Ready to go with any party: Vijayakanth | எந்த கட்சிக்கு பின்னாலும் செல்லத் தயார்: விஜயகாந்த் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எந்த கட்சிக்கு பின்னாலும் செல்லத் தயார்: விஜயகாந்த் அறிவிப்பு

Updated : ஆக 23, 2012 | Added : ஆக 22, 2012 | கருத்துகள் (83)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்: ""தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுடன் பேச வேண்டும். அதற்கு, தே.மு.தி.க., எந்த கட்சியின் தலைமையின் கீழும் வரத்தயாராக உள்ளது,'' என, திருப்பூரில் நடந்த தே.மு.தி.க., கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, மக்களுக்காக மக்கள் பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருப்பூரில் நேற்று நடந்தது.

பங்கேற்ற, விஜயகாந்த் பேசியதாவது: தமிழக மீனவர்கள், 20 ஆண்டுகளாக பாதித்து வருகின்றனர். அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் கடிதம் எழுதுவதோடு நின்று விடுகின்றன; தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து கட்சிகளும் இணைந்து, மத்திய அரசிடம் பேச, எந்த கட்சி தலைமை ஏற்றாலும், தே.மு.தி.க., பின்னால் வரும். அவிநாசி - அத்திக்கடவு திட்டம், 1990ம் ஆண்டு முதல் வாக்குறுதியாக கொடுக்கப்படுகிறது. இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு அனைத்தும், லஞ்சமாக ஆட்சியாளர்களுக்கு செல்கிறது. இரு கட்சிகளும் பேசி வைத்துக்கொண்டு, மணல் கடத்தல், கிரானைட் கடத்தல் என, நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றன. நான், எனது அரசு என முதல்வர் கூறுகிறார். இந்த ஆணவம் அழிவைத் தரும் என, அவர் தலைவரே பாடியுள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது. "டாஸ்மாக்' மது மூலம் சரக்கு விற்பனை உயர்த்துவதை லட்சியமாக கொண்டு, மக்களை குடிகாரர்களாக மாற்றியுள்ளனர். மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவும், தொழில் செய்யவும் இலவசங்கள் வழங்க வேண்டும். அரசில், அமைச்சர்களும், அதிகாரிகளும் தினமும் மாறி வருகின்றனர். அனைத்திலும் ஊழல் மலிந்து விட்டது. வளர்ச்சி திட்டங்களில் கமிஷன் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. எங்கும், எதிலும் ஊழல் மயமாகியுள்ளது. இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalaiyarasan - chennai,இந்தியா
28-ஆக-201209:49:03 IST Report Abuse
kalaiyarasan ஒவ்வொரு முறையும் புதுசா ஒருகட்சியை தான் தேர்ந்தெடுக்கணும்,அப்போ தான் ஓரளவுக்கு வூழலை தடுக்க முடியும்,இல்லனா எப்பவும் போல நீங்களும் நானும் பேசிகிட்டே தான் இருக்கனும் ..இவங்க இப்படியே தான் இருப்பாங்க .....
Rate this:
Share this comment
Cancel
kap - singapore,சிங்கப்பூர்
28-ஆக-201207:48:59 IST Report Abuse
kap all are looking at the vijaiyakanth's statement that "he is ready to go with any party to get the right things to tamil fishermen" in terms of political point... but I appreciate that he is ready to do anything for the fishermen problem. I knew what is going on in Rameshwaram since i came from there. And I know how much people suffering there to run everyday's life. I think we need to look at the problem and towards it&39s solution that will save lots and lots of lifes. I wish to get a peace back soon in my homeland No tamil people will have this terrible experience as like Rameswaram fishermen, Our fingers used to be crossed anticipating the fishermen's arrival every morning expecting them to return back without any problem caused by srilankan's navy This needs to be changed they need a peaceful business as everyone does in Tamilnadu.
Rate this:
Share this comment
Cancel
gani - tirupur,இந்தியா
27-ஆக-201223:12:56 IST Report Abuse
gani என் மூஞ்சியை கொஞ்ச நேரம் குறுகுறுன்னு நல்லா உத்துப்பாருங்க . ம்....... புருகிறதா ? புரிகிறதா ? புரிகிறதா ?
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
27-ஆக-201214:46:16 IST Report Abuse
Kavee கேப்டன் முன்னாலே வர மாட்டார் போல .... யார் பின்னாலேயாவது வால் பிடித்து அல்லது கூஜா தூக்கித்தான் போவாரு போல ...... முன்னாலே வர ட்ரை பண்ணுங்க முயற்சி திருவினையாக்கும். குடும்பத்தோடு நாட்டுக்கு நல்லது செய்யனுன்னு நினைச்சா குடும்பத்தை யாரு பாப்பாங்க .... அதையும் கொஞ்சம் யோசிச்சுக்குங்க கேப்டன். அப்புறம் நம்பனும், நண்பனையும் நம்மை நம்புரவங்களையும் நாம நம்பனும் .... புரிஞ்சுக்குங்க.
Rate this:
Share this comment
Cancel
tamilan - Mangaf,குவைத்
26-ஆக-201215:55:17 IST Report Abuse
tamilan நீங்க நல்லவரு வல்லவருன்னு பேரு வாங்குவதற்கு சினிமா டயலாக் எல்லாம் எடுத்து விடுறிங்கள அதற்கு kai thattuthan வாங்க முதியும் ஒட்டு எல்லாம் வாங்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
26-ஆக-201213:02:44 IST Report Abuse
INDIAN தமிழக மீனவர்கள் பிரட்சனைக்காக, எந்த கட்சி தலைமை ஏற்றாலும் தேமுதிக பின்னால் வரும், ஆதரவுதரும் என்று, ஆணவமில்லாமல், அகங்காரமில்லாமல் தன் நிலையிலிருந்து இறங்கிவந்து திரு விஜயகாந்த் கூறுகிறார் என்றால் அதை பாராட்டாமல்...., விஜயகாந்தை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இதையும் குறை கூறிக்கொண்டு............ ச்சே நாமெல்லாம் என்ன மனிதர்கள்???
Rate this:
Share this comment
Cancel
nalliah kalaiselvan - riyath,சவுதி அரேபியா
26-ஆக-201211:27:21 IST Report Abuse
nalliah kalaiselvan யார் யார் பின்னால் போனாலும் தத்தளிக்கும் தமிழனுக்கு விடிவு காணத்தானே தயவு செய்து ஒருத்தரை ஒருத்தர் குறை கூறுவதை விட்டு நாம் ஒன்று பட்டாள் விஜயகாந்த் ஜெயா கருணா அனைத்து அரசியல் வாதிகளும் ஒவ்வொரு தமிழன் காலிலும் விழ வைக்கலாம். என் தமிழில் குறை இருந்தால் மன்னிக்கவும்
Rate this:
Share this comment
Cancel
Gop Krishx - tirupati,இந்தியா
26-ஆக-201210:39:08 IST Report Abuse
Gop Krishx கருணாநிதிக்கு தனது கருத்தை சொல்ல( அவரில்) எவருக்கும் அதிகாரம் இல்லை? ஜெயா இடம் உண்மை யை சொல்லும் கட்சி மந்திரிக்கு தனது கனவிலும் தைரியம் இல்லை அனால் கறுத்த niramudan. சிவந்த கண்களுடன் தான் எல்லோர் முன் திரைக்கு வந்தார் அன்றும் rum அவரது வீரியம் அப்படியே காணமுடிகிறது ஒண்டியாக சபை chradhi எல்லோரும் அriந்dhadhe அந்த தமிழனை பார்த்து வீருகொள்ளுங்கள் = வடிவேளிடம் தன்மானம் இருந்தது avarai பேசவைத கட்சியிடம் பாதுகாப்பு taramudiyaveelai ewar meenavarukkaga onduserndhal urchagamutungal
Rate this:
Share this comment
Cancel
Senthilkumar Avaneeswaran - coimatore,இந்தியா
25-ஆக-201211:40:10 IST Report Abuse
Senthilkumar Avaneeswaran ஹலோ மிஸ்டர் தாமோதரன் சின்னசாமி -சென்னை அவர்களே நீங்கள் (நீ ) ஒழுங்காக முழு செய்தியை படித்து, அர்த்தத்தை புரிந்து கொண்டு இங்கு கமெண்ட் எழுதுமாறு கேட்டு கொள்கிறேன் . தமிழக மீனவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக மத்தியில் சென்று போராடாமல் நாம் கட்சி ரீதியாக பிரிந்து கிடப்பதனால் தான் நமது வாழ்வாதார பிரச்சினைகளை கூட மத்திய அரசு கண்டு கொள்வதில்லை .அதற்காகத்தான் விஜயகாந்த் கட்சி பேதம் பார்க்காமல் எந்தக் கட்சி பின்னாலும் அணிவகுத்துப் போராட தயார் என்று கூறியுள்ளார் .வேறு எந்த பெரிய கட்சியும் இதுபோல் ஒற்றுமையாக போராடுவோம் என்றுக் கூறவில்லை. ஆகவே நீ குருட்டுத்தனமாக,பொறிக்கிதனமாக விஜயகாந்தை எதிர்க்க வேண்டும் என்ற போர்வையில் தமிழக மக்களின் ஒட்டு மொத்த நலன் கருதி பேசும்போது கூட உன் கட்சி சார்பு நிலையை காட்டுகிறாயே. இதுதான் நமக்கும் அடுத்த மாநிலத்துக்கார மக்களுக்கும் உள்ள வித்தியாசம்.
Rate this:
Share this comment
Cancel
Sundar Ramachandran - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-201209:25:11 IST Report Abuse
Sundar Ramachandran குடிகாரர்கள் னா அதுல நீயும் ஒருத்தர் தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை