மதுரை: தமிழகத்தில் சில மாதங்களாக குறைந்திருந்த மின் வெட்டு, தற்போது கோடைகாலத்தில் அவதிப்பட்டது போன்று "12 மணி நேரம்' என்ற நிலைக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். கோடையில் நீர்மின்நிலையங்களின் உற்பத்தி பாதிப்பு, காற்று உற்பத்தி இல்லாததால் பயனற்ற காற்றாலைகள், மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரக் குறைவு போன்ற காரணங்களால், சென்னை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கடும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. நகர் பகுதிகளில் 10 மணி நேரம், புறநகர் பகுதிகளில் 16 மணி நேரம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வாரவிடுமுறை என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதே நிலை, தற்போது மீண்டும் உருவாகிஉள்ளது. சில நாட்களாக இரவு, பகல் பாராது மின்தடை செய்யப்படுகிறது. இரவில் மின்தடையால், தூக்கமின்றி மக்கள் தவிக்கின்றனர்.
இன்றைய நிலையில் தமிழகத்திற்கு 11,500 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 7,500 மெகாவாட் தான் கையிருப்பாக கிடைக்கிறது. மீதமுள்ள 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கு, தட்டுப்பாடாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க மின்வாரியமும் படாதபாடுபடுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை காற்றாலைகளின் உற்பத்தி மூலம் 3,300 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது. திடீரென காலநிலையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டு, வெப்பம் அதிகரித்து, காற்றின் வேகமும் குறைந்தது. இதனால் நேற்று முன்தினம் 3,000 மெகாவாட்டில் இருந்து 700 மெகாவாட் என்ற நிலைக்கு மின் உற்பத்தி குறைந்தது. நேற்று காலை, இது 300 மெகாவாட் என்ற பரிதாப நிலைக்கு சென்றது. படிப்படியாக பகல் 11 மணிக்கு பின் 1,000 மெகாவாட் என்ற நிலைக்கு சற்று உயர்ந்தது. சமீப காலமாக இரவுகளில் காற்று குறைந்து, மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கல்பாக்கத்தில் மின்தயாரிப்பில் இருந்த இரண்டு யூனிட்டுகள், தற்போது செயல்படவில்லை. தண்ணீரில் இருந்து மின்உற்பத்தி நடந்த அனைத்து இடங்களிலும் பருவமழை ஏமாற்றியதால், தண்ணீர் இல்லாமல் உற்பத்தி முடங்கியுள்ளது. இந்நிலையில் வழக்கமாக தமிழகத்திற்கு 3,300 மெகாவாட் மின்சாரம், மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும். சில நாட்களாக இது 1,900 மெகாவாட் என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தமிழக மக்களுக்கு தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்க வேண்டுமானால், காற்றாலைகள் சுற்ற வேண்டும் அல்லது பருவமழை பெய்து நீர் மின் நிலைய உற்பத்தி துவங்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், மக்களின் பாடு திண்டாட்டம் தான்.
