தளவாய்புரம்: சொந்த செலவில், 20 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருகிறார், சேத்தூர் வெற்றிலை வியாபாரி தலைமலை.விருதுநகர், சேத்தூர் அருகே தேவதானத்தை சேர்ந்தவர் தலைமலை, 50. இவர், தினமும் சைக்கிளில் வெற்றிலை வியாபாரம் செய்கிறார்.
ஒரு நாள், வியாபாரத்தை முடித்து விட்டு வரும் போது, வெயிலின் கொடுமைக்கு மூதாட்டி இறந்ததை கண்டார். "மரம் இருந்தால், மூதாட்டி உயிரை காப்பாற்றியிருக்கலாம்' என, எண்ணினார். அன்று முதல், மரம் வளர்க்க வேண்டும் என, ஆசை வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி அன்று, மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறார். சுற்றியுள்ள கிராமங்கள், ரோடு ஓரம், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், கோயில்களில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்; இவற்றை சொந்த செலவில், தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி குஜராத், தமிழக அரசுகள் விருது வழங்கியுள்ளன. வருமானத்தில் பாதியை, மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு செலவிடுகிறார்.
தேவதானம் நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயில் பூஜைக்கு தேவையான பூக்களுக்காக, ஒரு தோட்டத்தை அமைத்துள்ளார்; அருகில் 120 மரக்கன்றுகளையும் பராமரித்து வருகிறார். மரக்கன்றுகளையும் இலவசமாக தருகிறார். 93632 62808 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த செய்தி சில நாட்களுக்கு திரும்ப திரும்ப வரலாம். இதை பழைய செய்தி என்று நீக்கி விட வேண்டாம். இதை படித்து விட்டு, காலி நிலம் உள்ளவர்கள் ஒரு மரம் நாட்டு வளர்த்தாலும் போதும். இது போன்ற செய்தியின் பாதிப்பினால், நானும் இருபது மரங்களை நட்டு உள்ளேன் (முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவர் ஒரு லட்சம் மரம் நட்டார் என்று தினமலரில் வந்த செய்தி கேட்டு..) சிலருக்கு மர கன்றுகளை பரிசாக அளித்துள்ளேன். சென்னையில் என் வீட்டில் இடம் இல்லை. அதனால் சூடானில் மரம் வளர்த்துள்ளேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.