மீண்டும் சென்னை திரும்பும் வட கிழக்கு மாநிலத்தவர்: ரயில்களில் வருகின்றனர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: வட கிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய செய்தி வதந்தி என உணர்ந்த, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மீண்டும் சென்னை திரும்பி வருவதாக, ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வார காலமாக, வட கிழக்கு மாநிலத்தவர்கள், தாக்கப்படுகின்றனர் என, நாடு முழுவதும் பரவிய வதந்தியால், ஆயிரக்கணக்கானோர், சென்னை உட்பட பல நகரங்களில் இருந்தும், தங்கள் சொந்த ஊர் சென்றனர். "தாக்குதல் செய்தி வெறும் வதந்தி, அதற்கு பின்னால், வெளிநாட்டு சதி இருக்கிறது' என, மத்திய அரசு தெரிவித்தது. சென்னையில் நடக்கும் பெரும்பாலான கட்டுமானப் பணிகளிலும், உணவகப் பணிகளிலும், வட கிழக்கு மாநிலத்தவரே பெரிய அளவில் பணிபுரிந்து வருவதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், உணவக நிறுவனங்களுக்கும், ஒப்பந்த நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டன.

ரயில்வே துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது: சொந்த ஊர் சென்ற வட கிழக்கு மாநிலத்தவர்கள் அனைவருக்கும், தாக்கப்படுவதாக பரவிய செய்தி, திட்டமிட்டே பரப்பிய வதந்தி என, தற்போது தெரிய வந்துள்ளது. தென் மாநிலங்களைச் சேர்ந்தோர் தேவையின்றி, திட்டமிட்டு தாக்குவதற்கான அவசியம் இல்லை. எனவே மீண்டும் சென்னை திரும்பலாம் என, அங்குள்ள அரசு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று காலை இரண்டு ரயில்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து புறப்படுகின்றன. நாளை மறுநாள் அந்த ரயில், சென்னை வருகிறது. மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கானோர், ரயிலில் முண்டியடித்து இடம் பிடிக்கின்றனர். தென் மாநிலங்களில் இருந்து செல்லும் போது, ஏற்பட்ட நெரிசல் போல், தற்போது சென்னை திரும்பும் போதும், கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது என, அங்குள்ள ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் வருகையை ஒட்டி, சென்னை சென்ட்ரலில் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்