Can't do anything: Power minister | மின் தடையை தவிர்க்க முடியவில்லை: கை விரிக்கிறார் அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் தடையை தவிர்க்க முடியவில்லை: கை விரிக்கிறார் அமைச்சர்

Updated : ஆக 25, 2012 | Added : ஆக 24, 2012 | கருத்துகள் (113)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை: "காற்று, நீர் மின் உற்பத்தி பாதிப்பு, தென் மண்டல கட்டுப்பாட்டு மையத்தின் கடுமையான விதிகளால், தமிழகத்தில் மின் தடை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை' என, தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஐந்து ஆண்டுகளில், மின் உற்பத்தியை அதிகரிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையில் 3,500 மெகாவாட் அள விற்கு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம், கடந்த, 19ம் தேதியில், 3,980 மெகாவாட்டாக இருந்தது. இது, நேற்று முன்தினம், 299 மெகாவாட்டாக, குறைந்தது. பருவமழை பொய்த்து போனதால், நீர் மின்சார உற்பத்தியும் குறைந்துஉள்ளது.பூர்த்தி:

மத்திய மின் தொகுப்பில், தேசிய மின் உற்பத்திக் கழகத்தின், ஆந்திர ராமகுண்டம் மற்றும் ஒரிசாவில் தால்சர் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாட்டால், 1,045 மெகாவாட் மின்சாரம் குறைவாக வந்தது. இருந்தாலும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, ஆந்திராவில், 26 சதவீதம், கர்நாடகாவில், 19.5 சதவீதம், தமிழகத்தில், 18 சதவீதம் மின் பற்றாக்குறை உள்ளது. தென் மண்டல கட்டமைப்பை, நாட்டின் பிற மின் கட்டமைப்பில் இணைக்கும், முக்கியமான மின் தொடர்கள் அமைக்கும் பணி, மத்திய அரசு நிறுவனங்களால் குறித்த காலத்தில், நிறைவுபெறாமல் உள்ளது.விதிமுறை கடுமை:

இதனால், தமிழக மின் வாரியம், குஜராத் மற்றும் வடமாநிலங்களில் இருந்து, 855 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்ய, பணம் பட்டுவாடா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், 232 மில்லியன் யூனிட்டே பெறப்படுகிறது. மேலும், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்த வழிமுறைகள், மின்சாரக் கொள்முதல் அளவிற்கும், விலைக்கும் வரம்பு விதித்தது மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, போதுமான மின்சாரத்தை கொள்முதல் செய்ய இயலவில்லை. கடந்த மாதம் 30, 31ம் தேதிகளில், வடக்கு, வடகிழக்கு மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதால், 22 மாநிலங்களில், மின்தடை ஏற்பட்டது. இதற்குப் பின், மத்திய மின் கட்டமைப்பு நிர்வாகம், கடந்த, 16ம் தேதி முதல், மின் கட்டமைப்பின் இயக்க விதிமுறைகளை கடுமைப்படுத்தியுள்ளது. தடையை மீறினால், தண்டனை மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான, மின் தொடரை தானாக துண்டிக்கும் வழிவகையும் செய்துள்ளது.உறுதி:

இதனால், தென்மண்டல கட்டுப்பாட்டு மையம் விதிக்கும் உத்தரவுகளை கண்டிப்பாக அனுசரிக்க வேண்டியுள்ளது. இதனால், மின் தடை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. முதல்வரின் வழிகாட்டுதல் பேரில், தமிழகத்தில் நடந்து வரும் புதிய மின் திட்டங்களில், உற்பத்தி விரைவில் துவங்கியதும், தமிழகத்திற்கு சீரான மின்சாரம் வழங்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivaprakash - Trichy,இந்தியா
27-ஆக-201212:45:55 IST Report Abuse
sivaprakash இந்த லட்சணத்தில் மாநிலம் முழுவதும் மின் சிக்கன விழா , பேரணி , மாணவர்களுக்கான போட்டிகள்.. காமெடி பண்றாங்கப்பா..
Rate this:
Share this comment
Shankar - Trichy,இந்தியா
30-ஆக-201210:33:04 IST Report Abuse
Shankarஇங்கு மின் பற்றாகுறை இருக்கின்ற காரணத்தினால் தான் மின் சிக்கனத்தை பற்றி மாணவர்கள் மூலம் பிரசாரம் செய்ய படுகின்றது. அதை மதிபிற்குரிய மக்கள் யோசனை செய்து பார்க்க vum நீங்கள் மந்திரி பதவி வகித்தால் மட்டும் கிழித்து விடுவீர்களோ....
Rate this:
Share this comment
Cancel
Bneutral - Chandigarh,இந்தியா
26-ஆக-201202:08:29 IST Report Abuse
Bneutral List out how many power plants belong to central and state govt and there capacity. List out how many of them running and what they produce Why cant state govt can file a case for all blocking central govt organisation and request to import latest kind from abroad for elec generation. ITS NOT FARE TO CURSE COMMON PEOPLE IN THE NAME OF ELECTION. if the same going to happen , people dont even go election poll booth to 49o also
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
25-ஆக-201221:55:42 IST Report Abuse
muthu Rajendran ஆறாண்டுக்கு முன் இவர் தான் மின் துறை அமைச்சராக இருந்தவர். கடந்த ஐந்தாண்டு காலத்தில் பெருகிய தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை என்பது உண்மை. அதற்கு முன் இவர்காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய மின்திட்டங்கள் எவை என்று சொல்வார்களா ? சரி கூடங்குளம் தவிர தற்போது என்னென்ன புதிய திட்டங்களை கையில் வைத்திருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Shireen Patrick Mady - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-201219:09:54 IST Report Abuse
Shireen Patrick Mady ஆஹா அமைச்சர் அண்ணனுக்கு என்னா அறிவு? அவரு பால் வடியும் முகரகட்டையை பார்த்தாலே தெரியுது எவ்வளவு பெரிய ஞான சூன்யம் என்று. இந்த பாடாவதி ஆட்சிக்கு தினமலர் வேறு சொம்பு அடிக்குது. கடந்த ஒன்னரை வருஷ ஆட்சியில் ஏதாவது புதிய மின் திட்டத்துக்கு மம்மி முயற்சி எடுத்ததா என்று சொம்பு தினமலர் சொல்ல முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
jambuj - kavunthi,இந்தியா
25-ஆக-201218:21:58 IST Report Abuse
jambuj அடுத்த ஆர்காட்டார் ரெடி
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Yanbu-Al-Bahr,சவுதி அரேபியா
25-ஆக-201218:14:56 IST Report Abuse
Ramesh Sundram மொத்தத்தில் மக்களை முட்டாள் ஆக்கி விட்டர்கள். அம்மா அவர்களே 2014 MP தெருதலில் நீங்கள் மண்ணை கவ்வ போவது உறுதி. Minority DMK திருக்குவளை தீய சக்தி என்று கலைஞரை வசை பாடிய உங்களை என்ன வசை பாடுவது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஒரு ஆண்டு காலம் உங்கள் ஆட்சியில் வளர்ச்சியும் இல்லை, கட்டுபாடும் இல்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல உங்கள் ஆளும் கட்சி அயோகியர்கள் செயல் படுகிறார்கள் .நாங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினை உங்கள் ரூபத்தில் அனுபவிக்கிறோம். தமிழ்நாட்டில் இனி எவன் செத்தாலும் நரகம் இல்லை, நேராக சொர்க்கம் செல்லுவார். ஏன் என்றால் எல்லா நரக வேதனையும் உங்கள் ஆட்சியிலேயே அனுபவித்து விட்டனர். பேயிடம் பிடிபடாமல் இருக்க பிசாசிடம் மாட்டி கொண்ட கதை ஆகி விட்டது எங்கள் தமிழ் நாட்டின் நிலைமை
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-201217:30:39 IST Report Abuse
Sivakumar Manikandan தயவு செய்து இவரோட கல்வி தகுதி என்னனு பாருங்க?...........மிஞ்சி போன BA .....இவரல்லாம் மின்சார மந்திரி...........ஒ பி பன்னீர் செல்வம் - டீ மாஸ்டர், கோகுல இந்திரா - காவடி தூக்கி.......போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்....எவன் வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது......படிச்சவனா போட்ட அம்மாக்கு பிடிக்காது...........
Rate this:
Share this comment
Cancel
ganesh narayan - chennai,இந்தியா
25-ஆக-201216:46:41 IST Report Abuse
ganesh narayan அது எப்படிங்க சென்னை ல மட்டும் ரெண்டு மணி நேரம் தான் மின்வெட்டு , தாம்பரம் தாண்டி தமிழ்நாடு வரைக்கும் பத்து மணி நேரம் மின்வெட்டு , அப்போ சென்னை மட்டும் தான் தமிழ்நாடு ஆ
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
25-ஆக-201216:35:06 IST Report Abuse
Vaduvooraan திமுக விட்டு விட்டுப் போன தமிழகம் சம தரையாக இருந்தால் கட்டுமானப் பணிகளை துவங்கி உடனடியாக மின் நிர்வாகத்தை சீர் செய்திருக்க முடியும்? ஆனால் திமுக அரசு ஐந்து வருடங்களாக சுரண்டு சுரண்டென்று சுரண்டி விட்டுப்போன தமிழகத்தில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கட்டுவதாவது கட்டுமானமாவது? பள்ளத்தை மூடி சமனாக்கும் வேலையைத்தான் இன்றைய அரசு செய்து வருகிறது. இதில் பல வித சோதனைகள். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை பாராட்டி இங்கு யாரும் பதிவு செய்ததாக தெரியவில்லை எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நிலைமை கூடிய விரைவில் நிச்சயம் சீராகும். இன்று நக்கலடிக்கும் நண்பர்கள் வாயடைத்துப் போவார்கள்
Rate this:
Share this comment
Rajan - jeddah,சவுதி அரேபியா
25-ஆக-201219:05:05 IST Report Abuse
Rajanவந்துட்டாரப்பா கொசுமுட்ட மந்த்ரவாதி. அண்ணே வடுவூரன்னே எப்புடின்னே குத்தவச்சி யோசிப்பிங்களோ....
Rate this:
Share this comment
Zubair Masood Mohamed Kassim - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-201219:15:05 IST Report Abuse
Zubair Masood Mohamed Kassimஜால்ரா போதூம்......
Rate this:
Share this comment
Antu Mathiyas - Overland Park,யூ.எஸ்.ஏ
25-ஆக-201221:08:24 IST Report Abuse
Antu Mathiyasஇப்படி சொல்வதற்கு எதற்கு ஒரு மினிஸ்டர், அவருக்கு ஒரு முதல்வர். தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போது எங்கு அமெரிக்காவில் இருந்து கொண்டா கொடுத்தீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
R.Ramki - turaif,சவுதி அரேபியா
25-ஆக-201215:04:55 IST Report Abuse
R.Ramki இருக்கவே இருக்கு தீ பந்தம்.Back 2 stone age.Tamilnadu Rockzzzz
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை