ஆர்ப்பாட்டம் ரத்து: கூட்டணி தர்மத்தை கட்டிக்காத்த தி.மு.க.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:இலங்கை தமிழர் பிரச்னைக்காக, பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்து இருந்த தி.மு.க., வினர், அந்த ஆர்ப்பாட்டத்தை சொல்லாமல் கொள்ளாமல் ரத்து செய்து விட்டனர்.

இலங்கை தமிழர் பிரச்னைக்காக சென்னையில், "டெசோ' மாநாடு நடத்தி முடித்துவிட்ட கையோடு, டில்லியிலும் அதன் தொடர்ச்சியை காட்டுவதற்காக நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க.,- எம்.பி.,க்கள் குழு சந்தித்தது. அந்த சந்திப்பின்போது, இலங்கை பிரச்னை குறித்தும், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும் எடுத்துரைத்தனர். பின்னர் இதே பிரச்னைகளை முன் வைத்து, அடுத்த நாள் (நேற்று) காலையில் பார்லிமென்ட்டில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணா போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. இலங்கை பிரச்னைக்காக, பார்லிமென்ட்டில் தர்ணா நடத்தப் போகும் தி.மு.க.,வின் துணிச்சலான முடிவை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். நேற்று காலை அறிவித்தபடி, 10 மணிக்கு, காந்தி சிலை பக்கம் போனால், தி.மு.க., -எம்.பி.,க்கள் ஒருவரையும் காண முடியவில்லை.

ஆர்ப்பாட்டம் என்னவாயிற்று என்பது பற்றிய விவரமும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. பின்னர், இதுகுறித்து தி.மு.க.,-எம்.பி.,யை தொடர்பு கொண்டு, "இப்படி சொல்லாமல் கொள்ளாமல் தர்ணா போராட்டத்தை ரத்து செய்து விட்டது ஏன்' என கேட்டதற்கு, "தர்ணாவை செய்துவிட்டு அதன் பிறகு போய் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்திருக்க வேண்டும். ஆனால், நேற்றே இதே பிரச்னைக்காக பிரதமரை சந்தித்து மனு கொடுத்து விட்டோம். பிரதமரை சந்தித்த பிறகு போய் தர்ணா செய்வது சரியாக இருக்காது. அது கூட்டணி தர்மத்திற்கு எதிராகப் போய்விடும். எனவேதான் தர்ணா நடத்தவில்லை,' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறும்போது,"தர்ணா போராட்டத்தை ரத்து செய்வது என்ற முடிவு, தி.மு.க.,வின் நிறைய எம்.பி.,க்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. எந்த முடிவுகளாக இருந்தாலும், தி.மு.க.,வின் மூத்த மூன்று எம்.பி.,க்கள்தான் ஒன்று கூடி எடுப்பதாகவும், அவர்களாகவே முடிவு செய்து கொண்டு, பிறஎம்.பி.,க்களிடம் ஆலோசனையும் நடத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது. தர்ணா போராட்டம் ரத்து என்ற முடிவை நேற்று முன்தினம் மதியமே மூவர் குழுவால் எடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அதுபற்றிய விவரம் யாருக்கும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. மாறாக நேற்று காலை, 10 மணிவாக்கில்தான் எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் போய் உள்ளது. இதனால், பல எம்.பி.,க்களும் குழம்பிப் போய் விட்டனர். தர்ணாவுக்காக ஒரு எம்.பி., கருப்பு சட்டை எல்லாம் கூட அணிந்து தயாராக பார்லிமென்ட்டிற்கு கிளம்பி வந்தும் கூட, கடைசியில் தர்ணா ரத்து என்றவுடன், திரும்பவும் வீட்டிற்குப் போய் வெள்ளைச் சட்டை அணிந்து வரவும் நேர்ந்தது,' என்று தெரிவித்தன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (39)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagaraj - tirupur,இந்தியா
26-ஆக-201212:32:05 IST Report Abuse
nagaraj அட போங்கையா வேற வேலை இல்லனா... இதெல்லாம் ஒரு கட்சி?
Rate this:
Share this comment
Cancel
26-ஆக-201200:26:27 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க கூட்டணி தர்மம் வழுக்குக. மழுங்குக.,,,,,,,,,,,,, அட போங்கையா நீங்களும் உங்க புடலங்கா கூட்டணி தர்மமும்.......... இங்கே ஏமாத்தினது பத்தாதுன்னுட்டு டெல்லிக்கி போயிட்டீங்களா. உங்களால .....some text missing...ள்ளிக்கி கூட போக மாட்டீங்க............ பரதேசிங்க.
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
23-ஆக-201216:02:04 IST Report Abuse
Aboobacker Siddeeq ஆஹா என்ன கூட்டணி தர்மம்???? இந்த கூட்டணி தர்மத்தினால் தான் கனிமொழியும் ராசாவும் மில்லியன் கணக்கில் சுருட்டிய பின்பும் இன்று ஜாமீன் என்ற பெயரில் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்களோ? இது நமக்கு தெரியாம போச்சே?
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
23-ஆக-201215:55:59 IST Report Abuse
Rangarajan Pg பிசாத்து பாராளுமன்றத்தின் முன்பு எதற்கு தர்ணா? நாம் தான் இன்டர்நேஷனல் லெவெலுக்கு வளர்ந்து விட்டோமே, இனி நாம் ஐ.நா. சபையின் முன்னே தர்ணாவில் ஈடுபடுவது தான் சரியாக இருக்கும் என்று கடைசி நேரத்தில் நினைத்து இருப்பார் நம் கலைஞர். இப்படி எதையாவது சொல்லி போராட்டத்தை CANCEL செய்து அடி உதையிலிருந்து தப்பித்து விடலாம் என்று கூட நினைத்திருப்பார். அதனால் தான் கடைசி நேரத்தில் ""பின்"" வாங்கி விட்டார். இல்லையென்றால் சோனியா அவர்கள் அந்த ""பின்னை"" வைத்தே இவரை குத்தி இருப்பார். இவரை நம்பி ஒரு எம். பி. பாவம் கருப்பு சட்டை எல்லாம் அணிந்து வந்து விட்டார். பிரவு வேறு வழி இல்லாமல் வெள்ளை சட்டைக்கு மாறி விட்டார். எம். பி. அவர்களே, உங்கள் கட்சியை இந்த விஷயத்திற்கு கூட நம்ப முடியாது என்று இப்போதாவது தெரிகிறதா.. திமுக மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இனி அதற்க்கு உயிரூட்டபடுவது என்பது இயலாத விஷயம். அந்த கட்சி ஒரு SATURATION STAGE க்கு வந்தாகி விட்டது. அந்த கட்சி ஒரு காமடி கட்சியாகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Sahay Raj - Tuticorin,இந்தியா
23-ஆக-201214:19:36 IST Report Abuse
Sahay Raj ஆங்கிலத்தில் beam reporting என்று ஒரு சொல்லோடை உண்டு. அதாவது இருந்த இடத்தில் இருந்து கொண்டே report செய்வது இந்த செய்தியும் அப்படித்தான். அதுவும் இதற்கு கருத்து சொல்லும் பலரும் அதை அப்படியே நம்பி கருத்து சொல்கிறார்கள் அது நியாயமான கருத்து பதிவாக இல்லை. வெறும் நக்கலும், கேலியும் கலந்து இருக்கிறதே அன்றி பொருள் இல்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் ஒரு ரிப்போர்ட் அதை சரியா என்று ஆராயாமல் கருத்துகள் இதுதான் இந்த வலைதளத்தின் தரம் நிலை நான் நேற்று முன் தினம் புதிய தலைமுறை தொலை காட்சியில் பார்த்த செய்தியில் தமிழக மீனவர்கள் விடுதலை - திமுக எம்பிக்கள் போராட்டம் வாபஸ் என்று செய்தியும் அது தொடர்பான நியூஸ் கோவையும் வந்தது இதில் என்ன கூட்டணி தர்மம் வந்தது? - எனக்கு என்னவோ இந்த செய்தியை பார்த்த பின்னர் ஆண்டிகள் கூடி கூத்தாடுவது போல்தான் irukkirathu
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Thangamani - Muscat,ஓமன்
23-ஆக-201213:40:47 IST Report Abuse
Palanisamy Thangamani கசப்புடன் கூட்டணியில் இருக்கிறார்கள், பாவம். விட்டு விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
nagainalluran - Salem,இந்தியா
23-ஆக-201213:36:52 IST Report Abuse
nagainalluran தலைவரே பேசாம உங்க ஆளுங்கள கூட்டிகினு போய் சந்திர மண்டலத்துல தர்ணா பண்ணுங்க. எப்படியும் ஒன்னும் நடக்க போறதில்ல. மத்திய அரசை பகைசுக்காம இருந்த மாதிர்யும் இருக்கும். தர்ணா ங்குற பேர்ல தமிழனை திரும்பவும் ஏமாத்தலாம். கூமுட்டை தி மு க காரங்களை ராகேட்டுலே வுட்டு டுபாக்கூர் டாக்டர் பட்டம் வாங்கின மாதிரி டுபாக்கூர் ராகேட் விஞ்ஞானி பட்டமும் வாங்கிக்கலாம். முடிஞ்சா அங்கனையும் நெலத்த ஆட்டைய போடலாம்.
Rate this:
Share this comment
Cancel
வாசுதேவன் - Doha,இந்தியா
23-ஆக-201212:50:30 IST Report Abuse
வாசுதேவன் விடுங்க தல.. கட்டுமரத்த நல்லா பத்திரமா பூட்டி வச்சிக்கங்க.. யோக்கியங்க நடமாட்டம் அதிகமா இருக்கு. நிலக்கரி டிமாண்டுல அடுப்புல வச்சி எரிச்சி கரியாக்கி கடல்ல கரச்சிடுவாணுவ...
Rate this:
Share this comment
Cancel
Pakanati ramesh - chennai,இந்தியா
23-ஆக-201212:15:32 IST Report Abuse
Pakanati ramesh இதெல்லாம் அரசியல்லே சகஜமப்பா கலைஞர் நடத்தும் டிவி சீரியல் ஷோ. அதையெல்லாம் பெரிசா எடுதுக்ககூடதுப்பா நாடாளுமன்றம் சமீபத்துலே போயி யாரவது தாரன பண்ணுவாளா? இத்தாலியாம்மா கேள்விபட்டாவே போச்சு, கனி நேரே திகார் தான்?? சும்மா அது ஒரு ஜுஜுபி.
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
23-ஆக-201212:00:10 IST Report Abuse
Indiya Tamilan கூட்டணி தர்மத்தை கட்டிக்காத்த தி.மு.கவா ? இல்லை கொள்ளையடித்த கூட்டணி தர்மத்தை கட்டிக்காத்த தி.மு.கவா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்