Karunanidhi seeks strong&permanent solution to attacks on TN fishermen | மீனவர் பிரச்னை: மத்திய அரசு முனைப்பு காட்ட கருணாநிதி கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர் பிரச்னை: மத்திய அரசு முனைப்பு காட்ட கருணாநிதி கோரிக்கை

Updated : ஆக 22, 2012 | Added : ஆக 20, 2012 | கருத்துகள் (54)
Advertisement
 மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க நிரந்தர தீர்வுக்கு மத்திய அரசு முனைப்பு காட்ட கருணாநிதி கோரி�

சென்னை:"இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படாமல் இருப்பதற்கு, உறுதியான நிரந்தர வழியை மத்திய அரசு காண வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:

கோடியக்கரை அருகே, 18ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். டீசல் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிச் சென்றுள்ளனர். இந்த திடீர் தாக்குதில், மீனவர்கள் நிலை குலைந்து போயுள்ளனர்.ஒன்பது மீனவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்."டெசோ' மாநாட்டிலே கூட, இந்திய மீனவர்களின் இந்தக் கொடுமைகளை விவரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றி, ஒரு வார காலத்திற்குள்ளாகவே மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். எனவே, இதற்கொரு நிரந்தர முடிவு காண, மத்திய அரசு தான் முனைப்போடு செயல்பட வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


"அக்கறையின்மையே காரணம்':

