We do not give up Madurai Agri college: Students | மதுரை விவசாய கல்லூரியை விட்டு கொடுக்க மாட்டோம்: மாணவர்கள், பணியாளர்கள் போர்க்கொடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை விவசாய கல்லூரியை விட்டு கொடுக்க மாட்டோம்: மாணவர்கள், பணியாளர்கள் போர்க்கொடி

Updated : ஆக 22, 2012 | Added : ஆக 22, 2012 | கருத்துகள் (6)
Advertisement

மதுரை: "காய்கறி வணிக வளாகம் அமைக்க, மதுரை விவசாயக் கல்லூரியை விட்டுக் கொடுக்க மாட்டோம்' என, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் அனுப்பினர். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், 2010-11ன் கீழ், 85 கோடி ரூபாயில், மாநில வேளாண் விற்பனை வாரியமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து, மதுரையில், மத்திய காய்கறி வணிக வளாகம் அமைக்க திட்டமிட்டன. நுகர்வோர், வியாபாரிகள் பயன்பெற, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில், 26.74 ஏக்கரில், வணிக வளாகம் அமைக்க, மாநகராட்சி சம்மதித்து, வருவாய் பங்கீடு குறித்தும், தீர்மானம் நிறைவேற்றியது. முதற்கட்டமாக, 30 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திடீரென, அவனியாபுரத்தில் வளாகம் அமைக்க, 11.40 ஏக்கர் ஒதுக்கீடு செய்து, மாநகராட்சியில், திருந்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் வளாகம் அமைக்க இயலாது என, வாரியம் தெரிவித்ததால், மாட்டுத் தாவணியில் இடம் வழங்கி, மாநகராட்சி, மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், மாநகராட்சியிலிருந்து "முன் நுழைவு அனுமதி' உடனடியாக கிடைக்காததால், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 30 கோடி ரூபாய், அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. தற்போது வரையில், மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. எனவே அவசர கதியாக, மதுரை விவசாயக் கல்லூரி இடத்தை தேர்வு செய்து, அதில், 26.74 ஏக்கர் இடத்தை ஒதுக்க, வேளாண் உற்பத்தி கமிஷனர் சந்தீப் சக்சேனா, வேளாண் பல்கலைக்கு உத்தரவிட்டார். இம்முயற்சிக்கு, கல்லூரியைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கல்லூரி முதல்வர் வைரவன் கூறியதாவது: கோவை வேளாண் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) சுப்பையா மூலமாக, எனக்கு, இ-மெயிலில் தகவல் வந்தது. 28 ஏக்கர் நிலம் கொடுக்க வாய்ப்பில்லை. கல்லூரியின் பிரதான வாசலில் உள்ள, ஏழு ஏக்கர் நிலத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்தேன். ஆனால், கல்வி நிலையத்தில் விற்பனை மையம் அமைப்பது பொருந்தாது. இரண்டும் ஒரே இடத்தில் அமைவதும் கூடாது. மாணவர்கள் பெரும்பாலான நேரம் வயல்வெளிப் பள்ளியில் தான் இருக்கின்றனர். அமைதியான சூழ்நிலை தான் அவர்களுக்குத் தேவை. வணிக வளாகம் வந்தால் படிப்பிற்கு இடையூறு ஏற்படும். புதிய ஆராய்ச்சி எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலை பதிவாளர் சுப்பையா கூறுகையில், ""அரசு, ஒரு கோரிக்கை வைத்துள்ளது. இன்னும் எதையும் நாங்கள் முடிவு செய்ய வில்லை. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய பல்கலை மேலாண்மை குழு கூடி தான் முடிவு செய்யும்,'' என்றார். ""ஏற்கனவே இருக்கும் மாநகராட்சி இடத்தை கையகப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு, கல்லூரியை வணிக வளாகமாக்குவது விவசாயிகளை ஏமாற்றுவதாகும். தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்,'' என, மாணவர்கள் கூறுகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kperiyasamy Kalimuthu - Sivagangai(karaikudi),இந்தியா
25-ஆக-201207:27:32 IST Report Abuse
Kperiyasamy Kalimuthu உலகத்தில் ஏமாந்தவன் தமிழக விவசாய்தான் விழிப்புணர்வு இல்லாத மனிதர்கள் ஆச்சியாலர்களுக்கு உழவன்மீது அக்கரைசெளுத்த ஏது நேரம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
23-ஆக-201215:55:42 IST Report Abuse
K.Sugavanam தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்வது இந்த அரசுக்கு வாடிக்கையாக போய்விட்டது.
Rate this:
Share this comment
Cancel
sethu - jddah,சவுதி அரேபியா
23-ஆக-201215:11:02 IST Report Abuse
sethu கொத்தவால் சாவடியாக மாற வேண்டுமா விவசாயக்கல்லூரி உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மறேல்லோரும் தொழுதுண்டு பின்செல்வர் ,இதை மறந்த மேதாவிகள் இன்று பணத்தைமட்டுமே நம்புகின்றனர் ,பின் ஒருகாலத்தில் பணம் மட்டுமே திங்க முடியுமா,ரஷ்யாவின் கதை எப்படி ஆனது ஒரு ரொட்டித்துண்டுக்கு மக்கள் வரிசையில் பணத்தை ககட்டு கட்டாக வைத்திருந்தனர் ஆனால் உணவு கிடைக்கலை நமது பூமொக்கும் நமக்கும் அந்த நிலை வரணுமா,
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
23-ஆக-201213:22:33 IST Report Abuse
maran மாணவ பிள்ளைகளை சீண்டி பார்ப்பதே அரசுக்கு வேலையா போச்சு .......விவசாயமுன்னா என்ன என்று நம் சந்ததியினருக்கு சொல்ல இப்படி ஒரு கல்லூரி இருப்பது ..இனி நூலகத்தில் போய் தான் பிள்ளைகள் படிக்கணும் போல ........
Rate this:
Share this comment
Cancel
Ganesh - changi,சிங்கப்பூர்
23-ஆக-201209:41:22 IST Report Abuse
Ganesh ஐயோ...... அரசுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா, அந்த இடம் எவ்வளவு அமைதியான சூழல் உள்ள இடம் அங்கு வணிக வளாகம் கட்டினால் முற்றிலும் மாறுபட்டுவிடும் தயவுசெய்து அரசு அத்திட்டத்தை கைவிடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
R.MUTHUKUMARAN - Devakottai ,இந்தியா
23-ஆக-201207:11:50 IST Report Abuse
R.MUTHUKUMARAN மாணவர் மத்தியில் எதிர்ப்பு தீ பரவினால் எந்த அரசாங்கமும் பொசுங்கிவிடும் என்பதை விவசாய கல்லூரி மாணவர்கள் நடத்திக் காட்டுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை