நான் தஞ்சாவூருக்காரன். சினிமாவுக்காக சென்னை வந்தேன். கிராமத்து மக்கள் பட்டணத்துக்கு வந்து எல்.ஐ.சி., பில்டிங், மெரினா பீச், அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதின்னு பாத்துப் போய் ஊர்ல பெருமையா பேசிக்குவாங்க. இந்த போக்கு இப்போ மாறிட்டு வர்றதா நான் கருதறேன். ஏன்னா, சென்னை நகரம் பரபரப்பானதா மாறிடுச்சு.
மக்கள் தொகை அதிகமாயிடுச்சு. அதனால போக்குவரத்து நெரிசல் ஏற்படுது. பயணம்கறது சுகமான அனுபவமா இருக்கணும். ஆனா இங்கு, பயணம் செய்யும் போது அனல் காற்றுதான் அடிக்குது. வாகன புகையால் சுற்றுச் சுழல் மாசுபடுது. குடிநீர், கழிப்பறை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே மக்கள் பெரும் அவஸ்தை படுறாங்க. மரங்களை பாதுகாக்க நாம தவறிட்டோம்.
போக்கு வரத்து நெரிசலில் சாலைகள் நிரம்பி வழிவதால் அவசரத்துக்கு ஆம்பலன்ஸ் கூட சரியான நேரத்துக்கு போக முடியறதில்ல. வெளிநாடுகள்ல ஆம்புலன்ஸ், பயர் சர்வீஸ்க்கு தனி "டிராக்' கே உள்ளது. அது போல இங்கேயும் வரணும்.
இது மாதிரி இருந்தால்:
மழைக்காலத்துல தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உருவாகி நோயை பரப்புது. மழைநீர் கால்வாய் திட்டம் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். எல்லாருமே வாகனத்தை பயன்படுத்த நினைக்கறாங்க. குறிப்பிட்ட சில வேலைகளுக்கு சைக்கிளை பயன்படுத்தினா உடலும் ஆரோக்கியமா இருக்கும். பெட்ரோலையும் சேமிக்க முடியும்.
இதெல்லாம் என்னோட தனிப்பட்ட விருப்பம் தான். சென்னை நகரம் இது மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற அக்கறை தான். என்னதான் குறைகள் சில இருந்தாலும், வட இந்தியாவோடு ஒப்பிட்டு பார்க்குறப்போ, சென்னை நகரம் சொர்க்க பூமியாகத்தான் எனக்கு தெரியுது. "அமைதிப் பூங்காவாக' இருக்கும் சென்னை நகரத்தின் குறைகளை பார்க்காம இங்கே கிடைக்கும் கால போக்குல நம்மளோட மனசு, சென்னை நகரத்தின் சிறப்புகளை மட்டுமே சீர்தூக்கிப் பார்க்க பழகிக் கொள்ளும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.