Karunanidhi publishes his comment only in Twitter | "பேஸ்புக்'கை சமாளிக்க முடியாமல் "டிவிட்ட'ரில் தஞ்சம் புகுந்த கருணாநிதி| Dinamalar

"பேஸ்புக்'கை சமாளிக்க முடியாமல் "டிவிட்ட'ரில் தஞ்சம் புகுந்த கருணாநிதி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: கடும் கண்காணிப்பிற்கு இடையே மீண்டும் திறக்கப்பட்ட, "பேஸ்புக்' கணக்கில் பதிவிடுவதை கருணாநிதி நிறுத்தியுள்ளார். தற்போது அவரது அறிக்கைகள், "டிவிட்ட'ரில் மட்டுமே பதியப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் துவங்கப்பட்ட கருணாநிதியின், "பேஸ்புக்' கடும் எதிர்ப்பு காரணமாக ஒரே நாளில் மூடப்பட்டது. பின்னர், கடும் கண்காணிப்பிற்கு இடையே மறுநாள் (18ம் தேதி) மீண்டும் திறக்கப்பட்டது. கருணாநிதியை கேள்வி கேட்டு பதிவிட்ட அனைவருமே கருத்துகள் பதிவதில் இருந்து தடை செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த நான்கு தினங்களாக கருணாநிதி, "டிவிட்ட'ரில் மட்டுமே பதிந்து வருகிறார். அன்று முதல் இன்று வரை, "பேஸ்புக்'கில் கருணாநிதி எந்த பதிவையும் இடுவதில்லை. மேலும், டிவிட்டரில் பதியப்படும் கருத்துகள் பேஸ்புக்கிலும் வெளியாகும் வாய்ப்பையும் முடக்கி வைத்துள்ளார். டிவிட்டரில் தஞ்சம் புகுந்த கருணாநிதி அங்கேயும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். டிவிட்டரில் தன்னைத் தானே, "தலைவர் கலைஞர்' என்று கூறி கருணாநிதி, அறிக்கைகள் பதிந்து வருகிறார். கருணாநிதியின் டிவிட்டர் கணக்கில், கடந்த வாரம், "மாண்புமிகு மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்' என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு முன், 13ம் தேதி, "டெசோ மாநாடு வெற்றி; தலைவர் கலைஞர் அறிக்கை' என தன் சொந்த டிவிட்டர் பக்கத்தில், தன்னைத் தானே தலைவர் கலைஞர் என சொல்லிக் கொண்டு உள்ளார் கருணாநிதி.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (151)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Nagercoil,இந்தியா
28-ஆக-201213:08:02 IST Report Abuse
Siva வாழ்வியல் தளங்கள் மாறுபடும்போது தத்தம் வயதுக்கு ஏற்ப சிந்தனையின் போக்கு ஒத்துழைப்பதில்லை..அதற்காக ஒரு வயதான மனிதரின் அனுபவங்களை நிராகரிப்பது சரியல்ல...அவர் உண்மையாய் பகிரும் பட்சத்தில்..உண்மையாய் இருப்பது எப்படி என்பதை தானே தகவல் தொழில்நுட்பங்கள் மனிதத்தை பழக்குகின்றன.. "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்"
Rate this:
Share this comment
Cancel
stazy - cologne,ஜெர்மனி
27-ஆக-201223:05:22 IST Report Abuse
stazy ஏம்பா .. இந்த கலைஞர் ஏன்பா இப்படி கமெடி பீஸ் ஆயிட்டாரு . எல்லாம் பதவி பரிபோனதினால் வந்த பித்தம் எல்லாம் காலத்தின் கோலம் தலை விதி
Rate this:
Share this comment
Cancel
Badrinath K S - Hyderabad,இந்தியா
27-ஆக-201217:08:59 IST Report Abuse
Badrinath K S paithiyam pidiththa kurangukku thelum kottinaar pol....enna arumaiyaana merkol..Tamil vaallga
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஆக-201222:34:41 IST Report Abuse
g.s,rajan வாசகர்களின் இந்த கருத்துக் கொலை வெறித்தாக்குதலை அவர் கட்டாயம் எதிர்பார்க்கலே என்ன செய்வது பாவம், புறமுதுகிட்டு ஓடிவிட்டார் டுவிட்டரை நோக்கி ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
nallan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஆக-201213:58:31 IST Report Abuse
nallan ட்விட்டரை அவர் எழுதினால் தானே ? அவருடைய செகரட்டரி தானே எழுதுகிறார் அதனால் தான் கலைஞர் என்று எழுதுகிறார்
Rate this:
Share this comment
Cancel
senthil - chennai,இந்தியா
26-ஆக-201212:46:26 IST Report Abuse
senthil நண்பர்களே ஒன்னை நல்லா புரிஞ்சுகோங்க தன்னுடைய கட்சி கம்பெனியல் வெளியாள் யாரும் தலிவராக வந்துவிடக்கூடாது என்று தன்னுடைய வாரிசுகளியே போலியாக யார் அடுத்த தலிவர் என்று மோதிக்கொள்ள வைக்கும் திறமை உலகத்தில் யாருக்காவது உள்ளதா
Rate this:
Share this comment
Cancel
karthik - Coimbatore,இந்தியா
26-ஆக-201209:07:22 IST Report Abuse
karthik வாட் எ கொலச்த்ரியால் demage ......
Rate this:
Share this comment
Cancel
Free Report - Chennai,இந்தியா
26-ஆக-201203:21:36 IST Report Abuse
Free Report கருணாநிதிக்கு பிடிச்சது ஒரு வழி தகவல் பரிமாற்றம்தான்(one way communication) அதனால்தான் அவரே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொள்கிறார். facebook எல்லாம் பல வழி தகவல் பரிமாற்றம் (multi way communication). அதனாலதான் அரண்டுபோய் எஸ்கேப் ஆகிட்டார். ஒரே சிரிப்புதான்
Rate this:
Share this comment
blue bird - salam,இந்தியா
26-ஆக-201215:27:08 IST Report Abuse
blue birdஅட்லீஸ்ட் இதையாவது விட்டு வச்சாரே. ஆமாம் தலைவருக்கு பேஸ்புக் ட்வீட்டர் எல்லாம் தெரியுதே கிரேட் தலைவர்....
Rate this:
Share this comment
ravisuryakumar - Doha,கத்தார்
28-ஆக-201202:53:37 IST Report Abuse
ravisuryakumarதலைவர் என்றல் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி மட்டுமே. தமிழர், தமிழில் எழுத , பேச, விவாதிக்க, செந்தமிழை கொண்டாட, தாலாட்ட, அவருள்ளவரை, அவரால் மட்டுமே முடியும். வாழ்க எமது தலைவர், நீடூழி, பல்லாண்டு, பல்லாண்டு என- ரவி Qatar...
Rate this:
Share this comment
Cancel
KAARTHI - Paris,பிரான்ஸ்
26-ஆக-201202:48:02 IST Report Abuse
KAARTHI முக வை மொக்கை செய்யும் இந்த செய்தி ஐந்துநாட்களாக நமது கமெண்ட்ஸ் களுக்காக வைக்கப்பட்டுள்ளது . தாத்தாவைப் பற்றி எல்லோரும் விமர்சனம் செய்துவிட்டோம். இன்னும் மூடியபாடில்லை.ஆனால், தமிழகத்தில் 12 மணிநேர மின் தடையைப் பற்றிய செய்தி ஒரேநாளில் எடுக்கப்பட்டுவிட்டது. அம்மாவும் நத்தமும் // கொடுத்து வைத்தவர்கள் // ...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Karuppiah - Madurai,இந்தியா
25-ஆக-201213:18:07 IST Report Abuse
Srinivasan Karuppiah தினமலர் பேப்பருக்கு கலைக்னேர் பார்டி செய்தி போடாவிட்டால் வியாபாரம் படுத்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.