அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிக்கு வராமலும், உரிய சிகிச்சை அளிக்காமலும், ஓ.பி., அடிக்கும் டாக்டர்களை கண்டறிய, ஒரே நேரத்தில், அதிரடி சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. மாவட்ட வாரியாக, இந்த திட்டம் அமலாகவுள்ளது.
அரசு மருத்துவமனை டாக்டர்களின் சேவை குறைபாடு குறித்து, சுகாதாரத் துறைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை ஆய்வு செய்து, பணிக்கு வராமல், ஓ.பி., அடிக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், சுகாதாரத் துறை அதிகாரிகளை, முழுவீச்சில் களமிறக்கி, இந்த சோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில், ஆக., 17ல், ஒரே நேரத்தில், 20 சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் தலைமையிலான குழு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோதனை நடத்தியது.
இதன்படி, சாணார்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய, உதவி மருத்துவ அலுவலர் செந்தில்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார். சக டாக்டர்கள் மீது, தொடர்ந்து பெட்டிஷன் போட்டு வந்த, டாக்டர் சசிக்குமார் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அரசின் இந்த நடவடிக்கையால், ஒழுங்காக பணியாற்றும் டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இந்த ஆய்வு மூலம், அரசு மருத்துவமனைகளில் செயல்படும் கருவிகள், செயல்படாமல் உள்ள கருவிகள், தேவைப்படும் கருவிகள் குறித்தும் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில், தேவைப்படும் கருவிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றை வழங்கி, மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தவும், அரசு முடிவு செய்துள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மிக மிக வரவேற்க்கக்கூடிய சட்டம் ஆகும். பாராட்டுக்குரியது. முதல்வர் அவர்கள் சாட்டையை சுழற்றினால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் பரிபூர்ண சுத்தமடையும் என்பது அறிந்த ஒன்றே. இராணுவ மருத்துவ மனைகளில் சேவை எப்படி இருக்கிறதோ அதேப்போல் தமிழகத்தில் முதல்வர் அவர்கள் நினைத்தால் நிச்சயமாக கொண்டுவரமுடியும். இப்படி செய்தால் உலக மக்களே வாழ்த்துவார்கள் என்பது நிச்சயம். இது நடக்கவேண்டி இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போமாக ஆமீன்.
அய்யா எனக்கு தெரிந்த வரை கோவை மாவட்டத்தின் கீழ் வரும் பின்னலாடை நகரத்தையும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பிரசவத்திற்கு கூட இருப்பதில்லை. இந்த பகுதியில் பிரசவ மரணங்கள் அதிகமாக இருக்க காரணம் டாக்டர்கள் இன்மை மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை. இந்த மாதிரி விசயங்களை விட டாக்டர்கள் செய்யும் மோசடிகள் மிக அதிகம். அரசு அளிக்கும் பணத்தில் இவர்கள் சுருட்டி கொள்வது அதிகம். எதை கண்டு கொள்ளாமல் இருக்க மேல் அதிகாரிகளுக்கு மாதம் தோறும் கையூட்டு அவர்கள் இடத்திற்கு சென்று விடுகிறது. பாப்போம் என்ன நடக்கிறது என்று
தனியார் மருத்துவ மணையில் மட்டும் என்ன வாழ்கிறது. நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது, யார் அளிக்கிறார்கள்? எந்த நிலையில் அளிக்கிறார்கள் என்பது யார் கவனிக்கிறார்கள்? இதன் விளைவாக நேற்று சென்னையை அடுத்த மறைமலை நகரில் குடியிருக்கும் ஆறுமுகம் என்பவர் சிகிச்சை அளிக்கும்போது இறந்திருக்கிறார். இது நடந்தது அதன் அருகில் அமைந்துள்ள ஒரு மருத்துவ மணையில். இதையும் அரசு கவனிக்குமா? ப. மாதவன்.
டாக்டர்கள் சரிவர பணிக்கு வருகிறார்களா என்பதை எப்போதோ ஒரு தடவை பரிசோதனை செய்து கண்டுபிடிக்க முடியாது. எந்த ஒரு டாக்டரும் சரியான நேரத்தில் வருவதும் இல்லை போவதும் இல்லை. பணி புரியும் இடத்தில் குடி இருப்பதும் இல்லை. வசதியான நகரத்தில் இருந்து கொண்டு அங்கே மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு பணி இடத்தில் குடி இல்லாத மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். பணிக்கு வருவதை சரிவர கண்காணிக்க அவர்கள் விரல் ரேகையை பணிக்கு வரும்போதும் பணி முடித்து செல்லும் போதும் பதிவு செய்யும் கருவிகளை பொருத்தி ஒழுங்காக பணிக்கு வருகிறர்கள என்பதை மாவட்ட தலை நகரங்களில் இருந்தே கண்காணிக்கும் முறையை அமுல் படுத்தினால் மட்டுமே OB அடித்துவரும் டாக்டர்களை திருத்த முடியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.