முதல்வரிடம் மறைக்கப்படும் புகார் மனுக்கள்: அ.தி.மு.க.,வினர் புலம்பல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: திருச்சி அ.தி.மு.க.,வினரால், முதல்வருக்கு அனுப்பப்படும், புகார் மனுக்கள் மறைக்கப்படுவதாக, நிர்வாகிகள் மத்தியில் புலம்பல் எழுந்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், கட்சியினருக்கு சாதகமான சூழல் மாறும் என்ற எதிர்பார்ப்பு, மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் மத்தியில் இருந்தது. ஆனால், திருச்சி உள்ளிட்ட சில மாவட்ட நிர்வாகிகளோ, "ஆட்சி அமைந்ததால், தங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை' என்று, புலம்பத் துவங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனம், "டாஸ்மாக்' பார் ஒதுக்கீடு, பல நூறு கோடி ரூபாய் கான்டிராக்ட் பணிகள், பணி நியமனங்கள் ஆகியவற்றில், அ.தி.மு.க.,வினருக்கு, உரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர். குறிப்பாக, அரசு வழக்கறிஞர் நியமனத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கட்சியினர் கூட, பணத்தை கொடுத்து அரசு வழக்கறிஞர் பதவியை பிடித்து உள்ளனர். ஆனால், கட்சிக்காக, கட்சியினருக்காக விசுவாசமாக உழைத்த வழக்கறிஞர்கள் யாருக்கும், அரசு வழக்கறிஞர் பதவி கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பலரும், போயஸ் கார்டனிலும், கட்சித் தலைமை அலுவலகத்திலும், பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல், பார் ஒதுக்கீடு, கான்டிராக்ட் ஒதுக்கீடுகளில், தி.மு.க.,வினரே, பணம் கொடுத்து, அவற்றை தொடர்ந்து வருவதாகவும், தகுதியுள்ள, அ.தி.மு.க.,வினருக்கு கூட வாய்ப்பு மறுக்கப் படுவதாகவும் கூறுகின்றனர். தங்களது குமுறல்களை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனுக்களாக, போயஸ் கார்டனுக்கும், கட்சித் தலைமை அலுவலகத்துக்கும் பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த புகார்கள் மீது, இதுநாள் வரை நடவடிக்கை இல்லை. "தாங்கள் அனுப்பிய புகார்கள், முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு செல்லாமல், மறைக்கப்படுகிறது' என்று, அ.தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த மோகன் என்பவர் கொடுத்த மனு, ஏன் தன்னுடைய கவனத்துக்கு கொண்டு வரவில்லை என, முதல்வர் கடிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இது போலத்தான், நாங்கள் அனுப்பும் புகார்களையும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மறைக்கின்றனர் என்ற சந்தேகம் உள்ளது.முதல்வர் தொகுதி எங்கள் மாவட்டத்தில்தான் உள்ளது. இந்த காரணத்திற்காகவாவது, திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் குறைகளை கேட்க, முதல்வர் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்