மதுரை: தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி வணிக வளாகம் அமைப்பதற்காக, மதுரை விவசாயக் கல்லூரி விளைநிலத்தை தாரை வார்க்க, அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். விவசாயத்தை விரிவுபடுத்த தூண்டுகோலாய் இருக்க வேண்டிய விவசாய கல்லூரியின் இடமே, விவசாயத்தை குழிதோண்டி புதைக்கும் இடமாக மாறுவது வேதனைக்குரியது.
விவசாயத்திற்கு 20 சென்ட் நிலம் :
மதுரை விவசாயக் கல்லூரி 154 ஏக்கர் கொண்டது. கட்டடம், விளையாட்டு மைதானம், தோட்டம் ஆகியவற்றைத் தவிர, மீதி 100 ஏக்கர் விளைநிலமாக இருக்கிறது. இங்கு நெல், மக்காச்சோளம், காய்கறி மற்றும் பழவிதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தென்மாவட்ட விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. விவசாயப் படிப்பும், மனையியல் கல்லூரியில் மனையியல் படிப்பும் கற்றுத்தரப்படுகிறது. ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சித் திடல் அமைக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இதுதவிர வேளாண் அறிவியல் மையம் சார்பில் விதை உற்பத்தி, ஆராய்ச்சி நடந்து வருகிறது. விவசாயம் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 20 சென்ட் நிலம் வரை, விவசாயத்திற்காக தரப்படுகிறது. அனைத்திற்கும் சேர்த்து மொத்தம் 100 ஏக்கர் நிலம் மட்டும் உள்ளது.
கோயம்பேட்டில் இருப்பதைப் போன்ற காய்கறி வணிக வளாகத்தை அமைத்து, ஏற்றுமதி செய்யும் வகையில், புதிய இடத்தை, கடந்த ஆட்சியில் சிவகங்கை ரோட்டில் தேர்வு செய்தனர். இந்த இடம் என்னவானது எனத்தெரியாத நிலையில், விவசாயக் கல்லூரி வளாகத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர், தற்போதைய அரசு அதிகாரிகள். இதற்கான ஆலோசனை கூட்டத்தை, ஆக., 23ல் கோவையில் நடத்த உள்ளனர். கோவை வேளாண் பல்கலையில் இளநிலையில் ஒன்பது படிப்புகள் உள்ளன. மதுரையில் கூடுதலாக ஒரு படிப்பை அறிமுகப்படுத்த வேண்டுமென, அப்போதைய பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதியிடம் கேட்டபோது, "அதற்கான இடவசதி இங்கு இல்லை. கூடுதல் படிப்பை கொண்டு வருவது கஷ்டம்' என்றார்.
விளைநிலங்கள் எல்லாம் குவாரியாக, மனையாக :
பல்கலை விதிப்படி, ஒரு விவசாயக் கல்லூரி துவங்க வேண்டுமெனில் 100 ஏக்கர் நிலம், கட்டாயம் இருக்க வேண்டும். அப்படியிருக்க, ஒரே வளாகத்தில் இரண்டு கல்லூரிகள் செயல்பட்டு வரும் சூழ்நிலையில், இருக்கும் இடத்தை அபகரிக்க நினைப்பது, சட்டப்படி சரியல்ல. மதுரையைச் சுற்றி ஏகப்பட்ட தரிசு நிலங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றை அதிகாரிகள் தேர்வு செய்து வணிக வளாகம் கட்டலாம். தமிழகத்தில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக, கட்டடங்களாக மாறி விவசாயப்பரப்பு சுருங்கிவருகிறது. விவசாயக் கல்லூரியைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் எல்லாம் குவாரியாக, மனையாக மாறி வருவது வேதனையான விஷயம். இதில் கல்லூரி விளைநிலத்தை அழித்து கட்டடமாக்க திட்டமிடுவது, விவசாயத்திற்கு செய்யும் துரோகம். விவசாயத்தை மேம்படுத்த, "இரண்டு மடங்கு உற்பத்தி; மூன்று மடங்கு லாபம்' என முழக்கமிடும் தமிழக அரசு, விவசாயக் கல்லூரியை காப்பாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அட போங்கய்யா ,எல்லோரும் வெளிநாட்டுல இருந்துக்கிட்டு பேசறதெல்லாம் எந்த அரசியல்வாதியும் எந்த அதிகாரியும் உங்களை தொடமுடியாதுன்னு தானே .விடுமுறைக்கு ஊருக்கு போவிங்க தானே அப்போ இதுல எவனாவது ஒருத்தன் ஒங்க ஊருல, இல்ல தெருவுல அட , விட்டு ஒங்க கக்கூசை சுத்த படுத்தி இருக்கீங்களா ??? ஏர்போர்ட்ல இருந்து ஒரு ஒரு தடவையும் இறங்கும் போதும் திரும்பி போகும் போது ஆரம்பிக்கும் கேள்விகளுக்கு என்றைக்காவது பதில் கிடைத்திருக்கிறதா ???அட நம்ம போற கார் டிரைவர் தப்பா ஓட்டினா கேக்க தைரியம் இருக்கா. போங்களே ...போய் பேப்பர படிச்சோமா .ஆக்சிடன்ட் ஆன பஸ்ஸோ இல்ல காருலைய்யோ நம்ம சொந்த பந்தங்கள் இல்லைன்னு சந்தோஷ பட்டோமான்னு ....
மதுரை விவசயகல்லுரியின் ஆரம்ப ஆண்டு மாணவன் என்ற உரிமையுடன் நான் கூற விரும்புவதெல்லாம் இந்த கல்லுரி வந்ததே திரு கக்கன் அவர்களின் பெரும் முயற்சியால்.யானைமலையின் அடிவாரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள இக்கல்லுரியியை தயவு செய்து தொடவேண்டாம் என்று அந்த மூத்த அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் .1969 முதல் சிறந்த சேவை செய்து வருகிறது. நானும் இருபது சென்ட் நிலத்தில் அங்கு விவசாயம் செய்து படித்தேன். அங்கு ஒரு பெரிய வணிக வளாகம் வருவது என்ற செய்தி என் நெஞ்சில் ஈட்டியாய் பாய்கிறது. அரசாங்கம் இதை காப்பாற்றும் என்று நம்புகிறேன்
T.G.BALASUBRAMANIAN., Australia.
விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மக்களின் அவசியத் தேவைகளில் உணவு முக்கியப் பங்கு வகிக்கின்றது. அந்த அளவுக்கு முக்கியமான விவசாயத்தை அரசு எப்படி கையாளுகிறது? பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு நகரங்களுக்கு வேற்று வேலை தேடி வந்துவிட்டனர். குறைந்த அளவுக்கு உள்ள விவசாயிகளும் தங்கள் விவசாயத்திற்கு தேவைப்படும் வேலை ஆட்கள் கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர். அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு தரவேண்டிய கூலி அதிகமாக உள்ளதால் விவசாயத்தால் அதிக பலன் இல்லை. இக்குறைகளை அரசுதான் தீர்க்கமுடியும். ஏற்கனவே பல விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகி விட்டன. இன்னமும் அரசு சரியான சட்டத் திருத்தங்கள் கொண்டுவராவிட்டால் விவசாயம் மடிந்துவிடும்.
சிறுசிறு நிலங்களாக பிரிந்து கிடக்கும்போது அவற்றை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் அதற்கான உற்பத்திச் செலவு அதிகம் ஆகும். பெரிய நிலங்களாக இருந்தால் இயந்திரங்களைப் பயன்படுத்தி உழலாம். நீர் பாய்ச்சுவதும் எளிமையாக இருக்கும். வரப்புகளும் விளைநிலங்கள் ஆகும். உழைப்பைத் தவிர விதைகள், உரம், மருந்து போன்றவை அரசின் வாயிலாக குறைந்த விலையிலோ, இலவசமாகவோ கிடைத்தால், விவசாயம் வளரும். அதன் முதல்படி &39ஒருவருக்கு ஐந்து ஏக்கருக்கு மேல் விலை நிலம் இருக்கக் கூடாது&39 என்ற நில உச்ச வரம்பு சட்டம். அச் சட்டத்தில் மாற்றம் வர வேண்டும்.
தமிழத்தை சார்ந்த முழு நிலங்களும் அரசுக்கே சொந்தம். மக்கள் தங்கள் தொழில் சார்ந்த இடங்களில்தான் தங்க விரும்புவார்கள். இது இயற்கை. தொழிற் சாலைகள் பெரும்பாலும் நகரங்களைச் சுற்றியே இருக்கின்றன. அதனால் நகர மக்கள் தொகையும் அதிகமாக இருக்கும். அத்தனை மக்களும் தங்க சொந்த வீடு வாங்குவதென்றால் வீடுகள் அகலமாக விரிவடையக் கூடாது. உயரத்தில் தான் வளரவேண்டும். பன்மாடி கட்டிடங்கள் கட்ட ஊக்குவிக்கப் படவேண்டும். ஒருவரே பல வீடுகளை நகரத்திற்குள் வாங்குவதை தடை செய்ய சட்டம் செய்யவேண்டும். அரசு வீட்டு வசதி வாரியம் மூலமாக பல பன்மாடி வீடுகள் கட்டி நகர்ப்புறங்களில் வாடகைக்கோ குறிப்பிட்ட வரைமுறைகளுக்கு அடங்கியோ விற்பனை செய்யவேண்டும். அக்கட்டடங்களின் பராமரிப்பை வாரியமே கட்டணம் பெற்று கவனித்துக்கொள்ளவேண்டும். இவற்றால் கட்டடத்தின் தரம் கெடாமல் இருக்கும். வீட்டு வசதி வாரியத்தின் வருமானமும் பெருகும்.
விவசாய நிலங்களும் பாதுகாக்கப் படும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.