India subjected to nuclear blackmail before 98 Pokhran tests | "இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்டுவது தடுக்கப்பட்டது'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்டுவது தடுக்கப்பட்டது'

Updated : ஆக 23, 2012 | Added : ஆக 21, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: ""இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால், மற்ற நாடுகளில் இருந்து, நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வருவது, தடுக்கப்பட்டுள்ளது,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறினார்.

டில்லியில் நடந்த தேசிய அணு ஆயுத குறைப்பு தொடர்பான மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசியதாவது: முன்பெல்லாம், உலகில் வல்லரசாக உள்ள சில நாடுகள், நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், அச்சுறுத்தல்களை விடுத்தன. நம்மை மிரட்ட முயற்சித்தன. தைரியமான தலைவர்கள் இருந்ததால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கடந்த 1998ல், இந்தியா, அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, வல்லரசுகளிடம் இருந்து, நமக்கு மிரட்டல் வருவது நின்று போனது. அணு ஆயுதங்கள், நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன. "அணு ஆயுதங்களை போர்க்களத்தில் பயன்படுத்த மாட்டோம்' என, துவக்கம் முதலே, இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒரு சில நாடுகள், போருக்கு பயன்படுத்துவதற்காக, அணு ஆயுதங்களை தயாரிக்கின்றன. அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்பதே, இந்தியாவின் நிலை. சமீபகாலமாக, பெரும்பாலான நாடுகளும், மக்களும், "அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும்' என்ற வாதத்துக்கு ஆதரவு தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதற்கு முன், இந்த அளவுக்கு ஆதரவு எழுந்தது இல்லை.

உலகில், அணு ஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது. இதற்கு, சர்வதேச அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அதேநேரத்தில், நாட்டு மக்களை, வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து, பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அரசுக்கு உள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தலில் இருந்து, மக்களை பாதுகாப்பதற்காக, அணு ஆயுதத்தை வைத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு சிவசங்கர் மேனன் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Moorgan Ayyanar - Doha,கத்தார்
22-ஆக-201203:34:10 IST Report Abuse
Moorgan Ayyanar வாயா சிவசங்கரா, அட மானமுள்ளவனே, அப்படியானால் இதற்குமுன் நீ பயந்துகொண்டிருந்திருக்கிறாய் - என்றுதானே அர்த்தம். வரலாற்றைப் படித்திருந்தல்தனே உனக்கு மற்றவை தெரியும். மிரட்டலுக்கு அடிபணியாமல் இருந்ததால்தானே சுதந்திரம் கிடைத்தது. மலையாளியாகிய உனக்கு வீரத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும். நீ மற்றும் நம்பியாரின் குறுக்குப் புத்தியால்தானே இன்று சீனக்காரன் இலங்கையில் சுதந்திரமாகச் சுற்றுகிறான். நீ மேலும்மேலும் சின்க்ளத்தனுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். சிங்களத்தான் தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்துவதும், பாகிஸ்தான் காரன் நம்நாட்டில் வந்து வெடிகுண்டு வைப்பதையும், நேபாளம் வழியாக கள்ளப்பணம் கொண்டுவருவதையும், பங்களாதேஷ்காரன் மும்பை மற்றும் கொல்கட்ட வரை பயமில்லாமல் வந்து குடியேருவதையும், அமெரிக்காரனுக்குப் பயந்து கொண்டு அணுமின்நிலையம் வைக்க அனுமதித்துக் கொண்டிருப்பது எதனால்? இதற்கு உனக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற ஒரு பதவி கேரளத்தில் ஒரு அணுமின்நிலையம் திறக்க உன்னால் முடியுமா ??? அணுஆயுதம் தயாரித்து வைத்திருந்தாலும் அதை செயல்படுத்த உனக்கு மனதில் தைரியம் கிடையாது இத்தாளிக்காரியின் முந்தானையில் ஒளிந்துகொண்டு வாயில் வருவதையெல்லாம் வெளியில் பேசாதே
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
22-ஆக-201202:46:49 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை அடுத்த முறை அணு ஆயுதம் சோதன பண்ணும் போது பாகிஸ்தான் மேல போட்டு பாருங்க வெடிக்குதா இல்லையான்னு
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
22-ஆக-201201:34:46 IST Report Abuse
ganapathy அணு ஆயுதம் வைத்துகொண்டு இருப்பதால் நம்ம யாரும் பயமுறுத்த முடியவில்லை. இந்த கருத்து உண்மையாக இருந்தாலும் அதை வெளிப்படையாக கூற வேண்டியது இல்லை. இதை பார்த்து ஈரான், சிரியா, (வேற எதாவது நாடு கூட) அணு ஆயுதம் தயாரிப்பதில் நிறைய முயற்சி எடுக்கலாம். பிறகு எதாவது ஒரு கிறுக்கு நாடு அணு ஆயுத்தத்டை உபயோகிக்கலாம். ஆனால் நம்ம மக்களுக்கு, நல்ல உணவு, சுகாதாரம், படிப்பு, தண்ணீர், நல்ல வேலை வாய்ப்புகளை கொடுக்க நம்ம அறிவியல் சக்தி பயன்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Hareesh Sanjeevi - Coimbatore,இந்தியா
22-ஆக-201200:53:24 IST Report Abuse
Hareesh Sanjeevi சில தினங்களுக்கு முன் கோவை இணைப்பு மலரில் ஒருவர் தீ குளிக்கும் காட்சி போடப்பட்டது. உங்கள் போடோக்ராபர் படம் பிடித்ததாக போடிருந்தீர்கள்.. புகை படம் பிடிக்கும் நேரத்தில் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். மனித உயிரை விட புகை படம் முக்கியமானதை போய்விட்டதா
Rate this:
Share this comment
????? - Chennai,இந்தியா
25-ஆக-201214:57:51 IST Report Abuse
?????இதே கேள்வி பிரபல புகைப்படக்காரர் கெவின் கர்டரிடம் கேட்கப்பட்டதையும், அதனால் அவர் மேற்கொண்ட முடிவையும் எண்ணிப்பார்க்கவும்.......
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
22-ஆக-201200:52:33 IST Report Abuse
Thangairaja அதை விட நாம போடற ஜால்றவால தான் நம்மள யாரும் டச் பண்றதில்லை.......பங்காளிகள் மட்டும் இருப்பை காட்டி கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை