DMK calm in 1.86 lakh crore coalgate scam: Parliament session resuming today set to be stormy | பிரதமர் நாற்காலி ஆட்டம் காண்கிறது: பதவி விலக பார்லி.,யில் எதிர்கட்சியினர் போர்க்குரல் !| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (222)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: நிலக்கரி பேரத்தில் நடந்த முறைகேட்டின் மூலம் நாட்டிற்கு 1 . 86 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்திருக்கும் சர்ச்சை காரணமாக பிரதமர் பதவியில் நீடிக்க தகுதி இல்லையென்றும், அவர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பார்லி.,யில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கை பாதிக்கப்பட்டன. தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் பார்., இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.அவையில் கூச்சல் நிலவியபோது இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், பிரதமர் அறிக்கை வழங்குவார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுத்து விட்டன. மேலும் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தினர்.

மவுனம் காக்கும் தி.மு.க., : மத்திய அரசுக்கு எதிரான, 1.86 லட்சம் கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில், காங்கிரசின் கூட்டணி கட்சியான, தி.மு.க., இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காக்கிறது. இதற்கிடையில் தி.மு.க, எம்.பி.,க்கள் இன்று பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதேநேரத்தில், விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் கூடும் பார்லிமென்ட் கூடியது. இந்த இமாலய ஊழல் விவகாரத்தை, பெரிய அளவில் கிளப்பி, சபைகளை கிடுகிடுக்கச் செய்ய, பா.ஜ., உட்பட, சில எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.சனி, ஞாயிறு மற்றும் ரம்ஜான் பண்டிகைக்காக திங்கள் என, மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், பார்லிமென்ட் இன்று மீண்டும் கூடியது. மழைக்கால கூட்டத் தொடரான இதில், முக்கிய மசோதாக்கள் பலவற்றை, எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்

என்ற எண்ணத்தில், மத்திய அரசு உள்ளது.இந்நிலையில், மத்திய தணிக்கை ஆணையமான, சி.ஏ.ஜி., மூன்று முக்கிய அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. அதனால், "நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விடாமல், தனியாருக்கு விட்டதில் ஊழல், அல்ட்ரா மெகா மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதில் மிகப் பெரிய ஊழல் மற்றும் டில்லி விமான நிலையம் கட்டும் திட்டத்தில் ஊழல்' என, பரபரப்பான குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. மக்களின் வரிப் பணம், இந்தளவுக்கு வீணடிக்கப்பட்டுள்ள விவகாரத்தை, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தீவிரமாக எழுப்ப திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். எனவே, "நடந்துள்ள மிகப் பெரிய ஊழலுக்கு, தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலக வேண்டும்' என, தே.ஜ.கூட்டணி கோரிக்கை வைக்கிறது.

நியமன முறையில் நிலக்கரி வழங்கல்:நிலக்கரி ஊழலைப் பொறுத்தவரை, 28 தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, ஏல முறையில் அளிக்கப்படாமல், நியமன முறையில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அல்ட்ரா மெகா மின் உற்பத்தி நிலைய திட்டங்களிலும், ஊழல் நடந்துள்ளதாக, மற்றொரு அறிக்கையில், சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது. அதன்படி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தனக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரியை, பிற தனியார் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. இவ்வாறு நிலக்கரியை தந்ததால், அந்த ரிலையன்ஸ் நிறுவனம், 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை லாபம் பார்த்துள்ளது.இதுதவிர, டில்லி விமான நிலையம் கட்டும் திட்டத்தை ஏற்று நடத்திய, ஜி.எம்.ஆர்., நிறுவனத்திற்கு, 4,800 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் வெறும், 100

Advertisement

பிரச்னை இருக்காது:நிலக்கரி ஊழல் குறித்து, டில்லியில் நிருபர்களிடம் அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியதாவது:இந்த விவகாரத்தில், தவறு ஏதும் நடக்கவே இல்லை. மிகவும் வெளிப்படையாகவே நிலக்கரி சுரங்கங்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, சி.ஏ.ஜி., அறிக்கை அளித்தவுடன், காங்கிரஸ் தரப்பில், கடும் நெருக்கடி அளிக்கப்பட்டு, மத்திய அமைச்சராக இருந்த ராஜா ராஜினாமா செய்தார். இப்போது, அதே சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்து, சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், தி.மு.க.,வின் நிலை என்னவென்பதுஇதுவரை தெரியவில்லை.திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், அரசுக்கு எதிராக, பெரிதாக எதையும் தெரிவிக்கவில்லை. அதனால், சில நாட்களுக்கு மட்டும் பார்லிமென்டில், புயல் வீசுமே தவிர, தொடர்ந்து இப்பிரச்னையை தீவிரப்படுத்தி, அரசுக்கு கட்சிகள் நெருக்கடியை கொடுக்குமா என்பது சந்தேகமே..

- நமது டில்லி நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (222)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - Chennai.,இந்தியா
21-ஆக-201222:42:24 IST Report Abuse
Kunjumani ஐயா சாமிமார்களே இந்த மாபியா கும்பல்களின் திட்டம் உங்களுக்கு புரியவில்லை. தானை தலைவர் எனது மகளை விடுவிக்கவில்லை என்றால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உனது பங்கை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பேன் என்று சொக்கக்தங்கத்தை மிரட்டியிருப்பார், அவரும் நிலக்கரி பேரத்தில் நடந்த முறைகேட்டின் மூலம் நாட்டிற்கு 1.86 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக ஒரு அறிக்கையை ரிலீஸ் செய்து மன்னுஜியை (நம்ம ராசா மாதிரி) பலிகடா ஆக்கி அரைவேக்காட்டை பிரதமர் ஆக அறிவிப்பார். 1.86 லட்சம் கோடி பெரிதா இல்லை 1.76 லட்சம் கோடி பெரிதா..?? மக்கள் இந்த 1.86 லட்சம் கோடி இழப்பை பெரிதாக பேசிகொண்டிருக்கும் பொழுது சந்தடி இல்லாமால் கனிமொழியை விடுவிப்பார். மாறன் மேல் எவ்வளவு குற்றசாட்டுகள் தொட முடிகிறதா, ஏன் என்றால் அவர் கொடுத்த பங்கிற்கு அவரிடம் ஆதாரம் இருக்கும், அது மாதிரி விளையாட்டுதான் இது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு நாட்டில் எங்காவது இல்லை பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரு மத கலவரம் நடக்கும், மதசார்பற்ற காங்கிரஸ் மதவெறி பாஜக மேல் சிங்கமென பாயும்.. மக்களும் இதை மறந்து மதவெறி பாஜக கட்சியை கண்டிபதாக நினைத்து காங்கிரஸ் கட்சிக்கு தன் ஓட்டை குத்துவார்கள். வாழ்க இத்தாலி, மன்னிக்கவும் பாரதம் .
Rate this:
Share this comment
Cancel
GANESH PRABHU - somanur,இந்தியா
21-ஆக-201221:39:01 IST Report Abuse
GANESH PRABHU its very usual and common for our people. every week one new scam. very niece. its all in the hands of youngsters
Rate this:
Share this comment
Cancel
raj - Coimbatore,இந்தியா
21-ஆக-201221:06:12 IST Report Abuse
raj பொறுமையா இருங்கப்பா புதுசா ஒரு சேனல் வரும். அதில் "காங்கிரஸ் ப்ரோமொடேர்ஸ்" இல் நிலம் வாங்குங்கோ கிரைய செலவு முற்றிலும் இலவசம். எங்களிடம் 28 state இருக்கு... 7 union territories இருக்கு. வெறும் 1 லட்சம் கோடி இருந்தால் ஒரு state வாங்கிரலாம். 2 state வாங்குபவர்க்கு 1 union territory இலவசம். அருகிலேயே இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் சீனா போன்ற நாடுகள் உள்ளன. 24 மணிநேரமும் தண்ணீர் வசதி (கங்கா, யமுனா, பிரமபுத்திர,காவேரி) உள்ளது. இந்த சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே... விரைவில் முந்துங்கள் -
Rate this:
Share this comment
Cancel
saro - chennai,இந்தியா
21-ஆக-201220:52:50 IST Report Abuse
saro 2G யை மிஞ்சிய ஊழல் தமிழனுக்கு இருந்த ஒரே பெருமையும் போச்சு திமுக அடுத்த முறை மந்திரி சீட் கேட்கும்போது (அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால்) இந்த கனிம வளத்துறையையும் போராடி கேட்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் .. இப்போதைக்கு கலைஞர் டயலாக் "வடை போச்சே"
Rate this:
Share this comment
Cancel
NVRAMANAN - chennai ,இந்தியா
21-ஆக-201220:49:03 IST Report Abuse
NVRAMANAN உண்மையிலே நல்ல அரசியல் வதி என்றும் நல்ல பொருளாதார மேதை என்பது இவருக்கு பெயர் உண்மை என்றால் இவர் உடனனடியாக் பதவியை தூக்கி எறிந்து விட்டு, கொஞ்ச நாட்கள் சும்மா இருந்தால் இவர் நல்ல மனிதர் அவர் , இப்படி அடி பட்டு அசிங்கபட்டு ,அவமானபட்டு பவர் இல்லாத பிரிதம மந்திரி என்று ருப்பதை விட வேறு ஒரு கேவலம் இந்த நாட்டுக்கு இருக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Chandra Sekar - tirupur,இந்தியா
21-ஆக-201220:07:59 IST Report Abuse
Chandra Sekar அடுத்த ஊழல் செய்தி வரும்வரை இந்த செய்தி உயிருடன் இருக்கும் ( example 2g )
Rate this:
Share this comment
Cancel
Thilakar N - Madurai,இந்தியா
21-ஆக-201219:59:19 IST Report Abuse
Thilakar N இதைபற்றி நம் நண்பர்கள் சொல்லுவதை கேளுங்கள் : கப்பில் : CAG பேப்பர், பேனா வாங்கியதில் பெருமளவு ஊழல் செய்துள்ளனர் அதைப்பற்றி விரைவில் விசாரணை செய்யப்படும் ,, பிடம்பரம் : இது காவி தீவிரவாதிகளின் சதி, இதை அன்னை சோனியா முறியடிப்பர் ,, லல்லு : இவ்வளவு பெரிய தொகையை calculater ல் போட்டு கூட்ட முடியாது அதனால் இது தப்பான கணக்குதான்
Rate this:
Share this comment
Cancel
S T Rajan - Ettayapuram ,இந்தியா
21-ஆக-201219:29:32 IST Report Abuse
S  T Rajan அடுத்த தேர்தலில் உங்களுக்கு சட்டி தாண்டி மவனே.......
Rate this:
Share this comment
Cancel
raman iyer - boston,யூ.எஸ்.ஏ
21-ஆக-201218:45:45 IST Report Abuse
raman iyer எந்த ஊரில்லையா கோ தானம் பண்ணுங்க சுவரான தானம் கொடுங்க உங்கள வந்து நச்சரிக்கிறாங்க ?? கை மொழி கைதான பொது தி மு கவினர் காளஹஸ்திக்கு போயி வழிபட்டார்கள் .சிலநாட்கள் முன்பு பெங்களூரில் மழை வேண்டி அனைத்து தேவாலயங்களிலும் வேள்வி நடத்தினர் , வேள்வியின் பயன் மழை கிடைத்தது ,நமது கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யுக்கு போயி ஆலயரானாக ,அரசனால செய்யமுடியாததை இரவின் தான் வழி வகுத்து கொடுப்பார் , அதுவும் மக்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ,.ஊழலையும் ,அராஜகத்தையும் நாண்கள் பொறுத்துக்கொள்கிறோம் என்று இருந்தால் இருங்க ,எங்களுக்கு கவலையில்லை நாங்க அமேரிக்கவில இருக்கோம் நிம்மதியா ,ம்ஹூம் பல லட்சங்கள் கோடி ஒழலில் போயி பணத்தை தாரவர்பதை விட தேய்வ வழிபாடுகளில் சிறிதேனும் பணம் செலவழித்தால் நீங்க ஒன்றும் அழ்ஞ்சிற மாட்டீங்க ,ஒரு ஓட்டுக்கு மதுரையில ஆயிரம் ரூப தி மு க கொடுத்தது வற்புறுத்தி , அதற்கு இவங்களுக்கு கொடுத்தால் இறை வழிபாடாவது ஆகும் மதுரையில் ஒரு நபருக்கு 500 ரூபாய் வீடு வீடாக போயி கொடுத்தாராம் திமுக வினர் ,அதில் ஒருத்தர் எனக்கு பணம் வேண்டாம் நாங்கள் உங்களுக்கே ஒட்டு போடுறோம் என்றாராம் அவ்ளோதான் மேலிடத்திற்கு தகவல் போயி விட்டது ,ஒருத்தர் பணமே வானக மட்டேங்கரானகன்னு பயறு என்ன ஆச்சு அவர்களுக்கு தலைக்கு 1000 ரூப்பாயி கொடுத்து ஒட்டு போடுங்கள் என்று சொல்லி விட்டு போனார்கள் ,இவரும் மதுரையில் உயிருக்கு பயந்து பணத்தை வாங்கி விட்டார் ,பொன்கட போங்க ஒங்க தங்கத்திற்கும் கோதானத்திற்கும் நாக தொங்க போட்டுக்கிட்டு ஒத்தனும் வரமாட்டான் ,விளக்கின் அடிப்புறம் எப்பொழுதும் இருட்டுதான் நீங்கல்லாம் திருந்தவே மாட்டேங்க ,இப்படிக்கு அமெரிக்கா வாழ்
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
21-ஆக-201217:58:25 IST Report Abuse
Ramasami Venkatesan தலைவர் மௌனம் காப்பது ஏன்? அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்ற அச்சம். அப்படி நடந்தால் பி ஜே பி யுடன் கை கோர்க்கலாம் என்ற நப்பாசை. காங்கிரேசில் சேரும்போது பி ஜே பி யை வேவு பார்த்தேன் என்று சொன்னாரல்லவா. இப்போது பி ஜே பியிடம் அய்ய காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி அதான் அவர்களை விட்டு உங்களிடம் வந்துவிட்டேன் என்பார். தலைவர் சாதாரணபட்டவரா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.