உதவி தொடக்க கல்வி அலுவலர் வீட்டில் கோடிக்கணக்கில் சொத்து ஆவணம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஓசூர்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.


போலீசில் புகார்:

ஓசூர், உழவர் சந்தை, "நியூ டெம்பிள் லேண்ட் ஹட்கோ' பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; வேலூர் மாவட்டம், கனியம்பாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கல்வித்துறை நிதிகளை மோசடி செய்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், ஆசிரியர்களுக்கு இட மாறுதல், பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்றதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.


அதிரடி சோதனை:

கிருஷ்ணகிரி மாவட்ட, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், ஒரு குழுவினர், ஓசூரில் உள்ள வெங்கடேசன் வீட்டிலும், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், மற்றொரு குழுவினர், சூளகிரியில் உள்ள, அவரது மாமனார் ஆஞ்சப்பா வீட்டிலும், நேற்று அதிகாலை, ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். ஓசூர் வீட்டில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 41 சொத்துகளின் ஆவணங்களையும், சூளகிரியில், ஆஞ்சப்பா வீட்டில் இருந்த, வங்கி ஆவணங்களையும் கைப்பற்றினர்.


சொத்து பத்திரங்கள்:

டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறுகையில், ""தனியார் சந்தை விலை அடிப்படையில், கைப்பற்றப்பட்ட சொத்துகளை மதிப்பிடும்போது, வெங்கடேசன் வருமானத்துக்கு அதிகமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை சேர்த்துள்ளதை உறுதி செய்துள்ளோம். அவர் மீது, துறைவாரியாக மேல்நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்வோம்,'' என்றார்.


அரசியல் தொடர்பு:

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேசன், சூளகிரி ஒன்றிய, அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகள் சித்ராவையே, திருமணம் செய்து, அதே பள்ளியில், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக, பதவி உயர்வு பெற்றார். இவருக்கு, தி.மு.க.,வில் முக்கிய அரசியல்வாதிகளுடன், நெருங்கிய தொடர்பு உள்ளதால், அதை பயன்படுத்தி, உடனடியாக, ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, நர்சரி பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், மொரப்பூர், திருவண்ணாமலை, பர்கூர் என, பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார்.


ஏற்கனவே இடைநீக்கம்:

ஓசூர் அடுத்த அம்லட்டியில், முஸ்லிம் பிரமுகர் ஒருவரின் நிலத்தை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேசன் மோசடி செய்து, தன் மனைவி சித்ரா பெயரில், பத்திரப் பதிவு செய்தார். அவர் போலீசில் புகார் செய்ததால், நில அபகரிப்பு சட்டப்படி, 2011ம் ஆண்டு, வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இதனால், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின், ஒரு வழியாக அந்த வழக்கில் இருந்து மீண்டு, வெளியே வந்த வெங்கடேசன், வேலூர் மாவட்டம், கனியம்பாடியில், மீண்டும் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்தார்.


ரியல் எஸ்டேட் தொழில்:

தி.மு.க., ஆட்சியில், (2008-09) ஓசூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக, வெங்கடேசன் பணியில் சேர்ந்தார். அப்போது, ஓசூர் பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில், கொடிகட்டி பறந்தது. உள்ளூர் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடன் சேர்ந்து, அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய துவங்கினார். இதன் மூலம், அவரது மனைவி சித்ரா, மாமனார் ஆஞ்சப்பா பெயர்களில், ஓசூர், சூளகிரி, உத்தனப்பள்ளி பகுதியில், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்தார். மேலும், இவர், பைனான்ஸ் மற்றும் சீட்டுத் தொழிலும் நடத்தி வந்ததால், அதிருப்தியடைந்த ஆசிரியர் சங்கத்தினர், இவரை கண்டித்து, பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இவர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-ஆக-201211:06:51 IST Report Abuse
Matt P முன்னாள் குடியரசு தலைவர்,ஆசிரியர்...Dr .ராதாகிருஷ்ணன் சொல்லுவார்...மனிதன் மீனை போல் நீந்த கற்று கொள்கிறான். ..பறவைகளை போல் பறக்க கற்று கொள்கிறான்....மனிதனாக நடக்க கற்றுக்கொள்வதில்லை என்று சொன்னது இவர்களை போன்ற மிருகங்களுக்கஆக தான் போலிருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Unmai Vilambi - Ambasamudram,இந்தியா
24-ஆக-201217:05:53 IST Report Abuse
Unmai Vilambi ஹிஹி கைப்பற்றின சொத்துக்களைஎல்லாம் திரும்பக் கொடுத்திடுவீங்கல்ல
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
24-ஆக-201216:08:30 IST Report Abuse
ganapathy ரொம்ப அநியாயம். பிராமணர்கள் ஆசிரியர்களாக இருந்த போது எங்களை எல்லாம் படிக்க விடலை என்று கூப்பாடு போட்டார்கள். இப்போ இவங்க படிச்சு வந்து என்ன கிழிச்சாங்க. தர்மத்தை விட்டு எந்த கர்மத்தை (தொழில் ) செய்தாலும் அதனால் பாவமே சம்பவிக்கும். அப்துல் கலாம் போன்ற மாணவர்களை உருவாக்கியவர் சிவசுப்ரமணியன் என்ற பிராமணர். ஆசிரியர் தொழிலுக்கு வந்து விட்டால், நீங்கள் (எந்த ஜாதிய சேர்ந்து இருந்தாலும்) உங்களை பிராமணனாக பாவித்து அந்த தர்மத்தை கடை பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர் தொழிலுக்கு வராதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
kurumbu - tirupur,இந்தியா
24-ஆக-201215:34:16 IST Report Abuse
kurumbu தினமலருக்கு ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து இந்த மாதிரி தவறு செய்யும் ஆட்களின் புகைபடங்களை பிரசுரிக்கவும். தவறு செய்யும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கி அரசுக்கு சொந்தமாக்குங்கள்.அதற்கொரு சட்டம் கொண்டுவரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சிந்திப்பவன் - chennai,இந்தியா
24-ஆக-201211:47:36 IST Report Abuse
சிந்திப்பவன் ஆஹா தி.மு.க என்ற விஷ விருட்சம் மு.க எனும் தன் விழுதின் வழியே எப்படி ஒரு மாநிலத்தையே விஷமாக்கியுள்ளதுஇதை சீர் செய்யகூட இன்னும் பல்லாண்டுகள் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
24-ஆக-201208:39:23 IST Report Abuse
villupuram jeevithan பென்சன் தொகையை முதலில் இவர்களுக்கு நிறுத்தவேண்டும். சொத்துக்கள் எதுவும் இவர் பெயரில் இருக்காது. பென்சன் இல்லை என்றால் இவரால் கடைசி காலத்தை ஓட்ட முடியாது. எனவே இம்மாதிரியான அரசு ஊழியர்களின் பென்சன் நிறுத்தப்பட வேண்டும். அது தான் சிறந்த தண்டனை.
Rate this:
Share this comment
Sathish Kumar - Coimbatore,இந்தியா
24-ஆக-201212:03:25 IST Report Abuse
Sathish Kumarஇதனால் நல்ல ஆசிரியர்களும் பாதிக்கப்படக்கூடும். அதனால இவருக்கு சாகும் வரை வெளி வர முடியாத சிறை தண்டனை கொடுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
R.ARUNAN - coimbatore,இந்தியா
24-ஆக-201207:21:35 IST Report Abuse
R.ARUNAN நில மோசடி வழக்கில் கைது. பின்னர் பணி இடை நீக்கம் .பின்னர் வழக்கிலிருந்து விடுதலை.மீண்டும் கல்வி உதவி தொடக்க அலுவலர் . இதை பார்க்கும்போது யாருக்கு சட்டத்தின் மீது பயம் வரும் . தவறு செய்யாதவரை கூட தவறு செய்ய தூண்டும் செயல் அல்லவா இது .1967 ல் இருந்து ஆட்சி நடத்தியவர்களின் பலனை இன்று அனுபவிக்கிறோம் .காமராஜ் அவர்களை தோற்கடித்தவர்களின் வாரிசுகளுக்கு இந்த தண்டனை போதாது
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-201204:12:43 IST Report Abuse
Kasimani Baskaran வாவ். ஒரு ஆசிரியரால் இவ்வளவு "முன்னு"க்கு வர முடியும் என்றால் நிச்சயம் அவரது "கடின" உழைப்பை மெச்ச வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Arjun - Atlanta ,யூ.எஸ்.ஏ
24-ஆக-201202:47:00 IST Report Abuse
Arjun .............ஓசூர்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ...இம்புட்டு சொத்தா.அப்போ துணை/இணை/கல்வி இயக்குனர்கள் ,முதன்மை...DEO ஆகியோர் வீடுகளில் இதைவிட நான்கு பங்கு இருக்குமோ..நல்ல போஸ்டு போல இருக்கே.Rj
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
24-ஆக-201202:32:35 IST Report Abuse
Thangairaja அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும் லஞ்சம். ஊருக்கு ஊர் ரெய்டு நடத்த வேண்டிய கட்டாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்