Police assistance for ruling party MLA: Karunanidhi | ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு அனுசரணை : கருணாநிதி குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு அனுசரணை : கருணாநிதி குற்றச்சாட்டு

Updated : ஆக 24, 2012 | Added : ஆக 22, 2012 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு அனுசரணை : போலீஸ் மீது கருணாநிதி குற்றச்சாட்டு,Police assistance for ruling party MLA: Karunanidhi

சென்னை:"அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பரஞ்ஜோதிக்கு, அனுசரணையாக போலீசார் நடக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.


அவரது அறிக்கை:

அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீதான வழக்கில், "ஜூலை, 9ம் தேதி, கண்டிப்பாக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்கிறோம்' என, போலீஸ் தரப்பில் கோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது. ஜூலை, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரிக்கும், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர், விடுமுறையில் சென்று விட்டார்; பரஞ்ஜோதியின் கையெழுத்து பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்ற காரணம் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஒரு மாதம் கழிந்த பின், கடந்த, 17ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், போலீசார் பரஞ்ஜோதியின் கையெழுத்தை சரிபார்க்க, சென்னை தடவியல் துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கை முடிவு, இன்னும் கிடைக்கவில்லை என்பதால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், நிருபர்களிடம் கூறும்போது, "அவருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், பரஞ்ஜோதியிடமிருந்து மறைமுகமாக மிரட்டல் வருவாகவும், நான் தூங்கியே பல மாதங்களாகி விட்டன என்றும், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று பயந்தபடி வாழ்வதாகவும்' சொல்லியிருக்கிறார்.

அ.தி.மு.க., ஆட்சியில், போலீஸ் துறை எந்த அளவிற்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு அனுசரணையாக நடக்கிறது என்பது, இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகிறது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
23-ஆக-201218:33:28 IST Report Abuse
T.C.MAHENDRAN தலிவரே ,அன்று முதல் இன்றுவரை உங்க தனிப்பட்ட வாழ்க்கையிலும் போலீசார் ரொம்ப அனுசரணையாகத்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை நினைத்து சந்தோசப்படவும் .
Rate this:
Share this comment
Cancel
Kokila Thandapaani - Chennai,இந்தியா
23-ஆக-201218:06:12 IST Report Abuse
Kokila Thandapaani காமெடி )
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
23-ஆக-201215:29:45 IST Report Abuse
Rangarajan Pg அட, இவருக்கு இருக்கும் பிரச்சினை எல்லாம் பெரிதாக தெரியவில்லை. ""இன்று ஒரு தகவல்"" என்பது போல ""இன்று இந்த பிரச்சினை"" என்று இதை கையிலெடுத்திருக்கிறார். உங்கள் ஆட்சியில் காவல் துறை எப்படி ஏவல் துறையாக செயல்பட்டதோ அதை போல் தான் இப்போதும் செயல்படுகிறார்கள். அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் தான் அநியாயத்திற்கு மாறி விட்டீர்கள் கலைஞரே. உங்கள் ஆட்சியில் அமைச்சர்களும் எம். எல். ஏக்களும் ஆட்டம் போடும்போது காவல் துறை சும்மா இருந்தால் அதை பற்றி கேட்க்காதவர். இந்த ஆட்சியில் மட்டுமே தட்டி கேட்க்கிறீர்களே? இது நியாயமா? இது முறையா? நீங்கள் அப்போது சும்மா இருந்தது போல தற்போதைய முதல்வர் சும்மா இருக்கிறார். இந்த விஷயத்தில் அவர் உங்களை தான் முன்னோடியாக பாவித்து பின்பற்றுகிறார் இதற்க்கு நீங்கள் பெருமை அல்லவா பட வேண்டும். அதை விட்டு குறை கூறுகிறீர்களே.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
23-ஆக-201215:29:23 IST Report Abuse
Snake Babu ஆக வந்துள்ள கருத்துப்படி நாம இத ஒரு பெரிய குற்றமா நினைக்க வில்லை, இவங்க செஞ்சாங்க, அவங்க செஞ்சாங்க..... இது இப்படி தான் இருக்கும்கிற அளவுக்கு மக்களை தயார் படுத்திய அரசியல் வாதிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்...... அடுத்த தேர்தல் வரும்போது இவங்கள விட்டு அவங்கள தேர்ந்தேடுதிடலாம்....... இதெல்லாம் சதாரனம்தானே......... நாம எப்ப தெளிவடைவோம்? இதுக்கு நிறைய சகாயம் வர வேண்டும்..... வரனும்..... அதுவரை ......(மற்ற கருத்துகளை படிக்க போகிறேன்)
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
23-ஆக-201214:07:19 IST Report Abuse
maha தலைவரே அரசியல்லே இதெல்லாம் சாதாரணம் .. புதுக்கோட்டையில் கார் வெடிகுண்டு , தினகரன் ஆபிசில் 3 அப்பாவிகள் எரித்து கொலை , tதிருச்சியில் துரைராஜ் சகோதரர்கள் எரித்து கொலை , சேலத்தில் ௨ ஏக்கர் நிலத்துக்காக ஒரு குடும்பமே 9 வயது பையன் உட்பட கொலை , அருப்புக்கோட்டை யில் மனைவியை அபகரித்து அவளது கணவனை கார் ஏற்றி கொலை , பையனூரில் துப்பாக்கியால் சுட்டு இரட்டை கொலை , அந்த சாட்சியை விசாரணை என்ற பெயரில் லாக் அப் கொலை , சென்னையில் ஒரு திமுக பெண் நோர்வாகி கொலை , தாகி கொலை , லீலாவதி கொலை , அண்ணா நகர் ரமேஷ் தற் கொலை , பாஷா (தற் )கொலை , அண்ணாமலை பலகழி கழக மாணவன் உதய குமார் கொலை , புலாவாரி சுகுமாரன் கொலை , சுனாமி கலெக்சனை பிரிப்பதில் கொலை செய்யப்பட்ட்மீனவர் செல்லதுரை (கேபிபி சாமி கேஸ் ), இந்த வழக்குகளில் எல்லாம் தமிழக போலிஸ் எவ்வாறு விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததோ , அது போல் பரஞ்சோதி விசயத்திலும் விரைந்து செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுப்பார்கள் .
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-ஆக-201215:01:15 IST Report Abuse
villupuram jeevithanஅப்பப்பா, நல்ல ஞாபக சக்தி மக்களுக்கும் இது இருந்தால் நல்லதல்லவா?...
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-ஆக-201200:44:14 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅவர் தான் செய்யவில்லை.. கொலைகார சதிகாரர் ... இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்கள் அதை செய்யலாமல்லவா..?? அதனோடு இதையும் செய்யலாமல்லவா ?? அடுத்தவர் மேல் பழியைப் போட்டு இருவரும் நழுவுகிறார்களே... தப்பு செய்வதிலும், ஊழல் செய்வதிலும் மட்டும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரே மாதிரியாக அல்லவா செயல்படுகிறார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
R Elango - Frankfurt,ஜெர்மனி
23-ஆக-201211:58:04 IST Report Abuse
R Elango கேள்வி சரிதான். கேள்வி கேட்டவர்தான் சரியில்லை. இவரே மனைவி, துணைவி என்று சுற்றிக்கொண்டு இருப்பவர். இவருக்கு பரஞ்சோதியின் இரண்டாம் மனைவி பற்றி என்ன கவலை?
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
23-ஆக-201210:44:20 IST Report Abuse
JAY JAY அதிமுகவில் இருந்தாலும் பரஞ்சோதி திமுக ரகம்....
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
23-ஆக-201210:36:59 IST Report Abuse
rajan உங்க கட்சி அரசு ஊழலுக்கு உத்த துணை இருந்தப்போ எல்லாம் ஏன் இத பதிய சிந்தனை இல்லாம குத்தாட்டம் போட்டு ரசிதீர்களே இபோ உங்களுக்கு என்ன ஆச்சு தானை தலைவா. ஒண்ணும் அகத படிக்கு புதிய பாதுக்கதுக்கோ
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
23-ஆக-201209:46:32 IST Report Abuse
வைகை செல்வன் வேணாம்....வேணாம்....வலிக்குது....அழுதுருவேன்..
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
23-ஆக-201208:59:00 IST Report Abuse
Nandu எந்த கட்சியாய் இருந்தாலும் சரி, அரசியல் வாதிகள் கிட்ட தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். அரசியல் வாதிகளுக்கு மக்கள் சுயநலத்தின் பேரில் கூஜா தூக்குவதே இன்றைய அனைத்து அரசியல் சீர்கேடுகளுக்கும் காரணம். அடிமட்ட அரசியல் வாதிகள் பெரும்பாலும் சமூக விரோதிகலாகத்தான் இருக்கிறார்கள். உள்ளூர் ரவுடிகள் தான் அரசியல் கட்சிகளின் வேர்கலலாக இருக்கின்றனர். ஆசிரியர் முதற்கொண்டு சமூகத்தில் அனைத்து தரப்பினரும் ஏதாவது சுயநலத்தின் பேரில் சாதித்துக் கொள்வதற்காக இந்த தீயவர்களுக்கு துதி பாடுகிறார்கள். அச்சத்தின் பேரிலும் அடங்கிப் போயிருக்கின்றனர். மக்களாட்சியில் மக்கள் எப்படியோ அப்படித்தான் இருப்பான் அவனை ஆளுகிறவன். பெரும்பாலோர் சந்தர்ப்பம் கிடைக்காததால் நியாயம் பேசித்திரிகிறார்கள். எப்பொழுது மக்கள் தங்களை மாற்றிக்கொல்லுகிரார்களோ அப்போது எல்லாம் தானாய் மாறிவிடும். ஆனால் மக்கள் எவ்வாறு மாறுவர்? தொலைகாட்சி, மது, சினிமா, கிரிக்கட் இன்னும் பலவழிகழலில் சிக்கி சிதறிப் போயிருக்கிறார்களே படிக்கிறவர்களுக்கு கல்வியில் ஆர்வமில்லை - பணம், ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை தான் குறிக்கோள். மற்றும், இவையெல்லாம் அடையாமல் இந்த விரட்டித்துரத்தப் படும் வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சம். தாய்மொழி தாய்நாட்டுப் பட்ட்ருகூட இல்லை. மரியாதை, பக்தி, ஒழுக்கம் போன்றது தாய்மொழிப்பற்று. காசு பார்க்க வழி சொல்லவில்லை என்றால் தூக்கி எரிந்துவிடுகின்றான்.... இன்னுக் சொல்லிக்கொண்டே போகலாம். உண்மைகள் எதுவென்றால் ஒவ்வொருவரும் தன்னை மாற்றிக்கொண்டால் மாற்றம் பிறக்கும். இல்லையேல் கானல் நீராய் தெரியும் மாற்றத்தை துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். பரஞ்சோதி-கருணாநிதி பற்றி பேசாமல் ஏதேதோ பேசுகிறேன்.. மன்னிக்கவும். ஆனாலும் பிரச்சனையின் ஊற்றுக்கண் இதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை