சென்னை: ""காங்கிரஸ் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின், 68வது பிறந்த தின விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. நல்லிணக்க உறுதிமொழியை ஞானதேசிகன் வாசித்தார். அதை, அனைவரும் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிருபர்களிடம் ஞானதேசிகன் பேசியபோது, ""தமிழக காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். அதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.