வரும் நவம்பர் மாதத்தில் ஓய்வுபெறும், தமிழக போலீஸ், டி.ஜி.பி., ராமானுஜத்துக்கு பதவி நீடிப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, போலீஸ் உள்ளிட்ட, அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழக, போலீஸ் டி.ஜி.பி.,யாக இருப்பவர் ராமானுஜம். போலீஸ் துறையில், "மிஸ்டர் க்ளீன்' என்ற பெயரெடுத்த இவர், இதுவரை தன்னுடைய போலீஸ் பணியில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். யாருக்கும், எதற்காகவும் வளைந்து கொடுக்காதவர். அதனால், தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு போலீஸ் துறையின் முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகிறார். இதற்கு முன் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ராமானுஜம் உளவுத்துறை, ஐ.ஜி., என்ற முக்கிய பொறுப்பில் இருந்தார். அதேபோல் இம்முறை ஆட்சிக்கு வந்தவுடனே, ராமானுஜத்தையே தமிழக போலீஸ் துறையின் உச்சபதவியான, டி.ஜி.பி.,யாக நியமித்தார். அந்தளவுக்கு ராமானுஜத்தின் மேல் முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்துள்ளார்.
ஆனால், சமீப காலமாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து, தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இச்சூழலில், தமிழக போலீஸ் டி.ஜி.பி.,யாக இருக்கும் ராமானுஜம், வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளார். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவிடம் உள்ள நற்பெயர் மற்றும், "மிஸ்டர் க்ளீன்' இமேஜ் அவருக்கு, ஓராண்டு பதவி நீடிப்பை பெற்றுத்தரும் என்று போலீஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர்.இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சமீபகாலமாக, போலீஸ் துறையின் செயல்பாடு சரியில்லை என்பதை, எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அதற்காக, டி.ஜி.பி.,க்கு பதவி நீடிப்பு வழங்கப்படாது என்ற பேச்சு எழுந்துள்ளது தவறானது. கண்டிப்பாக, டி.ஜி.பி., ராமானுஜத்துக்கு ஓராண்டு பதவி நீடிப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். டீ குடித்தால் கூட, சொந்தக் காசை கொடுக்கும், இப்படிப்பட்ட உயர் அதிகாரியை இனி பார்ப்பது கஷ்டமே! ஆகையால், அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நல்லவருக்கு பாராட்டுக்கள். அதே நேரம் ஓய்வு பெறுவோருக்கு பதவி நீடிப்பு என்பது ஒத்துக்கொள முடியாதென்பது என் கருத்து. advisory தலைவராக ஆக வைப்பது முறை. அடுத்து உள்ளவர்களுக்கு வாய்ப்பு தாமதிப்பது சரியல்ல. அப்புறம் யோசித்தால் புதிதாக தேர்வு பெறுபவர்கள் வாய்ப்பும் தாமதமாகும். இப்போ சொல்லும் கருத்தை பகுத்தறிவாளர்கள் ரொம்ப வே விரும்புவாங்க. சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி, வக்கீல் இவர்களையும் பதவி நீடிப்பு செய்யலாமா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.