கூடங்குளம் திறப்பது எப்போது:
பெரும் போராட்டங்களுக்கு இடையே கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு தரவேண்டும், என முதல்வரும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். "மடீட்சியா' தலைவர் மணிமாறன் கூறியதாவது: தொழில்கள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உடனடியாக மின்உற்பத்தியை துவங்க வேண்டும். தொடர் நஷ்டம் ஏற்படுவதால், "மின்விடுமுறைக்கும் தயார்' என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொழிற்சாலைகளை ஜெனரேட்டரில் இயக்க, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.19 ஆகிறது. இதற்கு அரசு மானியம் கொடுத்து, தொழில்களை காப்பாற்ற வேண்டும். மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கோடையில் நீர்மின்நிலையங்களின் உற்பத்தி பாதிப்பு, காற்று உற்பத்தி இல்லாததால் பயனற்ற காற்றாலைகள், மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரக் குறைவு போன்ற காரணங்களால்.... ஆமாம் ..... மின்வெட்டிற்கு காரணம் இவைகள் மட்டுமே. ஆளும் கட்சியை குறை சொல்லவே கூடாது. ஒருவேளை இந்த மின்வெட்டு இல்லாமல் இருக்குமேயானால் அதற்க்குக் காரணம் மட்டும்... பால் விலையேற்றம், போக்குவரத்துக் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு இவைகள் அனைத்தையும் இப்போதைய ஆட்சியில் இருந்தாலும், அதற்க்குக் காரணம் முந்தைய / மைனாரிட்டி கருணாநிதி ஆட்சியே. காவேரியில் தண்ணீர் இல்லையா அதற்க்குக் காரணம் முந்தைய / மைனாரிட்டி கருணாநிதி ஆட்சியே. மழை சரியாகப் பெய்யவில்லையா அதற்க்குக் காரணமும் முந்தைய / கருணாநிதி ஆட்சியே. அறிவிக்கப்பட்ட மின்வெட்டைவிட, அறிவிக்கப்படாத மின்வெட்டை பழகிக்கொள்வதே பொதுமக்களுக்கு நல்லது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டை தந்த மைனாரிட்டி கருணாநிதி ஆட்சியைவிட பால் விலையை...., பேருந்துக் கட்டணத்தை.... மின்சாரக் கட்டணத்தை... உயர்த்தி தமிழ் நாட்டின் வருவாயைப் பெருக்கிய இப்போதைய கட்சி ஆட்சியை பாராட்ட பழகிக்கொள்வதே மக்களுக்கு நல்லது.
தமிழகத்தில் இனி மின்வெட்டே இருக்காது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய சாதனையோடு, மின்வெட்டையும் பல மடங்கு உயர்த்தியுள்ளார்கள். கூடங்குளத்தில் ஆரம்பத்திலேயே பணிகளை அனுமதித்திருந்தால் மின் உற்பத்தி துவங்கியிருக்கும். அந்த உற்பத்தி தாமதமானதற்கும் மாநில அரசே காரணம். உருப்படியான திட்டங்கள் எதையும் தொடங்காமல், கடந்த ஆட்சியையே குறை கூறிக்கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஹலோ ஹலோ இருங்க ரொம்ப கூவாதீங்க.... இந்த கஷ்டத்திற்கு எல்லாம் உங்க தானை தலைவர் தான் காரணம். மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைத்ததால் ஐந்து வருடத்தில் 3 மணி நேரம் மின்வெட்டு இருந்தது, இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மத்திய தொகுப்பில் இருந்து மத்திய அரசு மின்சாரம் தருவது குறைத்துவிட்டது, இதற்கும் யார் காரணம் என்று உங்களுக்கே தெரியும். இரண்டாவது, ஐந்து ஆண்டுகளில் மின்சார உற்பத்தியில் ஆர்வம் காட்டாமல், ஒன்றுக்கும் உதவாத சட்டமன்றம், பாலம், மானாட மயிலாட, நமீத்த குத்தாட்டம் என்று ஏகபோக வாழ்க்கை வாழ்ந்ததால் வந்த கஷ்டம் இது. ஐந்து வருடத்தில் ஏன் செய்யவில்லை என்றால், ஒரு மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கவும், பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கவும் ஐந்து வருடம் போதாது என்றீர்கள், மின்சார உற்பத்தி என்பது தோசை சுடுவதை போல இல்லை என்று ஒரு சொம்பு அது பேரு meekannan சொல்லுச்சு, இப்போ ஒரே வருஷத்தில் எல்லாவற்றையும் தீர்க்க மட்டும் உங்க வாய் சொல்லும். இதே வாய் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கே சென்றது? இப்போது அணைத்து மின் உற்பத்தி நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டு கன்வேயர் பெல்ட் தீயில் கருகி போனதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது, ஒரே நேரத்தில் அணைத்து மின் உற்பத்தி நிலையங்களில் எப்படி தீ விபத்து ஏற்படும்? இதற்க்கு யார் காரணம் என்பதும் உங்களுக்கு தெரியும்.... திமுக மட்டும் மறுபடியும் ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழகம் விற்பனைக்கு... உரிமையாளர் கருணாநிதி என்று பாதாகை போட்டு உட்கார்ந்திருப்பார். நீங்க என்ன தான் நல்லவர் போல நடித்தாலும் உங்களுக்கு இனி ஆப்பு தான்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.