Centre 'soft handling' attacks on TN fishermen: Jayalalithaa | மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய அரசு அசட்டை: ஜெயலலிதா புகார் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய அரசு அசட்டை: ஜெ., புகார்

Updated : ஆக 22, 2012 | Added : ஆக 20, 2012 | கருத்துகள் (35)
Advertisement
 மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய அரசு அசட்டை:பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெ., புகார்,Centre 'soft h

சென்னை:"தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் விவகாரத்தில், இலங்கை மீது, இந்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கிறது' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு, முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழக மீனவர்கள் மீது, 18ம் தேதி, இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் மற்றும் அத்துமீறல் குறித்து, தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த, 18 மீனவர்கள், ஐந்து பைபர் படகுகளில், கடந்த, 17 மற்றும் 18ம் தேதிகளில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.


தொடரும் தாக்குதல்

:வெள்ளப்பள்ளம் அருகில், 18ம் தேதி, மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு, டி-146 என்ற எண் கொண்ட படகில், இலங்கை கடற்படையினர் வந்தனர்.அவர்கள், மீனவர்கள் படகுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், மீனவர்கள் மீதும், தங்கள் அத்துமீறல்களை அரங்கேற்றினர். மீன்பிடி உபகரணங்களை, கடலுக்குள் வீசியதோடு, அவர்களின் வலைகளையும் அறுத்துள்ளனர். தாக்குதலில், ஒரு மீனவருக்கு, வலது கை மணிக்கட்டில், கத்திக் காயம் ஏற்பட்டுள்ளது; மேலும், ஏழு மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் ரப்பர் கட்டை தாக்குதலில், லேசான காயமடைந்து உள்ளனர்.காயமடைந்த அனைத்து மீனவர்களும், நாகை அரசு மருத்துவமனையில், 19ம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பதற்கு, இது மற்றுமொரு எடுத்துக்காட்டு.தமிழக மீனவர்கள் மீது, அவர்கள் தாக்குவது தொடர்ந்து நடப்பது கவலைக்குரியது என்பதை, நான், ஜூலை, 23ம் தேதி எழுதியுள்ள கடிதத்திலும் தெரிவித்திருந்தேன்.


காகித அளவில்...:

மத்திய அரசு இதில் தலையிடாவிடில், தாக்குதல்கள் தொடரும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு மிகவும் மென்மையான போக்கை கடைபிடிப்பதால், இலங்கை கடற்படையினர் இரக்கமின்றி, துணிச்சலுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இரு நாடுகளிடையே நடந்த தூதரக மட்ட பேச்சுவார்த்தையின் போது, வெளியிடப்பட்ட அறிக்கையில், "மீனவர்கள் தாக்கப்படுவது எந்த காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது' என கூறப்பட்டிருந்தது.அது இன்றளவும், காகித அளவில் மட்டுமே உள்ளது.எனவே, இந்த விவகாரம் குறித்து, உடனடியாக இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை, கண்டிப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்; உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
22-ஆக-201206:51:44 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy எருதுகள் கூட்டமாய் வந்தால் சிங்கம் பயந்துக்கும். ஆனால் Thani தனியா வந்தால் இப்படிதான் அடிச்சு சாப்பிடும் ( அந்த சிங்கம் பண்ணிகூடங்கள நல்ல விலை கொடுத்து வாங்கிடுசோ? )
Rate this:
Share this comment
Cancel
rajeshkumar - juroung ,சிங்கப்பூர்
21-ஆக-201217:07:48 IST Report Abuse
rajeshkumar மீன் பிடிக்கும் போது மீனவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 100 படகுக்கு 10 போலீஸ் வீதம் கடலுக்குள் அனுப்ப பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஆக-201216:51:04 IST Report Abuse
Pugazh V எல் டி டி ஈ இயக்கத்தை தடை செய்யப்பட இயக்கமாக அறிவிக்கப் பாடு பட்டு அதில் வெற்றியும் கண்டு, அந்த இயக்கத்தை தடை செய்த ஜெயலலிதா இப்போது போடும் பகல் வேஷம் யாருக்காக? கடந்த ஐந்தாண்டுகளாக, இலங்கைக்கு தி மு க அரசு எதுவும் செய்ய வில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களே, இப்போதைய ௮ தி மு க அரசு என்ன செய்கிறது, புதிதாக என்று விளக்கினால் நலம். மு க வாவது உடனே உடனே தன கருத்தையும், வேண்டுகோளையும் மத்திய அரசுக்கு எழுதிக் கொண்டிருந்தார். இந்த அம்மா தூங்கி எழுந்து , மு க கடிதம் எழுதின பின் அடுத்த நாள் கடிதம் எழுதுகிறார் என்னவோ இவர் வந்து கிழிச்சுடுவார்னு தானே மக்கள் இவரை வர வெச்சாங்க
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
21-ஆக-201214:19:13 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran இங்கு கருத்து எழுதுபவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் மு. க. மத்தியிலும் மாநிலத்திலும் பதவியை அனுபவித்துக்கொண்டு பல லச்சம் கோடி கொள்ளையடித்து கொண்டிருந்தார் இப்போதும் தமிழக விரோத மத்திய அரசை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். தமிழக கமாண்டோ வீரர்களை மீனவர்களுக்கு துணையாக அனுப்பி இலங்கை அரக்கர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Leslysuresh - coimbatore,இந்தியா
21-ஆக-201212:22:05 IST Report Abuse
Leslysuresh என்னயா பண்றீங்க ப்ரிதமரே நீங்க என்ன சோப்பு பொம்மையா ...ச்சே போங்கய வெறுத்து போச்சு
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
21-ஆக-201211:17:33 IST Report Abuse
வைகை செல்வன் சசி திருப்பம் ஆகிவிட்டதால் மீண்டும் அடுத்து ஆட்சியை பிடிப்பது சந்தேகமே.. மு க வுக்கும் அதே கதி தான்.. ஒருவேளை செங்கன்னனுக்கு யோகம் அடித்தாலும் அடிக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
kudimagan - chennai,இந்தியா
21-ஆக-201210:26:18 IST Report Abuse
kudimagan அங்க போனா சுடுரான்னு தெரியுதுல ... ஆனாலும் விடாம அங்க தான் போவேன் அப்டின்னு போறது கொழுப்பா இல்ல அறியாமையா ?? தினமும் மக்கள் செத்தே தான் இருக்காங்க .... மத்திய அரசு ஒரு பத்து வருஷம் கழிச்சி இதுக்கு முடிவு எடுத்தா அது வரைக்கும் மக்கள் மீன் பிடிக்க போய் செத்துட்டே தான் இருப்பாங்களா ?
Rate this:
Share this comment
Cancel
Ravikumar J - PUNE,இந்தியா
21-ஆக-201210:04:52 IST Report Abuse
Ravikumar J எந்த அரசியல் வாதி கிட்டயும் ஒற்றுமை கிடையது. எல்லரும் கடிதம் தான் எழதுவாங்க... மனுசங்க ஊசுரு அவுங்களுக்குக் ஒரு .........
Rate this:
Share this comment
Cancel
A.KUMAR - CHENNAI,இந்தியா
21-ஆக-201209:57:25 IST Report Abuse
A.KUMAR தினம் தினம் மீனவர்கள் தாக்குதல் செய்திகள் இல்லாத பத்திரிகைகளே இல்லை. நமது தாத்தாவும், நமது அம்மாவும் மத்திய அரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு பதிலாக மீனவர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுத்து இலங்கை கடற் படையை தாக்குதல் செய்ய வேண்டும். அப்போதுதான் இலங்கை ஆணவம் குறைந்து நமது மீனவர்கள் பயம் இன்றி நமது எல்லையில் மீன் பிடிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
21-ஆக-201209:47:02 IST Report Abuse
JAY JAY தந்தி அடித்தாலே MMS க்கு உரைக்காது.....இதுல என்னத்த கடிதம் எழுதி....என்னத்த நடவடிக்கை எடுத்து....அட போங்கப்பா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை