E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தேர்தலுக்கு வெறும் 7 லட்சம் செலவு: எம்.எல்.ஏ.,க்களின் "சூப்பர்' கணக்கு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

20 ஆக
2012
00:16
பதிவு செய்த நாள்
ஆக 18,2012 23:44

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனவர்கள், தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ள தேர்தல் செலவுக் கணக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரும் சராசரியாக, 7 லட்ச ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளதாக, "கணக்கு' காட்டியுள்ளனர்.

தமிழகத்தில், நம்பர்-1 பணக்கார கட்சியான தி.மு.க., :



கடந்த ஆண்டு ஏப்ரலில், தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தல் கமிஷன் விதிப்படி, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஒருவர், 16 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய முடியும். இதை கண்காணிக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தனியாக ஒரு தேர்தல் செலவு பார்வையாளரை தேர்தல் கமிஷன் நியமித்தது. தேர்தல் கமிஷன் விதிப்படி, தேர்தலில் வெற்றி பெற்றவர், குறிப்பிட்ட சில நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2011 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்கள் கட்சியின் மூலமாக செலவுக் கணக்கை சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் காட்டியுள்ள தேர்தல் செலவுத் தொகை, அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திஉள்ளது. இதில், தேர்தல் கமிஷன் அனுமதித்த செலவுத் தொகையான, 16 லட்சத்தில், பாதிக்கும் குறைவாகவே செலவிட்டுள்ளதாக, வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன பலரும் கணக்கு காட்டியுள்ளனர். அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்களில், 150 பேர் வெற்றி பெற்றனர். அக்கட்சி காட்டியுள்ள கணக்குப்படி, எம்.எல்.ஏ.,க்கள் சராசரியாக, 6.15 லட்சம் ரூபாய் மட்டுமே பிரசாரத்தில் செலவிட்டுள்ளனர். ஆண்டு வருவாயிலும், சொத்து மதிப்பிலும் தமிழகத்தில், நம்பர்-1 பணக்கார கட்சியான தி.மு.க., தங்கள் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா, 7 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது. தி.மு.க., வேட்பாளர்களில் நான்கு பேர் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட தேர்தல் செலவுத் தொகை, 16 லட்சத்தில், 90 சதவீதம் தொகை செலவு செய்ததாக கூறியுள்ளனர்.

ஒரு வேட்பாளர் செலவு 7.12 லட்ச ரூபாய் மட்டுமே :



அ.தி.மு.க., கணக்குப்படி, தற்போது அமைச்சராக உள்ள பச்சைமால் தான், கடந்த சட்டசபை தேர்தலில் அதிகமாக செலவிட்டவர். இவர், 15.73 லட்சம் செலவிட்டுள்ளார். குறைந்தபட்ச தொகையாக, 76 ஆயிரம் மட்டுமே செலவிட்டதாக, பெரம்பூர் எம்.எல்.ஏ.,வும், சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவருமான சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில், ஐந்து பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தலா, 9.15 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள, 234 எம்.எல்.ஏ.,க்களும் காட்டியுள்ள தேர்தல் செலவுக் கணக்குப்படி, சராசரியாக ஒரு வேட்பாளர், 7.12 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளார். ஆனால், கடந்த சட்டசபை தேர்தலின்போது, முக்கிய கட்சி வேட்பாளர்கள், தேர்தல் கமிஷன் கண்களில் மண்ணை தூவிவிட்டு, பல லட்சங்களை வாரி இறைத்தனர். கட்சித் தலைவர்கள், கோடிக்கணக்கில் செலவிட்டதையும் பொதுமக்கள் கண்கூடாகப் பார்த்தனர்.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது: சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களை தொடர்பு கொண்டு, தேர்தல் செலவு விவரங்களை சேகரித்து வருகின்றனர். அனைத்து வேட்பாளர்களிடமும் செலவு கணக்கு பெற்ற பின்னர், அவை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்படும். வேட்பாளர்கள் தரும் செலவுக் கணக்குகளை, அப்படியே இணையதளத்தில் வெளியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டாலின் செலவு ரூ. 3 லட்சம்





தலைவர்கள் போட்டியிட்ட தொகுதியில் செலவு விவரம்
முதல்வர் ஜெயலலிதா ரூ.9.50 லட்சம்
கருணாநிதி ரூ.4.47 லட்சம்
ஸ்டாலின் ரூ.3.00 லட்சம்


- நமது சிறப்பு நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samir - Trichy,இந்தியா
19-ஆக-201218:04:36 IST Report Abuse
Samir போங்கடா....உங்ககிட்டே யாரு கணக்கு கேட்டா....இவங்க சொல்றத அப்படியே விழுங்கறதுக்கு ஒரு தேர்தல் ஆணையம். இந்த கொடுமையெல்லாம் நம் நாட்டில் மட்டும்தான் நடக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
19-ஆக-201210:48:59 IST Report Abuse
Dhanabal மக்களின் நம்பகத்தன்மை மிக்க வாக்குகளை பெற்றவர்கள் ,நம்பகத்தன்மையற்ற தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வது வெட்கக்கேடு ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-ஆக-201208:40:03 IST Report Abuse
villupuram jeevithan 234 எம்ல்எ க்களில் 58 எம்ல்எ க்கள், ஊர்வலமோ, பொது கூட்டங்களோ நடத்தாமல் ஜெயித்திருக்கிறார்கலாம்??? என்னே விந்தை??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-ஆக-201208:37:06 IST Report Abuse
villupuram jeevithan Perambur CPM MLA A Soundararajan had spent just Rs 75,595, which is 5% of the sanctioned amount???
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
19-ஆக-201206:17:56 IST Report Abuse
NavaMayam வரவு எட்டணா , செலவு பத்தணா ன்னு மக்கள் பஞ்ச பாட்டு பாடுறாங்க ..அரசியல் வாதிங்க செலவு பத்துகாசு வரவு கோடின்னு வாழுறாங்க...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-ஆக-201211:11:24 IST Report Abuse
villupuram jeevithanஅந்த பத்து பைசா கூட அவர்கள் பர்சிலிருந்து எடுத்தது அல்ல....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
19-ஆக-201206:12:14 IST Report Abuse
K.Sugavanam அப்பூ,பாத்துக்கோ என்னமா கணக்கு காட்றானுங்கோ.அடேங்கப்பா..காப்பி செலவுக்கே போதுமான்னு வியக்கிறது சனம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
19-ஆக-201204:59:34 IST Report Abuse
aymaa midas=vison2023 அட கொய்யால முழு பூசணிகாயை சுண்ட காய்க்குள் மறைக்க முயற்சி பண்ணுறானுங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Jiginamani - Mannargudi,இந்தியா
19-ஆக-201203:47:30 IST Report Abuse
Jiginamani எல்லாம் பொய்க்கணக்கு.. கபடவேஷதாரிகள்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.