தவறான எஸ்.எம்.எஸ்., அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாக்.,கிடம் இந்தியா வலியுறுத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் பீதி தொடர்பாக தவறான எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி, அவர்களை பீதிக்குள்ளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் வழக்கம் போல் இதனை மறுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாமில் சிறுபான்மை மற்றும் பழங்குடி இனத்தவர்கள் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கலவரம் மூண்டது. இதில் 70க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனையடுத்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் பாதித்த பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியா முழுவதும் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எஸ். எம்.எஸ்.,சில் தகவல்கள் பறந்தன. இதனால் வட மாநிலத்தவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் தென் மாநிலங்களிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். அவர்களுக்கு போதுமான பாதூப்பு வழங்கப்படும் என உறுதியளித்தும் பீதி காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.


பாகிஸ்தான் பங்கு:

இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் ஆர் கே சிங் கூறுகையில், பாகிஸ்தானில் சிலர் கடந்த 13ம் தேதி முதல் போலியாக படம் வரைந்து, சதி செயல்களில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 100 இணையதளங்களை பயன்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய 74 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 36 இணையதளங்கள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


ஷண்டே வலியுறுத்தல்:

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஷிண்டே, இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த அங்குள்ள சிலர், சமூக இணையதளங்களை பயன்படுத்தி வருவது குறித்து தனது கவலையை தெரிவித்தார். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


பாக்., மறுப்பு:

அசாம் கலவரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா கூறியுள்ள குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தனியார் டிவிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேயிடம் கூறினேன். அவரிடம், அசாம் கலவரம் குறித்து மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளேன். இணையதளத்தில் போலியாக உருவாக்கப்பட்ட படங்கள் குறித்து ஷிண்டே என்னிடம் கூறியதாக கூறினார்.


சோனியா கவலை:

அசாம் கலவரம் குறித்து பேட்டியளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அசாமில் நடந்த சம்பவங்கள் கவலையளிக்கிறது. இந்தியாவில் வசிக்கும் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் வசிக்கும் சுதந்திரம் உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravikumar - Purwakartha,இந்தோனேசியா
20-ஆக-201210:52:05 IST Report Abuse
Ravikumar நம் நாட்டிற்குள் வந்து அட்டகாசம் செய்த பாகிஸ்தான் நாட்டை சேர்த்தவனை ஜெயிலில் வைத்து கோடிகோடியாய் மக்கள் பணத்தை இறைக்கும் இவர்கள் SMS அனுப்பிய அன்னிய நாட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாம்.
Rate this:
Share this comment
Cancel
Pakanati ramesh - chennai,இந்தியா
20-ஆக-201209:43:19 IST Report Abuse
Pakanati ramesh டே மத்ய அரசை ஆண்டுக்கொண்டிருக்கும் கோமாளிகளா, மக்களை ஏமாற்றியது போதும், இனி நாங்கள் எமரமாட்டோம்நு மக்கள் புரிந்து கொண்டார்கள். பாகிஸ்தான் தான் காரணம்னு தெரிஞ்சிடிச்சி நிரூபிச்சிட்டு நேரா அதைத்தாக்கவேண்டியதுதானே? அமெரிக்கா எப்பிடி பின் லாடிந்தான் காரணம்னு நிரூபித்துவிட்டு நேரா போயி அவன் கதைய முடிச்சிட்டு மறுவேல பார்க்கலே? வுனுக்கு அவன் ஒட்டு வேணும், பயம் எங்க முஸ்லிம்காரன் வோட்டு போடமாட்டானோ நம்லே கவுத்துடுவானுங்க்லோன்னு பீதி. அதான் தொட்டிலையும் ஆட்டிட்டு கொழந்தயேயும் கிள்ளிவிட்டு இங்கே நாடகம் பண்ணிக்கிட்டுருக்கே. இனி இந்த இந்துக்கள் எமாரமாடார்கள் உனக்கு காங்கிரேசுக்கு சரியான நேரத்திலே பாடம் கற்பிப்பார்கள். RAORAMESH
Rate this:
Share this comment
Cancel
thaniganandam - kanchipuram,இந்தியா
20-ஆக-201207:27:41 IST Report Abuse
thaniganandam உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு ரம்ஜான் தின நல்வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
thaniganandam - kanchipuram,இந்தியா
20-ஆக-201207:10:39 IST Report Abuse
thaniganandam இந்தியன் இந்தியாவில் எந்த இடத்திலும் வசிக்கலாம் யாரும் எதுவும் செய்யமுடியாது
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
20-ஆக-201203:50:48 IST Report Abuse
Subramaniam பிரச்சினையை பாகிஸ்தான் மீது போட்டு தப்ப முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் ஏமாறக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
vilakkam vivek - erode,இந்தியா
20-ஆக-201200:45:09 IST Report Abuse
vilakkam vivek உடனே கிரிகெட் விளையாட மாட்டோம் statement கொடுங்க , நாலு பேரை அர்ரெஸ்ட் பண்ணி 10 கோடி செலவு பண்ணி பிரியாணிய ஆக்கி போடுங்க ,வெட்டி பய வெங்க பயலுங்களை கூட்டி ஒரு கமிசன் announce பண்ணிடுங்க , அதுக்கு 30 கோடி கணக்கு காட்டுங்க, இந்த விசயத்தை ரெண்டு வருஷம் விசாரிக்க டைம் எடுக்கும் ,அதுக்குள்ளே அவங்க வேற ஒரு தீவிரவாத அட்டாக் பண்ணுவாங்க , நாம மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சுடுவோம், அட போங்கையா.
Rate this:
Share this comment
Cancel
Rave Reva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-201200:12:47 IST Report Abuse
Rave Reva சோனியா மேடம் நாங்க எல்லாம் காஷ்மீர்ல வாழ உரிமை இருக்கா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்