இதுகுறித்து, யஷ்வந்த் சின்கா கூறியதாவது
:நாங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், தகாத வார்த்தைகளால், எங்களை அவமதிக்கும் வகையில் பேசினர். அதிலும், காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர், மிக மோசமாக நடந்து கொண்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக் குழு கூட்டத்திலிருந்து, வெளிநடப்பு செய்வதை தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு யஷ்வந்த் சின்காநெருக்கடி:
இதற்கிடையே, தங்கள் கோரிக்கைப்படி, பிரதமரும், மத்திய அமைச்சர் சிதம்பரமும் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்காவிட்டால், கூட்டுக் குழு கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "2ஜி' ஊழல் விவகாரத்தை மீண்டும் கிளறி, பிரதமருக்கும், நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கும், பா.ஜ., கட்சியினர் மீண்டும் நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளதால், தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ், பாஜக, கம்யுனிஸ்ட், சமாஜ்வாடி , பகுஜன் சமாஜ், காஷ்மீர் கட்சிகள், நவீன்பட்நாயக் கட்சி, பல வகையான ஜனதா தளங்கள் , சிவ சேனா, தெலுங்கு தேசம், ஜகன் கட்சி, அதிமுக, திமுக, பாமக, - உட்பட எந்த கட்சி ஆளுங்க ஊழல் செஞ்சிருந்தாலும் , முதலில் அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.... மாறாக விசாரணை , கோர்ட் , தேர்தல்ல பதிலடி என்று ஜவ்வாக இழுத்தால் மாத்தி மாத்தி ஒவ்வொரு கட்சியா வந்து ஊழல் செஞ்சி இந்தியாவ , சோமாலியாவாக மாற்றாமல் விடமாட்டார்கள்... கட்சிகளில் எவ்வளவு பெரிய தலைகள் ஊழல் செஞ்சிருந்தாலும் , அவர்கள் சொத்துக்கள் முதலில் பறிமுதல் செய்ய படவேண்டும்.... அப்புறம் 3 விஷயங்களை ஒரு மிக சிறந்த பின்னாளில் வரும் மத்திய சர்க்கார் கடை பிடிக்க வேண்டும்.... 1 . நில உச்ச வரம்பு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்.... தேவைக்கு அதிகமாக நிலங்களை அரசுடமையாக்க வேண்டும்,.. கல்வி / தொழில் - என்ற பெயரில் நிலங்களை வளைத்து போடும் வில்லன்களை வில்லாய் வளைத்து வேரறுக்க வேண்டும்.... 2 . நில பத்திர பதிவில் மார்கெட் விலைக்கே நிலம் பதிவு செய்யப்பட வேண்டும்...கருப்பு பணம் உலாவும் இடமே ரியல் எஸ்டேட் என்னும் கேடுகெட்ட தொழிலில் தான்.... மார்கெட் விலைக்கே நிலம் பத்திர பதிவு , பினாமி பெயரில் பத்திரபதிவு தடுப்பு, அதாவது பவர் ஏஜென்ட் என்னும் கான்செப்ட் ஒழிப்பு, என்ற மூன்று கட்டளைகளையும் ஒரு அரசு முறையாக கண்காணித்து செயல் படுமேயானால் , அன்றே கருப்பு பணம் வியத்தகு வகையில் ஒழிந்து விடும்.... 3 . பில் இல்லாமல் குண்டூசி கூட விற்க தடை போடவேண்டும்.... அனைத்து பொருள்களும் முறையாக வரி செலுத்தப்பட்டு , தரமான முறையில் பில் களோடு தான் விற்கப்பட வேண்டும்..... இந்த 3 கொள்கைகளையும் எந்த அரசு கடை பிடிக்க முன் வரும்...? இதற்க்கு மாறாக நடக்கும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் எல்லாம் சும்மா கண்கட்டி வித்தைகள்.... இந்திய மக்களுக்கு " மண் ஆசை " ஒழியாத வரை கருப்பு பணமும் ஒழியாது.... அதற்க்கு பலமான , வலுவான சட்டம் தேவை.... அதற்கு முதல் படி பழம் தின்னு இதுவரை கொட்டை போட்ட அனைத்து கட்சி ஊழல் அரசியல்வாதிகளின் , பணமுதலை முதலாளிகள் , ஊழல் அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் - ஆகியோரின் சொத்துக்களை முடக்க ஒரு நல்ல உள்ள படைத்த சர்வாதிக பிரதமர் தான் தற்போது இந்தியாக்கு உடனடி தேவை....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.