திருவனந்தபுரம்: "நாட்டில், 2011ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், 1.36 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும், 15 ஆயிரத்து 422 பேர் இறந்துள்ளனர்' என, தேசிய போக்குவரத்து திட்டம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் நடந்த கருத்தரங்கில், இந்த மையம் சார்பில், வெளியிடப்பட்ட அறிக்கை: நாட்டில், 2011ம் ஆண்டில், 4.40 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 1.36 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில், அதிகபட்சமாக, 65 ஆயிரத்து 873 விபத்துகளும், மகாராஷ்டிராவில், 47 ஆயிரத்து 120, கர்நாடகாவில், 44 ஆயிரத்து 696, ஆந்திராவில், 41 ஆயிரத்து 66 விபத்துகளும் நடந்துள்ளன. தமிழகத்தில் நடந்த விபத்துகளில், 15 ஆயிரத்து 158 பேரும், உ.பி.,யில், 14 ஆயிரத்து 996, மகாராஷ்டிராவில், 13 ஆயிரத்து 680 பேரும் இறந்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில், டில்லி முதலிடம் வகிக்கிறது. இங்கு நடந்த, 7,280 சாலை விபத்துகளில், 2,107பேர் பலியாகியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், லட்சத் தீவுகளில், எந்த சாலை விபத்துகளும், இறப்புக்களும் நிகழவில்லை. நாகாலாந்தில், மிகக் குறைவாக, 32 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 36 பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் நடந்த சாலை விபத்துகளில், 13 லட்சம் பேர் இறந்துள்ளனர். ஐந்து கோடி பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மோசமான சாலைகள், கேவலமாக பராமரிக்கப்படும் வாகனங்கள், கடைபிடிக்க படாத சாலை விதிகள், நம்முடைய சாலைகளுக்கு சற்றும் லாயக்கில்லாத அதி வேக வண்டிகள், ஓட்டுனர்களின் பொறுமையின்மை, போதிய ஓய்வின்மை, மற்றவரின் நலனில் சிறிதும் அக்கறை இன்மை, எல்லோரையும் முந்த வேண்டும் என்ற "ஈகோ", சரியாக திட்டமிடப்படாத, அவசரமான பயணங்கள், போதை பழக்கங்கள், உணவு கட்டுபாடின்மை, அரசு போக்கு வரத்து கழகங்களில், தவறாக நிர்ணயிக்கப்படும் நேரங்களின் காரணமாக "சீக்கிரம் டிப்போவை அடைய வில்லை எனில் மெமோ அல்லது தண்டனைகளுக்கு&39 பயந்து ஆதங்கத்தில் வேகமாக ஒட்டுதல், அஜாக்கிரதையாக ஓட்டுபவருக்கு எந்த விதமான கடுமையான தண்டனையும் விதிக்காத போக்கு, எல்லாவற்றிற்கும் லஞ்சம் இன்னும் பல காரணங்கள். இவற்றை கவனித்து அரசும் மக்களும் சரி செய்து கொண்டால், விபத்துகள் இன்றி மாற வாய்ப்புண்டு
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு உள்ளதைப்போன்று வாகன ஓட்டிகளுக்கும் பொதுவான தகுதி தேர்வு நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும். தோல்வி அடைந்தவர்கள் மூன்று மாதம் கழித்து துணைத்தேர்வு எழுதி வாகனம் ஓட்ட அனுமதி பெறவேண்டும் என்ற சட்டம் கொண்டுவந்தால் வாகன விபத்தை பெருமளவு குறைக்கலாம்
சாலை .... அதை போடுவதே கொல்வதற்குத்தான் ஆளை ...
ரோடு ..அதுதான் மக்களுக்கு இன்று சுடுகாடு ....
சந்திப்பு ...அதில் காட்டும் சிகப்பை பற்றி மக்களுக்கும் இல்லை சிந்திப்பு .....
வேகம் ... அதை பின் தொடர்பவனுக்கு சாலையில் என்றும் சோகம் ......
அலைபேசி ... எமன் உன்னை அழைக்கிறான் வலைவீசி .....
துப்பட்டா ...சாவுக்கு என்றும் துணை நிற்கும் சப்போட்டா ....
விபத்துகள் குறைய மக்களின் பங்கும் அவசியம். ஹெல்மெட் அணிதல் , சாலை விதிகளை பின்பற்றுதல், விதிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை செலுத்துதல் , செல்போன் உபயோகித்தல் போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். அதே நேரம் காவல் துறையினர் வேக எல்லை மீறுதல், குடித்து விட்டு வாகனம் ஒட்டுதல் போன்றவற்றிற்கு சரியான அபராதம் விதித்தல் போன்றவற்றை மேற்கொண்டால் விபத்துக்கள் குறையும்.
