மக்கள் கண்டிப்பாக மாறியே தீரணும் - திரிஷா திரைப்பட நடிகை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையில தான். முன்னாடி தி.நகர்ல இருந்தோம், இப்ப தேனாம்பேட்டை செனடாப் ரோடில் குடியிருக்கோம். அழகி போட்டியில ஜெயித்தது, சினிமா அறிமுகம் கொடுத்தது, பெயர், புகழ் தந்தது சென்னை தான்.

நான் அண்ணாசாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்ல தான் படிச்சேன். அப்புறமா எத்திராஜ்ல கல்லூரி படிப்பை முடிச்சேன். இப்போ இருக்குற மாதிரி அப்போ மால்கள் கிடையாது. படம் பார்க்கணும்னா ஒரே சாய்ஸ் தியேட்டர் தான். அப்போ டிக்கெட் வாங்க அடிச்சுப் புடிச்சு கீயூல நின்ன காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இன்னைக்கு உட்கார்ந்த இடத்துல இருந்தே ஆன்-லைன்ல புக் பண்ண முடியுது. போன் பண்ணினா டிக்கெட் வீடி தேடி வருது.


நெரிசலில் விழி பிதுங்குது:

அப்போல்லாம் "டிராபிக்' பிரச்னை அவ்வளவா இருக்காது. மொட்டை மாடியில நின்னா ஜில்லுன்னு கடல் காற்று வீசும். ஆனா இப்போ, சுத்தமான காற்றை அனுபவிக்க முடியல. போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்குது. ரோடு முழுக்க வாகனங்கள் நிரம்பி வழியுது. அதுல இருந்து வெளியேறும் நச்சுப்புகையை தான் சுவாசிக்கிறோம். வாகங்களையும், அது வெளியிடும் புகையையும் கட்டுப் படுத்தியே தீரணும்.

அப்போ, காஸ்மெடிக் அயிட்டம்ஸ், "மேக் அப்' திங்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ , ரிச் காஸ்ட்யூம்ஸ் வாங்கணும்னா துபாய்க்கோ, அமெரிக்காவுக்கோ தான் போயாகணும். ஆனா இப்போ அதெல்லாம் சென்னையிலேயே கிடைக்குது. கம்ப்யூட்டர் - இன்டெர்நெட்னு சென்னை சிட்டியில எவ்வளவோ "டெக்னாலஜி டெவலப்மென்ட்' வந்திருச்சு. இருந்தாலும் இங்குள்ள மக்களிடம் தான் போதுமான விழிப்புணர்வோ, சமூக அக்கறையோ, சுய கட்டுப்பாடோ வராம இருக்கு. இதை நினைக்குறப்ப வேதனையா இருக்கு.


மக்கள் ரொம்பவும் மாறணும்:

சுத்தம், சுகாதாரம் விஷயத்துல சென்னை மக்கள் ரொம்பவும் மாறணும். மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரிக்க எவ்வளவோ வசதிகளை செய்து கொடுத்திருந்தாலும் ரோட்ல தான் குப்பையை கொட்றாங்க. "பிளாஸ்டிக் கப்'களை அப்படி அப்படியே போட்டுடறாங்க. பஸ்சுக்குள்ள உட்கார்ந்த படியே பார்சலை வீசுறாங்க. இதையெல்லாம் மக்கள் மாத்திக்கணும். நம்ம சென்னை சிங்கார சென்னை ஆகணும்னா மக்கள் மாறியே தீரணும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்