மதுரை: மதுரை திருநகர் அருகே, கண்மாய்க்குள், கைத்துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மதுரை தோப்பூரை சேர்ந்தவர், ஆதீஸ் கண்ணன்; தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படிக்கிறார். நேற்று காலை, நண்பர்கள் வேல்முருகன், கார்த்திக்குடன், நிலையூர் பெரிய கண்மாய்க்குச் சென்றார். அங்கு கிடந்த வெள்ளை துணி மூடையைப் பிரித்த போது, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரித்தனர். துப்பாக்கி துருப்பிடித்த நிலையிலும், வெடிகுண்டுகள் செயலற்ற நிலையிலும் இருந்தன. துப்பாக்கியில் இருந்த தோட்டாவில், "இந்தியன் ஆர்டினன்ஸ் பாக்டரி, டீலக்ஸ்' என, எழுதப்பட்டிருந்தது. கையெறி குண்டுகள், ஒரு கிலோ எடையில் இருந்தன. "தோட்டா, திருச்சியில் தயாரிக்கப்பட்டதா; கையெறி வெடிகுண்டுகளை ராணுவ வீரர்களிடம் விலைக்கு வாங்கி, தீவிரவாத செயல்களில் ஈடுபட முயன்றார்களா; பயன்படுத்த முடியாத சூழலில், கண்மாயில் வீசினரா?' என, விசாரணை நடக்கிறது.
கடந்த ஆண்டு, திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற சம்பவத்திற்கும், இதற்கும் தொடர்பு உண்டா எனவும், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து, எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறுகையில், ""தோட்டா, 100 மீட்டர் வரை சென்று தாக்கக்கூடியது; வெடிகுண்டுகள், மிகுந்த சக்தி வாய்ந்தவை. குண்டுகளை செயல் இழக்கச் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.