அரசை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம்; தி.மு.க., முஸ்தீபு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், பொதுமக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தியும், மாவட்ட அளவில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.


அக்கட்சி வெளியிட்ட அறிக்கை:

மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கான பணிகள் துவங்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். சிமென்ட் விலை உயர்வு காரணமாக, கட்டடத் தொழிலாளர்களுக்கும் பணிகள் கிடைக்கவில்லை. சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில், ஆளுங்கட்சியினர், ஒவ்வொரு மாவட்டத்திலும், வாங்குவதை வாங்கிக் கொண்டு பரிந்துரை செய்வதாக, தொடர்ந்து அடுக்கடுக்கானப் புகார்கள் வருகின்றன. நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், மூன்றே மாதங்களில் மின் தட்டுப்பாட்டைப் போக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்த போதிலும், நாளுக்கு நாள் மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டே போகிறது. முதல்வர் விவாதம் நடத்துகிறாரே தவிர, நாள்தோறும் உத்தரவிடுகிறாரே தவிர, அவரது உத்தரவுக்குப் பணிந்து, மின்வெட்டு நின்றபாடில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு என்று தான் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. இவைகளைப் பற்றியெல்லாம் ஆட்சியில் இருப்போர் அணுவளவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.


விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு பத்து ஆயிரம் ரூபாய் நிவாரணமாக தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்திஉள்ளனர். இந்த ஆட்சியில் நடைபெறும் அராஜகங்களையும், முறைகேடுகளையும் எடுத்துச் சொன்னால், உடனே அவதூறு வழக்கு என்ற பெயரால் வழக்குகளைப் போட்டு, வாய்ப்பூட்டு மாட்டி பழி வாங்கப் பார்க்கின்றனர். இதைக் கண்டித்தும், பொதுமக்களின் பிரச்னைகளை முன்னெடுத்துச் செல்லும் முறையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.மு.க.,வினர் பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்த வேண்டும். பொதுப் பிரச்னைகளை தவிர, உள்ளூர் பிரச்னைகளையும் இணைத்துக் கொண்டு போராட்டங்கள் நடைபெற வேண்டும். அந்தப் போராட்டங்களுக்கு தலைமை வகிப்பது யார்? முன்னிலை வகிப்பது யார்? என்பதை மாவட்ட நிர்வாகமே பேசி முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.SEKAR - chennai,இந்தியா
25-ஆக-201216:52:29 IST Report Abuse
R.SEKAR கருணாநிதியே டெல்லிக்கு சென்று 2g , coal ,அஹியவற்றிக்கு போராடுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
25-ஆக-201212:25:04 IST Report Abuse
Daniel Joseph நல்லா போராடுங்க போராடி உங்கள் குடும்பத்தை மட்டும் உயர்த்துங்க. பாவம் அடி மட்ட தொண்டன் என்றும் தொண்டனாக இருக்கட்டும் ................................ தமிழ் நாட்டில் இலவசம் தரமாட்டேன் என வாக்குறுதி தருபவர்களுக்கு வாக்கு அளியுங்கள் ........................அப்போ தான் நம் மாநிலம் உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
Karthikeyan - cuddalore ,இந்தியா
25-ஆக-201211:28:31 IST Report Abuse
Karthikeyan இது இதைதான் எதிர் பார்த்தோம், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து போராடுங்கள்.......
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
25-ஆக-201209:44:49 IST Report Abuse
Kankatharan  அவதூறு வழக்குக்கள் திரும்பவும் வந்துவிடாமலிருக்க இப்படி ஏதாவது செய்துகொண்டுதானிருக்க வேண்டும் என்பது (இராச) "தந்திரம்தான்"
Rate this:
Share this comment
Cancel
Kanal - Chennai,இந்தியா
25-ஆக-201209:17:13 IST Report Abuse
Kanal பகல் பொழுதிலும் நினைத்த நேரத்திற்கு மின்வெட்டு நடக்கிறது. தொழில் செய்ய முடியவில்லை, அனைத்தும் பாதிக்கப்படுகிறது. மோசமான நிர்வாகம். தமிழகத்தில் இருள் சூழ்ந்து விட்டது. ஒளி எப்போது உதிக்கும் என்பதே தற்போதைய கவலை.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-ஆக-201208:15:09 IST Report Abuse
villupuram jeevithan 30 வரை நடைபெற இருந்த டெசோ கூட்டங்கள் இப்படி திசை மாறி விட்டனவே?
Rate this:
Share this comment
Karthikeyan - cuddalore ,இந்தியா
25-ஆக-201211:38:02 IST Report Abuse
Karthikeyanvillupuram jeevithan, காற்றின் திசை அவ்வப்போது மாறுபடும். இது கூட தெரியாம ..............
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
25-ஆக-201205:39:10 IST Report Abuse
s.maria alphonse pandian திமுக அறிவித்துள்ள சிமென்ட் விலை ஏற்றம்.....மின்வெட்டு உயர்வு....டெல்டா மாவட்ட விவசாயம் ஆகிய மூன்று பிரச்சனைகளுமே தலையானவை ......வழக்கம்போல சொம்புகள் இந்த பிரச்சனைகளை பற்றி கருத்து தெரிவிக்காமல் மஞ்ச துண்டு..நமீதா..குஷ்பு ..மனைவி..இணைவி என்று தனது தரத்திற்கு ஏற்ப கருத்துக்களை எழுதி தள்ளுவார்கள்...
Rate this:
Share this comment
Panchu Mani - Chennai,இந்தியா
25-ஆக-201206:16:12 IST Report Abuse
Panchu Maniதினமலர் பற்றியும், ஒரு சாதியை பற்றியும், தினமலர் வாசகர்கள் பற்றியும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வெளி வருவது தாத்தாவின் facebook இல் மட்டுமே. அதன் தரம் உயர்ந்த தரம்தான். ஒத்து கொள்ளத்தான் வேண்டும்....
Rate this:
Share this comment
karthick - Chennai,இந்தியா
25-ஆக-201206:47:09 IST Report Abuse
karthickஉங்கள் கருத்து மிகவும் சரி...
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
25-ஆக-201207:46:52 IST Report Abuse
vadiveluசின்ன திருத்தம் தி மு க அறிவித்துள்ள அல்ல, ஏற்றி உள்ள சிமென்ட் விலை( மாறன் காலத்தில் இருந்து சிமென்ட் கம்பெனிகளுடன் போட்ட கமிஷன் ஒப்பந்தம் காரணமாக ),தி மு க அரசு தூங்கியதால் ஏற்பட்டுள்ள மின் வெட்டு, ஐந்து முறையும் ஒரு ஆணி கூட புடுங்காததால் ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயம் என்று சொல்லுங்கள்.சொம்புகள் தரம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் , அண்டாவான உங்கள் தரம் மெச்சும்படி இருக்கிறது....
Rate this:
Share this comment
Jai - ,கனடா
25-ஆக-201208:20:57 IST Report Abuse
Jaiதிரு மரியா அவர்களே, நீங்கள் எவ்வளவுதான் திமுகவின் திரு முக அனுதாபியாய் இருந்தாலும், அவருக்காக பரிந்து பேசினாலும், துரியோதனர்களுக்கு நடுவே ஒரு கர்ணனை போல் நீங்கள் இருந்தாலும், அம்மாவை பரிகசித்தாலும், நாம் வேறுபட்ட கருத்தை கொண்டு இருந்தாலும், கருத்தின் தரம் வேறு திசை நோக்கினாலும், தங்கள் வார்த்தைகளின் தரம் உயர்வாய் தான் இருக்கும், அதை சிலருக்காக குறைத்து கொள்ளாதீர்கள். நீங்கள் ஒரு நாள் கருத்து எழுதவில்லை என்றால் எங்களுக்கும் பொழுது போகவில்லை. தொடரட்டும். நன்றி....
Rate this:
Share this comment
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
25-ஆக-201208:47:04 IST Report Abuse
வைகை செல்வன்எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ஒரே நல்லவரு மரியா மட்டும் தான்.....
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
25-ஆக-201214:38:37 IST Report Abuse
K.Sugavanamசிமெண்டு விலையேற்றம் உங்க தலைவரின் பங்கும் உண்டாமே,இந்தியா சிமெண்ட்ஸ் வாயிலாக? ...
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
25-ஆக-201214:39:38 IST Report Abuse
K.Sugavanamஉண்மை தானே..இல்லையா?...
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
25-ஆக-201204:59:22 IST Report Abuse
Panchu Mani ஒட்டு மொத்த நாட்டிலே மின்சார பிரச்சனை இருக்கிறது. . குஜராத் தவிர எல்லா மாநிலத்திலேயும் ஆந்திரா, கர்நாடக, மத்திய பிரதேஷ் உட்பட கரண்ட் பிரச்னை இருக்கதான் செய்யுது. இவ்ளோ ஏன் டெல்லி குர்கான்ல கூட எப்ப வரும் எப்ப போகும்னே தெரியாது.. இந்த நிலையில் தமிழ் நாட்டில் மின்சாரம் இல்லை என்ற குற்றம் சுமத்துவது இங்கு வர கூடிய அந்நிய முதலீடுகளை, அந்நிய தொழில் நிறுவனங்களை வர விடாமல் செய்து தமிழர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதற்கு சமம்.
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
25-ஆக-201201:28:50 IST Report Abuse
சாமி ஆரம்பம் ஆயிருச்சுடோய் எல்லா ஊரிளும் லோக்கள் பிரச்சனை நிறைய இருக்கு முதல் போரட்டம் மின் வரியத்தில் துடங்கவேண்டும் பொதுமக்கலையும் இதில் திரட்டனும் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்ககூடாது வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
25-ஆக-201200:26:50 IST Report Abuse
Krish கொடுத்த ஐந்து வருடமும் குடும்பத்திற்காக உழைத்து உழைத்து நேரத்தை கழித்து, பின்னர் தான் மக்கள் பற்றி சிந்திக்க நேரம் கிடைத்தது.. அவர் என்ன செய்வர், அவர் ஒரு பாரம் தாங்கி, பண தேக்கி
Rate this:
Share this comment
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
25-ஆக-201202:10:17 IST Report Abuse
மதுர முனியாண்டிஅவருக்கு சாமர்த்தியம் இருந்துச்சி அடிச்சாரு.....உனக்கு ஏன்ப்பா பொறாம? இந்த தமிழ் நாடே அவருக்கும் அவரு குடும்பத்துக்கும் தான் சொந்தம்...முடிஞ்சா நீ இந்தியாவுல இருக்கிற singapore ருக்கு போயிடு...
Rate this:
Share this comment
Jai - ,கனடா
25-ஆக-201205:28:31 IST Report Abuse
Jaiமத்திய அரசு தலை இட்டால் கர்நாடகத்தில் இருந்தும், கேரளாவிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் தண்ணீர் கிடக்கும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரு முக மௌனம் சாதிக்கிறார். மின்சாரத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை....
Rate this:
Share this comment
meekannan - Chennai,இந்தியா
26-ஆக-201213:08:21 IST Report Abuse
meekannanஏண்டா ஜெயலலிதாவுக்கு ஒட்டு போட்டுட்டு என்ன கருணாநிதிகிட்டே எதிர் பார்க்கிரே? இப்ப தெரியுதா தமிழனுக்கு எந்த நல்லது செய்யனுமானாலும் அது கருணாநிதியால் மட்டுமே செய்யமுடியும். வேறே எவனும் கிளிக்கபோரதில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்