புதுடில்லி: "தமிழகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அல்லது மாதமும், தண்ணீர் திறந்து விட முடியாது. போதுமான தண்ணீர் திறந்து விட, டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் உள்ளது' என, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்னை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு, கர்நாடக அரசு சார்பில், நேற்று பதில் அளிக்கப்பட்டது. அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: மழை குறைவான காலங்களில், காவிரி நதிநீரை எப்படி பகிர்ந்து கொள்வது தொடர்பாக, 2009 டிசம்., 4ம் தேதி நடந்த, காவிரி கண்காணிப்புக் குழுவின், 24வது கூட்டத்தில், பார்முலா எதுவும் உருவாக்கப்படவில்லை. கர்நாடகாவின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கபினி அணைக்கு மேலான நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கே.ஆர்.எஸ்., அணைக்கு மேலான நீர்ப்பிடிப்புப் பகுதிகள், இந்த இரண்டு அணைகளுக்கும் இடைப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் இரு மாநில எல்லைப் பகுதியான பில்லிகுண்டுலு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் என, மூன்று பிரிவாக உள்ளன. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், ஆக., 20ம் தேதி நிலவரப்படி, 38 ஆண்டு சராசரி அளவான, 184.1 டி.எம்.சி., தண்ணீருக்குப் பதிலாக, 92.2 டி.எம்.சி., தண்ணீர் தான் கிடைத்துள்ளது. கர்நாடகாவில், கடும் வறட்சி நிலவிய நிலையிலும் கூட, பில்லிகுண்டுலுவில் இருந்து, தமிழகத்திற்கு, 16.4 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ஜூன் முதல் தேதி, மேட்டூர் அணையில், 40 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. மீதம் தேவையான, 85 டி.எம்.சி., தண்ணீரில், 16 டி.எம்.சி., தண்ணீரை, ஆக., 20ம் தேதி வரை, ஏற்கனவே தமிழகம் பெற்றுள்ளது. மீதமுள்ள, 69 டி.எம்.சி., தண்ணீரும், டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை குறைவாகப் பெய்த, 1987-88, 1995-96, 2002-03, 2003-04 மற்றும் 2004-05ம் ஆண்டுகளில், 70 டி.எம்.சி., 135, 82, 62 மற்றும் 131 டி.எம்.சி., என்ற அளவில் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையான, பில்லிகுண்டுலுவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்த தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பில்லிகுண்டுலு மற்றும் மேட்டூர் அணைக்கு இடைப்பட்ட பகுதியில், 25 டி.எம்.சி., தண்ணீர் வழக்கமாக உற்பத்தியாகிறது. இது தமிழகத்திற்கு முழுமையாக கிடைக்கிறது. மழை குறைவான காலங்களில், 12.5 டி.எம்.சி.,யாவது கிடைக்கும். ஆகையால், தமிழகத்திற்கு போதுமான தண்ணீர் திறந்து விடப்படவில்லை எனக்கூற முடியாது. ஒவ்வொரு வாரமும் அல்லது மாதமும், தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட முடியாது. போதுமான தண்ணீரை திறந்து விட, டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் உள்ளது. இவ்வாறு, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அட போங்கைய்யா , முட்டாள் நாடு நம்ம நாடு. மிச்சம் மீதி தான் அவங்க தருவாங்க. நம்ம நிலைமை என்னன்னு மொதல்ல நம்ம புரிஞ்சிக்கணும். சும்மா வழக்கு போட்டு என்ன உபயோகம். தமிழ்நாட்ட தவிர எந்த மாநிலமும் உச்ச நீதி மன்றத்த மதிச்சதே இல்ல போலும். ஆனா நாம அவங்க குடுக்கற அந்த என்ன சொல்லுவாங்க, பிச்சை பிச்சை அத எடுத்து , திருப்பி அவங்களுக்கே மின்சாரம் உணவுன்னு கொடுப்போம். என்ன நிலைமை அய்யா இது ?
சேமித்து வைக்க ஒரு புல்லும் புடுங்க மாட்டோம்... திரும்பவும் காஞ்சதுக்கு அப்புறம் திருவோடு ஏந்துவோம்.. சத்தம் போடுவோம்... இருக்குற ஆற்றங்கரை, குளம், குட்டை, ஏரி, வாய்க்கால், கால்வாய், என்று எல்லாத்திலும் ஆக்கிரமிப்பு செஞ்சு அடைப்போம், குப்பையைக் கொட்டி நாசமாக்குவோம், ரசாயனக் கழிவும், கழிவு நீரையும் கொட்டி விஷமாக்குவோம்.. இவ்வளவு நல்லவங்க நாங்க.. எங்களுக்கு ஏன் இந்த கஷ்டம்... கடவுளே......
பேசாமல் கோககோலா பெப்சி நிருவனகளிடம் இருந்து தண்ணி வாங்கலாம் அவங்களிடமிருந்து எவ்வளவு வேனா கெடைக்கும் . என்ன கொஞ்சம் செலவு அதிகம் ... ஒரு தனி மனிதனுக்கு அரசாங்கம் 1.86 லட்சம் கோடி கொடும்கும் பொது ஒரு மாநிலத்துக்கு அவளோ செலவு பன்னமாட்டங்கள ....? தமிழக மக்கள் அனைவரும் மண்ணை தின்று பழகுங்கள் அதுதான் மிஞ்சும் இப்டியே போச்சுன ....ம்ம்க்ம் அதஊம் எங்க விட்டானுங்க இவனுங்க ..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.