Advertisement
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2012,23:34 IST
கருத்துகள் (118)
சென்னை: காற்றாலை, புனல், அனல் மின்சார உற்பத்தி பாதிப்பு மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததால், தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 30 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத அளவாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியுள்ளது. மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், தி.மு.க., ஆட்சியில் (2008ம் ஆண்டு) தொழிற்சாலைகளுக்கு, வாரம் ஒரு நாள், மின் விடுமுறை அளிக்கப்பட்டது. மின் விடுமுறை மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தை, வீட்டு இணைப்புகளுக்கு வழங்கி, அப்போதைக்கு நிலைமை சமாளிக்கப்பட்டது.

இரு மடங்கு:

மின் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்ததால், சென்னை தவிர பிற பகுதிகளில், நாள் தோறும், ஐந்து மணி நேரம், அறிவிக்கப்பட்ட மின் தடை நடைமுறைக்கு வந்தது. தற்போது, மின் தடை நேரம் இரு மடங்குக்கு மேலாக அதிகரித்து, 12 மணி நேரமாக மாறியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய உச்சபட்ட மின் தேவை, 11 ஆயிரத்து 500 மெகாவாட்; தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் குறைந்ததால், தற்போது காற்றாலைகளிலும் பருவமழை பொய்த்ததால், நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், இரு வாரத்துக்கு முன் மின் பற்றாக்குறை, 2,500 மெகாவாட் ஆக அதிகரித்தது. பற்றாக்குறையை சமாளிக்க, இரு வாரங்களாக, தமிழகத்தில் தினமும், ஐந்து முதல், ஏழு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் மின்சாரத்தில், 1,072 மெகாவாட் மின்சாரத்தைக் குறைத்து விட்டதால், இரண்டு நாட்களாக மின் பற்றாக்குறை, 3,500 முதல், 4,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 30 சதவீதம் பற்றாக்குறை
ஏற்பட்டதால், இரு நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக, பகலில் ஐந்து முதல், ஆறு மணி நேரம், இரவில், ஒன்றரை மணி நேரத்துக்கு, ஒரு முறை என்ற அளவில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் என, மொத்தம், 10 முதல், 12 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் மின் தடை நேரம் இரட்டிப்பு ஆகியுள்ளது, மக்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வர் ஆலோசனை:

இதற்கிடையே, புதிய மின் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மின் வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்டம் வல்லூரில் மேற்கொண்டு வரும், 500 மெகாவாட் திறன் கொண்ட, வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்று அலகுகள், 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டத்தின் இரண்டு அலகுகள் என, 1,700 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும், பொதுவான மின் நிலைமை குறித்தும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன்
Advertisement
முதல்வர் விவாதித்தார். புதிய மின் திட்டங்களை, விரைந்து மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மின் வாரிய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

12 மணி நேர அவஸ்தை:

கடும் மின் வெட்டால் நாள்தோறும் பகல், இரவு என 12 மணி நேரம் மக்கள் அவஸ்தையை அனுபவிக்கின்றனர். புழுக்கத்தாலும் கொசுக்கடியாலும் இரவில் தூக்கம் கெடுகிறது. மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. பெண்கள் சமையல் செய்வதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. விவசாயப்பணிகளும் முடக்கப்பட்டுள்ளன.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (118)
VS Natarajan - Salem,இந்தியா
24-ஆக-201217:04:08 IST Report Abuse
VS Natarajan அம்மாவுக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் கிடைக்கிறது கூட கிடைக்காது. அம்மாவுக்கு நல்ல, திறமையான மந்திரிகளை பிடிக்காது. அதனால் இந்த மின் துறை தொலை நோக்கு திட்டங்களுக்கு எவனும் முதலீடு செய்ய ரெடியா இல்ல. அம்மாவுக்கு ஓட்டு போடற மக்கள் பத்தி தேர்தலுக்கு கொஞ்ச நாள் முந்தான் நினவு வரும். அதனால் மக்கள் பத்தி கவலை இல்லை. மின் வெட்டு பற்றி புலம்பல் இன்னும் நாலு வருசம் தொடரும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
krishna - cbe,இந்தியா
24-ஆக-201216:45:20 IST Report Abuse
krishna ஜெயா அரசின் சா(வே)தனை பட்டியல் 1 பேருந்து கட்டண உயர்வு. 2 பால் விலை உயர்வு 3 இல்லாத மின்சாரத்திற்கு மின் கட்டண உயர்வு. வாக்களித்த மக்களுக்கு இதுவும் வேண்டும்.இன்னமும் வேண்டும். வாக்களித்துவிட்டு இப்போது புலம்பி என்ன பயன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ganesh - Bangalore,இந்தியா
24-ஆக-201216:14:02 IST Report Abuse
ganesh Leave the politics. It is an important and key issue and the TN Government should think of solving this issue on war footing.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pa. Saravanan - Kovai,இந்தியா
24-ஆக-201216:02:13 IST Report Abuse
Pa. Saravanan பெரும்பாலான மக்கள் ஆத்தா நல்லது செய்வார் என்று நம்பித்தான் தாத்தாவை வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆத்தாவுக்கு தாத்தாவின் மக்கள் மேல் வழக்குப் போடுவதே வேலை என்றாகிப்போனது. குறை சொல்லும் மனப்பான்மை உள்ளவர்கள் சிக்கல் தீர்க்கும் வழியை அறியமாட்டார்கள். ஆத்தாவும் அதுபோலத்தான். மத்திய அரசையும் முன்னாள் அரசையும் குற்றம் சொல்வதைவிட்டு சற்று ஆக்கப்பூர்வமாக யோசித்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம். மின்தடையால் முன்னிரவில் உறக்கம் vgட்டு மறுநாள் அலுவலகம் வரும் கொடுமை, அதைவிட இன்றிரவும் மின்சாரம் இருக்காதே என்றே எண்ணமும், கொசுக்கடியினால் படும் வேதனையும் சொல்லிமாளாது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
P Akilan - Denver, Colorado,யூ.எஸ்.ஏ
24-ஆக-201215:47:24 IST Report Abuse
P Akilan தன் காசில் சூன்யம் வைத்து கொள்வது போல், தமிழக மக்கள் இந்த அம்மாவுக்கு ஓட்டு போட்டு தலையில் மண்ணை வாறிப்போட்டுக்கொண்டார்கள். இந்தம்மாவும் புரியாம வாக்குறுதி கொடுத்துட்டு, தண்டத்துக்கு ஒரு அமைச்சரை போட்டு குட்டிச்சுவர் செய்து கொண்டுள்ளது. என் சொந்த ஊரான திருப்பூரில் மக்கள் கொதித்து இருக்கின்றனர். இன்னும் நாலு வருடம் இதே கதிதான் என்றால், தமிழ் நாட்டில் கலவரம் வெடித்தால் கூட ஆச்சர்யம் இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sar Bar - chennai,இந்தியா
24-ஆக-201215:19:39 IST Report Abuse
Sar Bar மின்சாரம் வரும் நேரத்தில் குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 11 வரை கடைகளின் பெயர் பலகைக்கு செலவுகும் மின்சாரத்தை அரசு கட்டுபடுத்தலாமே, அல்லது எப்போதும் ஒரு பல்புக்கு மட்டும் அனுமதி தர வேண்டும், பெரும் பகுதி வெறும் விளம்பரத்திற்கு செலவு செய்கிறார்கள், உயர் அதிகாரி, மற்றும் அரசியல் வாதிகளுக்கும் கண்டிப்பாக மின்வெட்டு அமல் படுத்த வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Snake Babu - Salem,இந்தியா
24-ஆக-201215:11:48 IST Report Abuse
Snake Babu வீணாகும் மின்சாரத்தையும், திருடும் மின்சாரத்தையும் பிடிங்க.... கணிசம்மா கிடைக்கும்..... குடியிருக்கும் விடுகளுக்கு கெடுபிடி அதிகம் ஆனால் MP, MLA, அதிகாரிகள், கோயில், மாநாடு, பேரணி இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை..... இதனால் பிரச்னை திரும் என்று சொல்லவில்லை... மிச்சம் பிடிக்கலாமே என்று தான் சொல்லுகிறேன்....... ஆயாவுக்கு நிர்வாக திறமை வேணும், இல்லனகூட பரவாயில்லை... மற்றவர்கள் சொல்வதையாவது கேட்க வேண்டும், அதவும் இல்லேன நாமதான் கஷ்டபடனும், வோட்டு போட்ட கஷ்டத்துக்கு.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
24-ஆக-201215:03:01 IST Report Abuse
Appavi Tamilan வாங்கையா..வாங்க....திமுக ஆட்சியில வெறும் 4 மணி நேரம் மின்வெட்டுக்கு ஐயோ ஐயோன்னு பொலம்பி ஜெயாவுக்கு வாக்களிச்சீங்கள்ள...இப்போ என்னாச்சு...சித்தெறும்புக்கு அஞ்சி சிலந்திய புடிச்ச கதை ஆயிடுச்சுல்ல....தலைக்கனம் புடிச்ச ஜெயாவுக்கு நிர்வாகத்திறமை எள்ளளவும் இல்லன்னு எத்தன தடவை சொன்னாலும் எவனும் கேக்கல...அதுவும் 150 இடங்கள வாரி வழங்குனிங்கள்ள...இப்போ அனுபவிக்கிறிங்க...ஜெயாவுக்கு தெரிஞ்சதெல்லாம் மகாராணி மாதிரி இருக்கணும், அவ்வப்போது கட்சியில இருக்கறவங்கள உண்டு இல்லன்னு செய்யணும்....திமுக ஆட்சியில செஞ்ச திட்டங்கள நல்லது கெட்டதுன்னு பாக்காம ஒழிச்சுக்கட்டணும் ...யாராவது எதாவது சொன்னா அவங்க மேல வழக்கு பதியணும்..கொடனாட்டுக்கும் கோட்டைக்கும் போய் வரணும்....இல்லன்னா ஜெயா டிவில தன புகழ் பாடற செய்தி போட வைக்கணும்...இவ்ளோதான்...எதோ 80 -90 ௦ இடங்கள் மட்டுமே குடுத்து வேற எதாவது கூட்டணி கையில மொத்த குடிமியையும் குடுத்திருக்கணும்....அப்போ அந்த மைனாரிட்டி அதிமுக அரசு இந்த அளவுக்கு செயல்பாடில்லாம அலட்சியமா இருந்திருக்காது ....நாளைக்கே ஜெயாவ விட்டா மாநிலத்த நிர்வாகம் செய்யற திறமை அதிமுகவுல யாருக்கும் இல்ல...எல்லாரும் அடிமை மாதிரி இருக்காய்ங்க....நான் ஆட்சிக்கு வந்தா தமிழகத்த எங்கையோ கொண்டுபோவேன்னு ஜெயா சொல்லுச்சுல்ல ...இப்போ பாரு மாநிலமே கேட்டு நாசமா போய்டுச்சு...விலைவாசில ஆரம்பிச்சு, மாநகராட்சியோட அவலட்சணம், கவுன்சிலர்களோட கட்டுகடங்காத அராஜகம்....என்ன எழவு நடந்தாலும் கண்டுக்காத ஜெயாவோட அலட்சிய போக்கு...அடியோட தரம் தாழ்ந்து போன போக்குவரத்து துறை..நாகை மீனவர்கள் மேல சிங்கள நாய்கள் தாக்கறத கண்டுக்காதது.. மெட்ரோ ரயில் திட்டத்த விரைவு படுத்தாம அதுக்கு போட்டியா மோனோ ரயிலுன்னு உதவாக்கரை திட்டம் கொண்டுவந்தது ..திமுக ஆட்சியில இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல திட்டங்களும் ஒழிஞ்சு போனது...ஆட்டம் போடற நித்தியையும் அருணகிரியையும் கண்டுக்காதது...மாநிலம் முழுக்க எக்கச்சக்கமா அதிகரிச்சு போன கொள்ளை கொலை சம்பவங்கள தடுக்க நடவடிக்கை எடுக்காதது... எல்லாத்துக்கும் மேல மாநிலமே மின்சாரம் இல்லாம இருண்டு போனது வரைக்கும்...எல்லாமே சீர் குலைஞ்சு போச்சு....ஆரம்பத்துல எந்த குறைபாடுன்னாலும் சென்ற திமுக ஆட்சியை குறை சொன்ன ஜெயாவுக்கு ஒரு வருஷத்துக்கும் மேல ஆனாலும் எதையும் சரி செய்ய தெரியல...கருணாநிதி நடுவண் அரசுக்கு கடிதம் எழுதறத நக்கல் செஞ்ச ஜெயா இன்னைக்கு அதேதான் செய்யுது...ஏன் நேரா போய் தேவைகள கேக்க வேண்டியதுதான... இன்னும் 4 வருஷம் இருக்கு..இந்த கொடுமை முடிய..அது வரைக்கும் அவனவன் முக்காடு ..அதுவும் சாதாரண முக்காடு இல்ல முழு முக்காடு போட்டு வீட்டுல உக்காருங்க...4 வருஷத்துக்கு இந்தியாவுலயே மிகவும் பின்தங்கிய மாநிலமா தமிழகம் இருக்கும்..அப்போ பாக்கலாம்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
moglee - chennai,இந்தியா
24-ஆக-201216:16:16 IST Report Abuse
mogleeதி மு க ஆண்ட பொழுது வந்த பிரச்சனை. கலைஞர் அன்னைகே இதுக்கு முயற்சி எடுத்திருந்தா இன்னைக்கு இந்த அளவுக்கு பிரச்சனையே வந்திருக்காது. இந்த அம்மா வந்து வேலை ஆரம்பிச்சாலும் உடனே செய்து முடிக்க முடிக்க கூடிய விஷயம் இல்ல. எல்லாம் அந்த ஆளு பண்ண தப்பு தான்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - madurai,இந்தியா
24-ஆக-201214:43:05 IST Report Abuse
saravanan மைனாரிட்டி மதவாதிகளுக்கு கூஜா தூக்கினால் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் மதிய அரசு மின்சாரம், தாராளமாக, வழங்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Balaji - Tirunelveli ,இந்தியா
24-ஆக-201214:41:06 IST Report Abuse
Balaji பாஸ்கர் வேலூர் அவர்களே...திரு. ரஜினிகாந்த சொன்னது அன்றையே தமிழக மக்களின் கருத்து தான்....ரஜினி சொன்னதற்காக யாரும் வாக்களிக்கவில்லை....மக்களின் கருத்துனலாத்தான் இந்த மெஜாரிட்டி கிடைத்தது....தேவை இல்லாமல் திரு. ரஜினிய இழுக்க வேண்டியதுல...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.