Actually, this motor enginee is a machine. We need training and safe practice to operate. Train/aeroplane also an engine. But with so many safety measures, we operate with signal, track/traffic condition etc. Like train/plane engine every two/three/four wheeler also given an engine to drive. If no body respects the traffic rules, donot know how to operate, negligence etc we have to face the accidents. Take europe/western/eastern countries. They follow and minimal accidents. What ever you wright/speak unless dicipline comes thsese will continue./Magesh
தமிழ் நாட்டின் மது விலக்கு தான் இதற்கு முக்கிய காரணம்..கடந்த ஆட்சியில் மு க எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தான் ஓட்டுனர் உரிமம் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்ததை மு க கொண்டு வருவதால் எதிர்ப்பேன் என்று எதிர்தவரின் ஆட்சியில் இந்த சாதனை இன்னும் பல மடங்கு உயரும்..ஓட்டுனர் உரிமத்துக்காகவாவது பலர் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு வரை படிப்பார்கள்...மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால் குவாட்டர் பிரியாணி கொடுத்து ஒட்டு வாங்க முடியாதே... மக்களை பற்றிதான் கவலையே இல்லையே இந்த பாழாய் போன அரசியல் வாதிகளுக்கு..
தமிழ் நாட்டின் மக்கள் தொகை உ.பியை விட பாதிதான் ஆனால் சாலை விபத்தில் இறந்தவர்கள் அதிகம். உ.பி பொருளாதாரத்தில் பின் தங்கிய மானிலம், அதனால் வாகனங்கள் குறைவு என சொல்லலாம். ஆனால், மஹாராஷ்டிரா, தமிழகத்தை விட முன்னேறிய மானிலம். 1000 பேருக்கு என்றூ எடுத்து கொண்டால் மஹாராஷ்டிராவில் வாகனம் அதிகம். மக்கள் தொகையும் அதிகம் (மஹாராஷ்டிரா 10 கோடி, தமிழ் நாடு 7 கோடி). ஆனால் தமிழகத்தில் மஹாராஷ்டிராவை விட அதிகம் பேர் செத்துள்ளனர். தமிழ் நாட்டில் போக்குவரத்து துறை என்று பெயரளவில்தான் உள்ளது. டிரைவிங்க் லைசென்ஸ் கொடுக்கும்போதே சரியாக செக் செய்வதில்லை. சாலை விதிகள் தெரியாமலே வண்டி ஓட்டுகிறார்கள். கேட்டால் கூட்டம், நெரிசல் என்று வியாக்கியானம். சென்னை முதல் பெங்களூர் (என்.எச். 4), கன்யாகுமரி முதல் பெங்களூர் (என்.எச்.7), சென்னை முதல் திருச்சி (என்.எச். 47) போன்ற சாலைகள் தரமாக உள்ளன. இருந்தாலும் தமிழ் நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகம். அரசாங்கத்தை குறை சொல்வதை விட பொது மக்களின் போக்கே இதற்கு காரணம். குடித்து விட்டு ஓட்டுவது, டிரைவிங்க் லைசென்ஸ் பணம் கொடுத்து வாங்குவது என பல பிரச்சினைகள்... போக்குவரத்து துறை செயல்பாடற்று உள்ளது. சமீபத்தில் தாம்பரத்தில் நடந்த பஸ் விபத்தில் பள்ளி மாணவி இறந்த வழக்கில், வாகன சோதனை செய்த ஆர்.டி.ஓ எக்ஸ்பிரஸ் எஃப்.சி கொடுத்துள்ளார். இவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு உதவியாளராக இருந்த காரணத்தினால், இவரை காப்பாற்ற பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. கோர்ட் தலையிட்டதால், இவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. போக்குவரத்து துறை இப்படி இயங்கினால் எப்படி வாழும்? தமிழக முதல்வர் இந்தியாவில் முதல் மானிலம் என்று பெருமைப்பட்டு கொள்வது 15,000 சாவின் மீதுதான்...
Ruling Govts. whether central or state has quick fix for these accident, announce solatium to the diseased in lakhs from public fund and everything is done. What a great idea and practice. If one can look at analysis of these accidents, most of them happen in night times only. None of the heavy vehicles, including govt. run transport buses has tail lamps and most of the private heavy vehicles even have head lights ON. Even a good driver is made into an accident because of these. Did any one has time to make an analysis on these accidents. Even Dinamalar can do this analysis and publish to awareness instead of analysing useless actions of politicians. As a reward (or punishment) vehicles without tail and or head lamps working at night times, cocerned RTO who had given permission for that vehicle can be jailed for life.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.