பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கை தாக்கல் செய்வதா? காங்கிரஸ் பாய்ச்சல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ""சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக, பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த விஷயத்தில், தனக்குள்ள அதிகார வரம்பை மீறி, தணிக்கை அலுவலகம் செயல்படுகிறது,'' என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, காட்டமாக தெரிவித்து உள்ளார். "ஸ்பெக்ட்ரம்' ஊழலை மிஞ்சும் அளவுக்கு, நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், பார்லிமென்ட்டில், நேற்று முன்தினம், அறிக்கை தாக்கல் செய்தது. இந்த முறைகேட்டின் மூலம், அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மற்ற எதிர்க்கட்சிகளும், இந்த முறைகேட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளன.

தெலுங்கு தேசம் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் நம நாகேஸ்வர ராவ் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில், அந்த துறையின் பொறுப்பை, பிரதமர் மன்மோகன் சிங் தான், கவனித்து வந்துள்ளார். எனவே, அவருக்கு தெரிந்தே, இந்த முறைகேடு நடந்ததா அல்லது அவரது கவனத்துக்கு வராமல், முறைகேடு நடந்தததா என்பதை, அவர் விளக்க வேண்டும். இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமருக்கு உள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள, மிகப் பெரிய வருவாய் இழப்புக்கு பொறுப்பேற்று, தன் பதவியை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு நம நாகேஸ்வர ராவ் கூறினார்.


பாய்ச்சல்:

இதற்கிடையே, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் கூறிய குற்றச்சாட்டுக்கு, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:

மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், தனக்குள்ள அதிகார வரம்பை மீறி, செயல்படுகிறது. அறிக்கை தயாரிப்பதில், இதற்கு முன் பின்பற்றிய நடைமுறைகைளை, கணக்கு தணிக்கை அலுவலகம் பின்பற்ற வேண்டும். அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக கூறி, தொகைகளில், பூஜ்ஜியங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, யூகத்தின் அடிப்படையில், கணக்கு தணிக்கை அலுவலகம் கூறியதை, சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தாலும், கணக்கு தணிக்கை அலுவலகம் கூறிய இழப்பீட்டு தொகை குறித்து, சுப்ரீம் கோர்ட், எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.


பிரதமர் மீது பழி சுமத்துவதா?

மத்திய மின் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பாக, மதிப்பீடாக ஒரு தொகையை, கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தொகை, மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்த விஷயங்கள், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவில் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு, பிரதமர் மீது பழி சுமத்துவது, எந்த வகையிலும் சரியானது அல்ல. இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (43)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
20-ஆக-201201:52:10 IST Report Abuse
Sundeli Siththar ஐயா.. பகவானே... 2G அலைவரிசையை மீண்டும் ஏலத்திற்கு விடும்போது ஒரு அலைகற்றை பெற 14500 கோடி ரூபாய் என்று அரசு நிர்ணயித்தது எதனால்? TRAI பரிந்துரைத்த அளவோ 18000 கோடி ரூபாய். கணக்கு பண்ணிப் பார்த்தால் மொத்தம் 1.76 கோடி ரூபாய் வருகிறதே.. அது தணிக்கைத் துறை சொன்ன அளவுதானே... ஆனால் நீங்கள் முன்பு இதனால் எந்த இழப்பும் இல்லை என்று சொன்னது பொய்தானே.. அதேபோல இதற்கும் சமாளியுங்கள்... அதற்காக அந்தத் துறையை குறை சொல்லி பிரயோஜனமில்லை.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
20-ஆக-201200:06:30 IST Report Abuse
மதுரை விருமாண்டி கமுக்கமா சொன்னாலும் கொள்ளையின் மதிப்பு குறைந்து விடுமா என்ன ?? ஒரு ஆணியும் புடுங்காமலே, பூரா பணத்தையும் ஆட்டையைப் போட்டுட்டு... சோனியா நலத்திட்டம், ராஜீவ் நலத் திட்டம், இந்தியா ஒளிர்கிறது, என்று நீங்க மட்டும் எப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறீர்கள்.. இப்போ கிழிகிறது...
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
19-ஆக-201218:26:03 IST Report Abuse
Ramasami Venkatesan குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - காங்கிரெஸ் இப்படித்தான் சி ஏ ஜி மீது குற்றம் சாற்றுகிறது வரம்பு மீறுவதாக. யார் தட்டி கேட்டாலும் இதே கதிதான். நாளை சுப்ரீம் கோர்ட்டையும் வரம்பு மீறுவதாக சொல்லுவார்கள். தனக்கு சாதகமாக இல்லாதவர்கள் எல்லோரும் வரம்பு மீறுபவர்கள். ஜனாதிபதி தங்கள் கட்சியிலிருந்து போட்டாகிவிட்டது. இனி என்ன - சிஏஜி தலைவர் மாற்றப்படுவார், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாற்றப்படுவார், தலைமை தேர்தல் கமிஷனரும் மாற்றபடுவார் - காங்கிரேசுக்கு சாதகமாக செயல்படாவிடில். தி மு க என்றும் எப்போதும் காங்கிரேசுடந்தான். இனம் இனத்தோடுதான் சேரும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-201216:57:07 IST Report Abuse
Pugazh V கொஞ்ச நாளைக்கு இது பற்றியே கருத்துக்கள் வரும். அப்புறம்...? அது ஏன் சி ஏ ஜி இப்படி அனுமானத்திலும், ஊகத்திலுமே செயல்படுகிறது? வருடா அவருடம் செய்ய வேண்டிய தணிக்கைகளை முறையாக செய்வதுமில்லை, அறிக்கை தயாரிப்பதும் இல்லை. ஏதோ ஒரு திரைப் பட தயாரிப்பாளர் மாதிரி, "பிரம்மாண்டமான தயாரிப்பு " ஏபகிற ரீதியில் ஒரு பெரும் தொகையை "அரசுக்கு இழப்பு" என்று அறிவிக்கிறது. உடனே மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள் - இவ்வளவு தொகை யாரோ யாருக்கோ லஞ்சமாக கொடுத்தார்கள்- வாங்கினார்கள் என்று, முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டு, "எங்கே 1.86 லட்சம் கோடி" என்று கூவிக் கொண்டே இருப்பார்கள், பாவம் சி ஏ ஜி என்ன மகாத்மா காந்தியின் கம்பெனியா, உண்மை தான் பேசுவார்களா? ஒரு நாடு நிலையான அரசுத் துறையாக செயல்பட வேண்டிய அலுவலகம், பெரும்பான்மை இல்லாத அரசு என்றதும் ரொம்ப ஆடுகிறது. எந்த வெளிநாட்டாரின் கைப்பாவையாக செயல்படுகிறதோ, யாருக்குத் தெரியும்?
Rate this:
Share this comment
Cancel
Prithivi . - Chennai 9500791791,இந்தியா
19-ஆக-201216:48:59 IST Report Abuse
Prithivi . வாஸ்தவன்தனே ... இது இத்தாலி madam ஆட்சியில் சாதாரண விஷயம் தானே.. கேவலம் இந்த வழக்கமான நிகழ்ச்சிய போய் இப்படி பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கை தாக்கல் செய்வதா? இப்படி பண்ணினால் எங்களுக்கு ( இத்தாலி Groups க்கு) கோபம் வருமா,வராதா நீங்களே சொல்லுங்க..?
Rate this:
Share this comment
Cancel
SEKAR - chennai,இந்தியா
19-ஆக-201213:05:38 IST Report Abuse
SEKAR சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குத் தகுந்த பதில் சொல்லவேண்டிய திருடன் மௌனமாய் இருக்கிறான் .
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
19-ஆக-201212:54:48 IST Report Abuse
S.Govindarajan. தணிக்கைக் குழு அறிக்கை மூலமே 2g ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதே போல் தான் நிலக்கரி உழலும். வெளிநாட்டுக்காரியின் பிடியில் சிக்கி நாடு தவிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
SEKAR - chennai,இந்தியா
19-ஆக-201212:41:05 IST Report Abuse
SEKAR இந்த ஈனப்பிறவிகளுக்கு ஒரு கேள்வி .அறிக்கையைப் படித்துப் பார்க்கும் முன்பே மிகைப்படுத்தப்பட்ட கணக்கு என்பது எப்படித் தெரியும் உங்களுக்கு ?உங்கள் வாதப்படியே மிகைப்படுத்தப்பட்ட தொகை இது என்று வைத்துக் கொள்ளுவோம் . சரியான தொகை ஒரு லட்சம் கோடி என்றால் பரவாயில்லை என்று இதைப் பற்றிப் பேசாமல் விட்டு விட வேண்டும் என்பது உங்களின் எதிபார்ப்பா?
Rate this:
Share this comment
Cancel
&2949&2975&3007&2990&3016 - kaaramadai,இந்தியா
19-ஆக-201212:35:02 IST Report Abuse
&2949&2975&3007&2990&3016 இவரின் அறிக்கைப்படி ஊழல் நடந்தது உண்மை ஆனால் தொகைதான் வித்யாசம் வருதுன்னு ஒத்துக்குறார். இந்த ஊழல்ல நம்ப மஞ்ச துண்டு பங்கு என்னான்னு சொன்னா இத்தாலிய அதிகாரத்தில் வாழும் இந்திய தமிழர்கள் ரொம்ப சந்தோசபடுவோம்
Rate this:
Share this comment
Cancel
Karikalan - Manapakkam, CHENNAI-125.,இந்தியா
19-ஆக-201212:18:39 IST Report Abuse
Karikalan CAG யினுடைய வேலை சட்ட விதி மீறல்களை சுட்டி காட்டுவதும், அதனால் ஏற்படக்கூடிய அதிக பட்ச இழப்பை கணக்கிடுவதும் தான்.தக்க பதில் இருந்தால் கூறுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்