E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2012,23:33 IST
கருத்துகள் (55)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

"நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் நேற்று ரகளையில் இறங்கின. இலங்கை ராணுவத்தினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழக கட்சிகளான தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் கோஷங்கள் எழுப்பின. இதனால், பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று கூடிய பார்லிமென்ட், எதிர்பார்த்ததைப் போலவே பெரும் அமளியை சந்தித்தது. நிலக்கரி வெட்டி எடுக்க, சுரங்க உரிமை வழங்கிய விவகாரத்தில், 1.86 லட்சம் கோடி ரூபாய், நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) அறிக்கை அளித்துள்ளதை அடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. லோக்சபா, ராஜ்யசபா என, இரண்டுமே நேற்று கடுமையான அமளியை சந்தித்தன. இரண்டு சபைகளிலும் கேள்வி நேரம் நடக்கவில்லை. பூஜ்ஜிய நேரமும் நடக்கவில்லை. எந்த அலுவல்களும் நடக்காமல் முடங்கின. இரண்டு சபைகளிலும், பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் வேகத்துடன், சபையின் மையப்பகுதிக்கு சென்று, சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இவர்களோடு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, அகாலிதளம் ஆகிய கட்சிகளும், பிஜு ஜனதாதளமும் சேர்ந்து கொண்டன.
கூச்சல், குழப்பம்
: இந்த கட்சிகளின் எம்.பி.,க்கள், கடுமையாக குரல் எழுப்பினர். "பிரதமர் பதவியை மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்' என, எழுப்பிய கோஷத்தால், கூச்சல், குழப்பம் நீடித்தது.

அரசுக்கு ஆதரவு தரும் திரிணமுல், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் அமைதியாக இருந்தனர். இடதுசாரி கட்சிகளின் எம்.பி.,க்கள், சபையின் மையப் பகுதிக்கு வரவில்லை. அவரவர் இருக்கைகளில் இருந்தபடியே குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
தமிழக எம்.பி.,க்கள்
: தமிழக கட்சிகளான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்களும், எழுந்து நின்று கோஷங்கள் இட்டபடி இருந்தனர். ஆனால், அவர்கள், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதை தடுத்து நிறுத்தக்கோரி, கோஷங்கள் இட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கையே பதவி விலகச் சொல்லி, பா.ஜ., களம் இறங்கி விட்டதால், இனி, இந்த மழைக்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடக்குமா என்பது சந்தேகமே.

Advertisement

இருப்பினும், "எந்தவொரு பிரச்னை குறித்தும், சபையில் விவாதம் நடத்த தயார்' என, அரசு தரப்பு அறிவித்துள்ளதால், நிலைமைகள் மாறுமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியும்.
- நமது டில்லி நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (55)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JenishKumar - Nagercoil,இந்தியா
28-ஆக-201214:59:43 IST Report Abuse
JenishKumar என்ன நடந்தாலும் மதவாத காங்கிரஸ் தலைவி இத்தாலி சோனியாவுக்கு சமாளிக்கும் திறமை உள்ளது. இனி இதை திசை திருப்ப இப்படியும் நடக்கலாம் 1 . பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ருபாய் அதிகரிப்பு. 2 . ப.ஜ.க வை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உசுப்பேற்றுவது 3 . தெலுங்கானா பிரச்னையை மீண்டும் கிளப்புவது 4 . அசாம் கலவரத்தை மீண்டும் பெரிதாக்குவது 5 . அல்லது சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கேடு எப்படியும் இப்படி ஏதாவது ஒரு வழியில் மதவாத காங்கரஸ் தலைவி இத்தாலி சோனியா இதை திசை திருப்பி விடுவார். 2g ஆகாய மார்க்கம், நிலக்கரி பூமி மார்க்கம், எப்படியும் பஞ்ச பூதங்களிலும் மதவாத காங்கரஸ் தலைவி இத்தாலி சோனியா வின் ஊழல் no . 1 ஆக உலகம் உள்ளவரை அழியாமல் இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
arul hi - madurai,இந்தியா
27-ஆக-201212:20:34 IST Report Abuse
arul hi திருடனும் கொள்ளைகாரனும் நாட்டை ஆளறாங்க
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Senthilkumar Avaneeswaran - coimatore,இந்தியா
27-ஆக-201211:35:15 IST Report Abuse
Senthilkumar Avaneeswaran மத்தியில் ஆளும காங்கிரஸ் கட்சியையே பதவி விலக சொல்லி ஒன்றும் பாஜக கேட்கவில்லை .அதாவது அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய நிலக்கரி ஒதுக்கீடு நடந்த 2004 - 2009 அந்த துறைக்கு பொறுப்பு வகித்த மன்மோஹன்சிங் பதவி விலக வேண்டும் என்று தான் கோருகிறார்கள் .கடந்த காலத்தில் நடந்த ரயில் விபத்துக்கு எல்லாம் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகிய வரலாறெல்லாம் உண்டு .ஆகவே மன்மோஹன்சிங் இந்த 186000 கோடி ரூபாய் இழப்பு அரசுக்கு ஏற்படுத்திய காரணத்தால் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகி வழக்கை சந்தித்து தான் குற்றமற்றவர் என்பதை நிருபிக்கவேண்டும். மன்மோஹன்சிங் இந்த நிலக்கரி ஒதுக்கீடு முறையால் ஊழல்(சுயலாபம் ) செய்யவில்லை என்றால் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிய படுத்தவேண்டும் .அதற்க்கு துணைபோன மன்மோஹன்சிங் அவர்களும் குற்றவாளியே . சும்மாவேனும் தான் அப்பழுக்கு அற்றவர், கறைபடியாதவர் என்றெல்லாம் உதார் விட்டுக் கொண்டு இருப்பதை நம்பி நாட்டுமக்கள் ஏமாந்த காலம் மலையேறிவிட்டது .உண்மையிலேயே நெஞ்சில் துணிவு இருந்தால் மன்மோஹன்சிங் பதவி விலகி விட்டு அக்னி பரீட்சைக்கு தயாராகட்டும்.அதை விட்டு விட்டு இந்த காங்கரஸ் காரர்கள் எதிர் கட்சிகளுக்கு சவால் விடுவதை நிறுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மாநில கட்சிகளின் தலைவர்களை ஏதோ ஒரு விதத்தில் மிரட்டியோ அல்லது ஆசை காண்பித்தோ ஜெயித்து விட்டால் இவர்கள் பண்ணிய பல்லாயிரம் கோடி ஊழல்கள் எல்லாம் மறைந்து விடும் என்று நினைக்கிறார்கள் .ஆனால் மக்கள் 2014 தேர்தலில் தக்க பாடம் இந்த காங்கரஸ் காரர்கலுக்கு புகட்டுவார்கள் ஜெய் ஹிந்த்
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-ஆக-201209:33:56 IST Report Abuse
Pugazh V பிரதமர் ராஜினாமா செய்தால் எல்லாம் சரியாகிவ்டுமா? அங்கங்கே லோகல் அதிகாரிகளும், கலக்டர், ஆர் டி ஒ என்று சின்ன சின்ன அதிகாரிகளும் சேர்ந்து க்வாரிகளைத் திறந்துவிட்டு, மானாவாரியாக காசு பார்த்து விட்டாயிற்று. இப்போ வந்து பிரதமர் ராஜினாமா என்று ரகளை செய்வதா? அவர் பாவம் என்ன நடக்கிறது என்று தெரியாமலே ஆபீசுக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார். - இப்படிக்கு உழைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் புகழ் ( கவுன்சிலராகி முன்னேற எல்லாம் ஆசையில்லை).
Rate this:
0 members
0 members
0 members
Cancel
suyambu rajan - kanyakumari,இந்தியா
26-ஆக-201222:39:49 IST Report Abuse
suyambu rajan எல்லாமே ரொம்ப சரி
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-201213:05:33 IST Report Abuse
Aboobacker Siddeeq குண்டர்களையும் கொள்ளையர்களையும் ரவுடிகளையும் படிப்பரிவில்லதவர்களையும் M P ஆக வைத்ததினால் வந்த விளைவுகள் இவை. இவர்கள் மேல் தப்பில்லை. பாவம் அப்பாவி ஜனங்கள். ஒட்டு போட காசுவாங்கிக்கொண்டு இப்போது நாட்டை ஓட்டையாண்டி ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். வேதைனப்பட்டு என்ன பிரயோஜனம். பொறுத்திருங்கள் அடுத்தமுறையாவது நல்லவர்களை வல்லவர்களை தேர்தெடுங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஆக-201216:36:49 IST Report Abuse
Pugazh V ஏன் அமளி? இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று, ஆதாரங்கள், புள்ளி விவரங்களுடன் பி ஜே பி அவையில் பேச வேண்டும். அதை விட்டு விட்டு, "நாங்க எதுவும் பேச மாட்டோம்- விவாதிக்க மாட்டோம் பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும்" என்று மட்டும் பிடிவாதம் செய்தால் எப்படி? எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு : ""காளை பெற்றது என்றதும் கயிறு தேடினானாம், அவசரக் குடுக்கை" - அது போல, யோசிக்காமல், புள்ளி விவரங்கள் சேகரிக்காமல், பேச்சுக்களை திட்ட மிடாமல், சும்மா ரகளை செய்வதா? பி ஜே பி என்ன, சர்வாதிகாரியா- "பிரதமரை ராஜினாமா செய்" என்று ஆணையிடுவதற்கு? இவர்கள் சொன்னதும் அதை அப்படியே கேட்க, மற்றவர்கள் இவர்கள் வீட்டு வேலைக்காரர்களா? இன்னும் 20 மாதங்களில் இந்த அமைச்சரவையின் ஆட்சிக் காலம் முடியப் போகிறது. அடுத்த தேர்தலுக்கான தயாறேடுப்புகளை பற்றி யோசிக்காமல், சும்மா ரகளை செய்வதை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. என்ன விஷயம் என்று பேசி, அதை டி வி யில் காட்டினால் மக்களுக்குப் புரியும் இப்போ, டி வியில், இவர்களின் கலாட்டா கூச்சலும், அவைத் தலைவரின் பரிதாபக் கெஞ்சலும் தான் காட்டுகிறார்கள். எலிமெண்டரி ஸ்கூலில், பசங்க கும்மாளம் போடுவதும், "சைலன்ஸ் அமைதியா உட்காருங்க" என்று டீச்சர் கத்துவதும் போல இருக்கிறது. ஸ்கூல் பசங்க kooda ரெண்டு கத்தலில் ஒழுங்கா ஆயிடுவாங்க
Rate this:
0 members
0 members
0 members
Ragu - NJ,யூ.எஸ்.ஏ
25-ஆக-201202:39:22 IST Report Abuse
Raguஎப்பா புகழ் உங்கள் விசுவாசம் புல்லரிக்க வைக்கிறது காசுக்கு மேல் கூவும் உங்களுக்கு கவுன்சிலர் சீட்டாவது கிடைத்து முன்னேற ஆசீர்வாதங்கள்...
Rate this:
0 members
0 members
0 members
Kingscorpio - Bangalore,இந்தியா
27-ஆக-201216:39:28 IST Report Abuse
Kingscorpio100% I appreciate Pugal comments. BJP behaviour is stupid and coward....
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
24-ஆக-201204:03:45 IST Report Abuse
Ramasami Venkatesan மக்கள் புரட்சியாவது - அது நடக்காது - நடந்தாலும் நம் அரசியல்வாதிகளின் பணம் வெளி நாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சொத்து பத்துகளை முடக்கினாலும் - வெளி நாட்டில் குடும்பத்துடன் குடியேறும் அளவுக்கு டெபாசிட் உள்ளது. நம் நாட்டில் பிறந்தவர்களே வெளிநாட்டில் பணம் வைத்திருக்கும்போது வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் குடியுரிமை பெற்றவருக்கு எவ்வளவு வெளியில் இருக்கும். சிந்திக்க முடிகிறதா.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Usha Kumari - Hyderabad,இந்தியா
24-ஆக-201203:05:35 IST Report Abuse
Usha Kumari ஏன் நம் மக்கள் AIDMK செய்த உழலை மட்டும் மறந்து போனார்கள் என்று எனக்கு தெரியவே இல்லை...ஆளும் கட்சி என்று பயமா இல்லை AIDMK உழலே செய்யவில்லை போலும்................
Rate this:
0 members
0 members
0 members
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
23-ஆக-201215:24:08 IST Report Abuse
MOHAMED GANI 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் என்றார்கள். இதுவரை ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவில்லை. நடைபெற்றால்தான் எந்த அளவிற்கு ஏலம் போகிறது என்பது தெரியும். அதுபோல நிலக்கரி சுரங்க ஊழலும் பேசப்படுகிறது. இதில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் பெரும்பாலும் இந்த சுரங்கங்கள் அமைந்துள்ளன. அந்த மாநில அரசுகள்தான் ஏல நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் முறையாக விசாரணை மற்றும் பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதத்தை நடத்திட வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.