசுல்லாம் என்னாச்சி?
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
19-ஆக-201214:55:08 IST Report Abuse
Ramesh Rajendiran கனிமொழிக்கு kalaigner டிவி இல் பங்குகள் மட்டுமே உள்ளது ராஜா சம்பாதபட்ட எல்லா மந்திரிகளுக்கும் தெரிந்து தான் 2G லிசென்சே முன்கொட்டியே கொடுத்தார்,, மேற்கண்ட காரணங்களினால் அவர்கள் குற்றவாளிகள் இல்லை,, ஆனால் சசிகலா நிர்வாகத்தில் ஜெயலலிதா பெயரில் சசிகலா வாங்கினால் அதற்கு ஜெயலலிதா பொறுப்பு,, சட்டம் கருணாவுக்கு வேற ஜெயலலிதாவுக்கு வேற இவரின் பேச்சுகளையும் வசனங்களையும் மக்கள் புறக்கணித்து 2 வருடங்கள் ஆகியது தெரிந்தும் , மீண்டும் மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கிறர..
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
19-ஆக-201214:34:30 IST Report Abuse
ganapathy ஐயா சர்க்காரியா கமிசன் என்ன ஆச்சு./ நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருகன்னு சொன்னதோட போச்சு சரியா.
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
19-ஆக-201213:39:50 IST Report Abuse
Srinath தலைவா. நம்ம வரலாறு மறந்துட்டு இப்பிடி அடுத்தவங்கள பாத்து கைய காட்டலாமா? நாம மத்திய அரசுல நெலைச்சி நிக்கறதுக்கு காரணமே நம்ம கனி, ராசா மேல வேறு ஏதாவது எக்குதப்பா வழக்கு வந்துடப்படாது அப்டீங்கறதுதானே.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
19-ஆக-201213:05:36 IST Report Abuse
Ravichandran என்ன பண்றது தலிவா உங்கள மாதிரி உங்க குடும்பத்துல உள்ள ரெண்ட்யிர்த்து சொச்ச சொந்தங்கள் மாதிரி, அடிச்ச மற்றும் திருடுன ஆதரமே இல்லாம, பாத்துகற தெறமை இல்லாமதான் மாட்டிகிட்டு இந்த ரெண்டு பொம்பளையும் முளிகுதுங்க. பதினாறு வருஷம் இந்த கேஸ், ஆன உங்க வீராணம் கேஸ் சர்கரிய பட்டம் கொடுத்த கேஸ், இந்திரா காந்திய போட்டுத்தள பார்த்த கேஸ். இதுக்கும் தான் நாற்பது வருசமா இன்னும் ஒரு ஆணியும் புடுங்காம வட்சுருகோம். கலவங்கரதுக்கு நீ உபயோகிச்ச ட்ரிக்ஸ் எல்லாம் நெனச்சி பார்த்த, உம் முஞ்சிய பார்த்த உடனே வாந்தி வருது பெருசு. கொடி வீரன், தன்சானிய
Rate this:
Share this comment
Cancel
Pamaran - DOHA,கத்தார்
19-ஆக-201212:58:09 IST Report Abuse
Pamaran இதே கருத்துக்களை பேஸ் பு க்கிலும் விடாது பதி யுங்கள் அன்பர்களே
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
19-ஆக-201212:52:43 IST Report Abuse
Sundeli Siththar எங்க ஸ்டாலின் ஐயாவை பாருங்க... நில ஆக்கிரமிப்பு வழக்கு என்றவுடன், முதல்வர் மீது ஒரு குற்றசாட்ட கூறி, கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கொடுத்து, ரெண்டு நாளைக்கு முதல் பக்க செய்தியாக்கி, என்றும், வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து தான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று கூறி, சத்தம் போடாமல், வழக்கு தொடுத்தவருக்கு தரவேண்டிய சில பல கோடிகளை சத்தமில்லாமல் கொடுத்து, காலில் விழுந்து சரணாகதி அடைந்து அடுத்த வழக்கு வரும்போது சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று திரும்ப உதார் விடுகிறார்...
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-ஆக-201215:22:41 IST Report Abuse
villupuram jeevithanகுட்டி பதினாறு அடி பாயாதா?...
Rate this:
Share this comment
Cancel
SIVAKUMAR NEYVELI - kuwait,குவைத்
19-ஆக-201212:52:08 IST Report Abuse
SIVAKUMAR NEYVELI ஜெயலலிதா செய்கின்ற தவறுகளை கலைஞரோ அல்லது விஜயகாந்தோ மட்டுமே மக்களுக்கு சுட்டிக்காட்ட முடியும் என்பதை நண்பர்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.ஆளுங்கட்சியைப்பற்றி எதிர்கட்சிகள்தான் விமர்சனம் செய்யமுடியும் இல்லையென்றால் நடுநிலையான பத்திரிக்கைகள் அதை மக்களுக்கு சுட்டிக்காட்டவேண்டும்.இங்கே உள்ள கருத்துக்களை படிக்கும் போது தவறே செய்யாத நபர்தான் அடுத்தவங்க தவறை சுட்டிக்காட்ட தகுதியான நபர் என்றால் இங்கே நான் உட்பட யாருக்குமே அந்த தகுதியில்லை என்பதை நான் உணர்ந்து கொள்ளவேண்டும்.கலைஞர் சொன்னார் என்பதற்காக அவர் சொன்னவற்றை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அம்மா மீது தவறு இல்லையென்றால் எதற்காக வழக்கை 16 ஆண்டுகாலம் இழுத்தடிக்கிறார்.இதனால் அரசாங்க பணம் எவ்வளவு செலவாகிறது? இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது.கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் சாதாரண ஒரு அரசாங்க ஊழியர் ஒரு ரூ500 அ 1000 லஞ்சம் வாங்கி படிபட்டால் உடனடியாக அவரை சிறையில் அடைத்துவிடுகிறோம். ஆனால் இந்தியா முழுவதும் எந்த ஒரு அரசியல்வாதியாவது தண்டிக்கப்பட்டிருக்கிறாரா?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஆக-201216:46:23 IST Report Abuse
தமிழ்வேல் சரியான கருத்து......
Rate this:
Share this comment
s.irudayam amburajan - TRICHY,இந்தியா
19-ஆக-201217:02:55 IST Report Abuse
s.irudayam amburajan திரு மு க அவர்களின் ஆதங்கம் அவர்களை உள்ளே வைத்துவிட்டால் நாம் செய்த செய்கின்ற செயபோகிற ஊழலை ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒன்றும் இல்லமேல் செய்துவிடலாம் என்பது மட்டும் தான் . பத்துவருடமாக மத்தியில் ஆட்சில் இருந்தும் காவேரி நடுவர் தீர்பை கெசட்டில் வெளியிடாமல் குடுமத்தை வளபடுதுவதில் மட்டும் அக்கறை கட்டுவதில் இருந்து மக்கள் அவர்கள் கொள்கைகளை புரிந்து கொண்டு விட்டார்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை