புதுடில்லி : நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு விவகாரம் தொடர்பான விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சி பங்கேற்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தின் நிதிநிலைமை தொடர்பாக மத்திய நிதி்த்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். சிதம்பரத்துடனான சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தி்த்த மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கூறியதாவது, மேற்குவங்க மாநிலம், தற்போது கடனில் சிக்கித் திணறி வருவதாகவும், மாநிலத்தின் நிதிநிலைமையை சீராக்கும் பொருட்டு, மத்திய அரசு நிதியுதவி வழங்குமாறு அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்டிருந்ததாகவும், ஆனால், தற்போதைக்கு எந்த சிறப்பு நிதியுதவியும் வழங்க முடியாது என்று அவர் கூறிவிட்டார். இருந்தபோதிலும், மாநிலத்தின் நிதிநிலைமையை சீராக்கும் பொருட்டு, மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க உள்ளேன். மாநில நிதிநிலைமை குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை தொடர்ந்து நடைபெறும், அடுத்து நடைபெற உள்ள கூட்டங்களில், மாநில அரசு சார்பில் நிதியமைச்சர் கலந்துகொள்வார் என்று அவர் கூறினார்.
எப்.டி.ஐ.க்கு எதிர்ப்பு தான்
இன்சூரன்ஸ் மற்றும் பென்சன் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அந்நிய நேரடி முதலீடு எந்த துறையில் ( சில்லரை வணிகம், விமானத்துறை....) அனுமதிக்க மத்திய அரசு திட்டமிடும் பட்சத்தில், அதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அவர் கூறினார்.
பிரதமர் ராஜினாமாவா
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றும், அவர் விளக்கம் அளித்தாலே போதும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
பா.ஜ.விற்கு வேண்டுகோள்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த விவகாரத்தில், மத்திய அரசு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் விவாதம் நடத்த தயாராக உள்ள நிலையில், அந்த விவாதத்தில், பாரதிய ஜனதா கட்சி பங்கேற்க வேண்டும், பா.ஜ. விவாதத்தில் பங்கேற்று, தங்கள் தரப்பு நியாயங்கள், மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும் என்று மம்தா கூறினார்.
முன்னதாக பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கோரி பாரதிய ஜனதா கட்சியின் உயர் பிரதிநிதிகள், மம்தா பானர்ஜியை நேரில் சந்தி்த்து ஆதரவு கோரியிருந்ததும், அதற்கு மம்தா மறுப்பு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவின் உயரந்த அமைப்பு சிஏஜி. அந்த அமைப்பு கணக்கிட்டால் அது சரியாகதான் இருக்கும் இதற்கு எதுக்கு விவாதம். பேசமா பிரதமர் தானாக முன்வந்து ராஜினாமா செய்யவேண்டும். அதைவிடுத்து இந்த அம்மா சொல்கிறமாதிரி எல்லாம் கேட்டால் சமீபத்தில் ஒருவர் கேள்விகேட்டதற்கு உடன் அவரை சிறையில் தள்ளிவிட்டார்.இவர் பேசுவதற்கு தகுதியே கிடையாது
மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள திமுக மந்திரிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் திமுக எம்பிக்களும் ஏன் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் மற்றும் சிறப்பு நிதி பெற்றுகொடுக்க முன்வரவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தாலும் இவர்களை எம்பியாக தேர்ந்தெடுத்தது தமிழக மக்கள் தானே? அவர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் இந்த எம்பிக்கள்?
"நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றும், அவர் விளக்கம் அளித்தாலே போதும் என்று மம்தா பானர்ஜி கூறினார்." இத்துடன் மீதமிருந்த மேலும் ஒரு விக்கெட் அவுட். காங்கிரசுக்கு பல்வேறு பிரச்சனைகளில் அதரவாக, கடைசியாக குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்ததற்காக எதிர் அணியிலிருந்த அல்லது ஒரே அணியிலிருந்தும் பல் வேறு பிரச்சனைகளுக்காக தலைவலி கொடுத்து வந்த மாயாவதி, முலாயம் சிங், லல்லு பிரசாத், நிதிஸ் குமார், சரத் யாதவ், பால் தாக்ரே மற்றும் பலரை சிபிஐ விட்டு மிரட்டுதல், மாநிலங்களுக்கான கேட்ட பல் வேறு நிதி சலுகைகள் கொடுத்தல் மற்றும் பல வழிகலில் சமரசம் செய்து கொண்டது. மம்தா பானர்ஜியும் ஸ்பெஷல் நிதி கேட்டார், ஆனால் பிரனாபுக்காக ஆதரவு அளிக்க கடைசி வரை இழுத்து அடித்தால் அது கொடுக்க படவில்லை. அவர் இப்போது நிலகரி உழல் பிரச்சனையில் மன்மோகன் சிங்கிற்கு ஆதரவு அளிக்க தன் மாநிலத்திற்கு ஸ்பெஷல் நிதி கேட்டு மறுபடியம் ஒரு பிட் போட்டிருக்கிறார். தற்போது உள்ள பிரச்சனையிலிருந்து மன்மோகன் சிங் தப்பிப்பதற்கு நிலைமை மிகவும் மோசம் ஆனால் மம்தாவிற்கு கேட்டது கிடைக்கும். தற்போது மம்தாவை எந்த உழல் பிரச்சனையிலும் மாட்ட வைக்க முடியாது. எனவே //கூட்டணி தர்மம்// நிலை நாட்டப்படும். இது போல் கூட்டணி மற்றும் எதிரணியிலிருக்கும் எல்லாரும் தன் சொந்த அல்லது தன் மாநிலத்திற்கான சலுகைகளை //உரிமையோடு கேட்டு// பெறுகிறார்கள். ஆனால் நம் தமிழகத்திற்கு மட்டும் கூட்டணி மற்றும் எதிரணியில் இருப்பவர்கள் யாராலும் மிகவும் அவசியமான எத்தனையோ பிரச்சனைகளுக்கு முல்லை பெரியார் அணை, காவிரி நீர் பங்கீடு, கூடங்குளத்தில் இருந்து அதிக மின்சாரம், மீனவர்கள் தாக்குதல், வறட்சி நிவாரணம் மற்றும் எந்த ஒரு பிரச்சனைக்கும் துளி கூட எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இதற்கும் பல முக்கிய துறைகளில் தமிழகத்தில் இருந்து மந்திரிகள் இருககிறார்கள். அம்மாவை காங்கிரசிற்கு ஆகாது. ஆனால் திமுகாவால் தமிழகதிற்காக ஏன் எதையும் கேட்டு பெற முடிவதில்லை. இதற்கும் திமுக மத்திய கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் தான் மத்திய அரசிடம் போராட வேண்டிய கடமை இருக்கிறதா? ஏன் பாராளுமன்றதிற்கு தேர்ந்து எடுக்கப்பட்ட எம்பிகளுக்கும், மத்திய மந்திரிகளுக்கும் தன் தொகுதி, மற்றும் தன் மாநிலத்திற்காக போராட எந்த கடமையும் அல்லது உரிமையும் இல்லையா? அவர்கள் என்ன நேரடியாக டெல்லியிலிருந்தா தேர்ந்து எடுக்கபட்டார்கள்? இல்லை நாம் எல்லாம் இளிச்சவாயர்களா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.