""தமிழக மீனவர்கள் பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் சரியான அக்கறை செலுத்தவில்லை என்பது தான், என்னுடைய குற்றச்சாட்டு,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கருணாநிதி அளித்த பேட்டி:"டெசோ' மாநாட்டின் தீர்மானங்களை பிரதமருக்கும், அவருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து, ஐ.நா., சபைக்கும் அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கூடங்குளத்தில் உற்பத்தியாகும், 1,000 மெகாவாட் மின்சாரத்தையும், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டுமென, தமிழக முதல்வர், பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியிருக்கிறார்; அது கிடைத்தால் நல்லது தான்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தப் பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் சரியான அக்கறை செலுத்தவில்லை என்பது தான், என்னுடைய குற்றச்சாட்டு. என் பெயரில் உள்ள, "டிவிட்ட'ருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து அந்த முயற்சியில் நாங்கள் எங்களை இணைத்துக் கொள்வோம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
22-ஆக-201201:49:07 IST Report Abuse
மதுரை விருமாண்டி மம்மியோட FACEBOOK அட்ரஸ் யாருக்காவது தெரியுமா ?? அல்லக்கைகள் இந்த சத்தம் போடுறாங்களே, அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமே என்று தான் ... "புரட்டு" ஓ, ஐ அம் சாரி "புரச்சி செல்வி" ன்னு தேடினாலும் கிடைக்கவில்லை...
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஆக-201215:39:40 IST Report Abuse
periya gundoosi டெஸோ மாநாட்டுக்குப் பிறகு மீனவர்கள் தாக்கப்படும் செய்தி வருமா? என்று எதிர்பார்த்திருந்தேன், வந்துவிட்டது. நான் முன்பே கருத்தை தெரிவித்தது போல் டெஸோ மாநாடு முடிந்த மறுநாள் மலேசியாவுக்கான் இலங்கைத் தூதர் தமிழர்களுக்கு ஆதரவாக ஏதோ கருத்துக் கூறப்போக அதை அறிந்த ராஜபக்ஷே அவரது பதவியைப் பறித்தார். பிறகு ராஜபக்ஷே கூறியது, இலங்கையில் தீவிரவாதம் இருந்தது அதை முற்றாக ஒழித்து விட்டோம். ஆனால் இன்று பிரிவினைவாதம் தலையெடுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது தமிழர்களுககு தனி ஈழம் கொடுக்க முடியாது என்ற கருத்து.உக்கிரமான போர் நடைபெற்ற முல்லிவாய்க்கால் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தளம் அமைக்க முடிவு செய்திருப்பதாகவும், மேலும் தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளும், மடாலயங்களும் அமைக்கப்படுவதாகவும் இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படும் ஒரு தொலைக்காட்சியில் கூறப்பட்டது. ஒரு வேளை இந்தியாவிற்கு விற்கப்படுவதாக இருந்த நிலம், சீனாவுக்கு விற்கப்பட்டாக உள்ள செய்தி அது தானோ? தற்பொழுது இலங்கை கடற்படையினரால் அடிபட்டு, துன்புறுத்தப்படட மீனவர்களிடம் விசாரியுங்கள் அப்படையினரில் யாரேனும் கருனாநிதி, டெஸோ என்று ஏதேனும் கேட்டார்களா என்று? சும்மா கிடந்தை சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாகி விட்டது, கருனாநிதி நடத்திய டெஸோ மாநாட்டால். டெஸோ மாநாட்டுத் தீர்மானம் இன்னும் ஐ.நா சபைக்கு அனுப்பவில்லையோ?
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
21-ஆக-201213:24:39 IST Report Abuse
maha சாத்தான் வேதம் ஓதுது
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
21-ஆக-201213:05:37 IST Report Abuse
Rangarajan Pg இங்கே சென்னையில் உட்கார்ந்து கொண்டு இலங்கை பிரச்சினையை பற்றி டில்லியில் உள்ளவர்களிடம் கூறினால் உங்களை யார் சட்டை செய்ய போகிறார்கள் கலைஞரே?? உங்கள் எம். பிக்கள் அங்கே என்னத்தை கிழித்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் மகன் அஞ்சா நெஞ்சனை விட்டு பாராளுமன்றத்தையே கிடுகிடுக்க செய்ய வேண்டியது தானே. அவர் அங்கே சும்மா தானே இருக்கிறார். பாவம் அவர், ஏற்கனவே தமிழகத்தில் ஆட்சி செய்யாமல் பேச்சு உரிமை இல்லாமல் தமிழகத்தில் அவர் குரலே கேட்க வில்லை. இன்னமும் சும்மா பேசாமல் இருந்தால் வேஸ்ட் ஆகி விடுவார். சும்மா அப்பப்போ எதையாவது பேசி PRACTICE செய்து கொள்ள சொல்லுங்கள். எதிர்காலத்திற்கு USE ஆகும். மத்தியில் சும்மா இருந்து கொண்டு அந்த ஊர் இந்த நாடு என்று சுற்றுவதை விட இதை போல எதையாவது செய்து பேசி லோக்கல் அரசியலில் ""டச்"" வைத்திருந்தால் தானே தேவைப்படும்போது பேசி பிழைப்பு நடத்த முடியும்?
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
21-ஆக-201212:40:24 IST Report Abuse
Rangarajan Pg மீனவர்களின் பிணங்களின் மீதி நின்று கொண்டு இந்த ஆள் செய்யும் அரசியல் சகிக்கவில்லை. இவர் ஆட்சியில் இருக்கும்போது என்னத்தை கிழித்தார்? மீனவர்கள் அத்து மீறி அவர்கள் எல்லைக்குள் சென்றார்கள் என்றெல்லாம் கூறினாரே, தற்போது மட்டும் மீனவர்கள் எல்லை மீறி இருக்க மாட்டார்களா? இவர் ஆட்சி செய்தால் ஒரு நியாயம், மற்றவர் ஆட்சி செய்தால் வேறொரு நியாயம். என்ன கூத்து இது? டெசோ டெசோ என்று இன்னமும் பிதற்றி கொண்டிருக்கிறார். அது தான் ஊற்றி மூடியாகி விட்டதே. அதை இவரே ஒரு பொழுதுபோக்கிற்கு தானே நடத்தினார். அதில் ஏதோ தீர்மானம் போட்டு அதை நிறைவேற்றி வேறு விட்டாராம், அதை அப்படியே மாநில மற்றும் மத்திய அரசு பின்பற்ற வேண்டுமாம். இவர் தீர்மானம் நிறைவேற்றி விட்டார், அவர்கள் பின்பற்றி விடுவார்கள். அவர்கள் பின்பற்ற வில்லை என்றால் இவர் என்ன கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவாரா என்ன? சும்மா டைம் பாஸ் செய்யும் மனிதர் இவர். இவருக்கு இலங்கை தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, மின்சார பிரச்சினை என்று ஒரு நூறு விதமான பிரச்சினைகளை செலக்ட் செய்து, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாள் ROUTINE ஆக எடுத்து விடுவார். இது தான் இவரது தற்போதைய பொழுது போக்கு. யாரும் சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம் இந்த மனிதரை. நாம் அனைவரும் பேசி பேசியே அந்த ராமதாசை ஓரம் கட்டினோம், இவரையும் அதே போல DEAL செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel
JEYAKUMAR - madurai,இந்தியா
21-ஆக-201212:26:22 IST Report Abuse
JEYAKUMAR கச்ச தீவை இலங்கைக்கு பிச்சை போட்டாச்சு. போட்ட பிச்சையை திரும்ப கேட்பது அதைவிட பிச்சைகாரதனம். எனவே தற்போது மீனவர்கள் தாக்க படாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என உத்தேசித்து, உடனடி நடவடிக்கையில் இந்திய தமிழக அரசு ஈடுபடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
21-ஆக-201209:44:09 IST Report Abuse
JAY JAY மீனவ நண்பன் - PART 11 - ஆனா FLOP FILM ....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஆக-201209:36:23 IST Report Abuse
Pugazh V கச்சத் தீவை தாரை வார்த்தது தி மு க வா? மாநில அரசுக்கு இது மாதிரியான அதிகாரங்கள் கிடையாது என்பது கூடத் தெரியாமல் பேசுபவர்களை விட்டு விடுவோம். கச்சத் தீவை தாரை வார்த்தது இந்திராஅம்மையார்- அதை ஆதரித்தது, துக்ளக் உட்பட, அப்போதய எம் ஜி ஆர் தலைமையிலான ௮ தி மு க. எதிர்த்தது தி மு க" - சந்தேகம் இருப்பவர்கள், பழைய துக்ளக் இதழ்களையோ அல்லது அரசு ஆவணங்களையோ பார்க்கவும். மு க வை திட்டுபவர்களே, அவர் செய்யாததை, இப்போதைய மாநில அரசை செய்ய சொல்லுங்களேன். தி மு கே ஒன்றும் செய்ய வில்லை என்று தானே ௮ தி மு க வைக் கொண்டு வந்தீர்கள்- இப்பவும் தி மு க வையே திட்டிக் கொண்டிருந்தால் எப்படி??
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஆக-201215:17:16 IST Report Abuse
Nallavan Nallavanகச்சத் தீவை தாரை வார்க்க,,,, வாய் பொத்தி ஒப்புக்கொண்டது தான் அந்நாளைய திமுக அரசு அதுவே தாரை வார்த்தது என்று எந்த அறிவிலியும் சொல்லவில்லை. படித்த அனைவரும் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதை அறிவர். ஒப்புக்கொண்டதன் நிர்பந்தத்தை அனைவரும் அறிவர் (ஆம், சர்க்காரியா வழக்குகளைப் புதைக்கத்தான்). திமுக ஒன்றுமே செய்யவில்லை என்பது நடுநிலையாளர் கருத்தல்ல "நிறையச் செய்தது" என்ன நிறைந்தது? கருவூலமா? யாருடைய கருவூலம்? என்ற கேள்விகளே விடை காணப்பட வேண்டியவை...
Rate this:
Share this comment
எமதர்மா - - CHENNAI,இந்தியா
22-ஆக-201200:16:38 IST Report Abuse
எமதர்மா - 1974 ல் கச்சத்தீவு தாரை வார்க்க பட்டபோது அ தி மு க ஆட்சியில் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
shanmugam suresh - Singapore,சிங்கப்பூர்
21-ஆக-201209:12:53 IST Report Abuse
shanmugam suresh தலைவா, ஏதாவது கதை எழுதி, படமெடுத்து சம்பாரிங்க தலைவா.. ஏன் இப்படி பேட்டியா குடுக்குறிங்க.. முந்தி மாதிரி கிடையாது தலைவா...சம்பாரிச்சு ஆகணும்..நீங்க குடுக்கிற குவாடரும் பிரியாணியும் குடும்ப நடத்த பத்தாது.. எல்லாரும் உங்களுக்கு பாதுகாவலராகவும் வரமுடியாது(ஏதோ சின்னதா நாலு காசு பாக்கலாம்), அதுனால அனைவரும் வேலைக்கு போறாங்க.. நீங்க விடுமுறை நாள்ல வாங்க நம்ம பேட்டி, போட்டி , அரட்டை எல்லாம் நடத்துவோம்.
Rate this:
Share this comment
Cancel
சாதனா - சென்னை,இந்தியா
21-ஆக-201208:48:59 IST Report Abuse
சாதனா ஜெயக்குமார், தூத்துக்குடி ‌‌சொல்வது தான் கரெக்ட். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்வதால் தான் சுடப்படுகிறார்கள் என்பது மீனவர்களுக்கும் தெரியும், இந்திய கடற்படைக்கும் தெரியும், இந்திய அரசாங்கத்திற்கும் தெரியும், எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும். சும்மா இந்த அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக இதை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு தான். அப்படியெல்லாம் ஒரு பெரிய நாட்டிடம் சின்ன நாடு ‌தொடர்ந்து வாலாட்டிக்கொண்டிருக்க முடியாது.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
21-ஆக-201210:19:31 IST Report Abuse
Pannadai Pandianஅப்படியானால் சர்வதேச கடல் எல்லை என்று ஒன்று இல்லையா ??? அங்கு சென்று மீன் பிடிக்க முடியாதா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை