Advertisement
இரட்டைமடி வலை பயன்பாட்டை கண்டித்து ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் முற்றுகை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

25 ஆக
2012
23:54
பதிவு செய்த நாள்
ஆக 25,2012 22:43

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளுக்கு, டோக்கன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்தை, இறால்மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட, இரட்டைமடி மீன்பிடிப்பில் ஏராளமான விசைப்படகுகள் ஈடுபட்டு வருவதால் கடல் மற்றும் மீன்வளம் அழிந்து வருகிறது. இந்த வலையை பயன்படுத்தும் படகுகளுக்கு, மீன்பிடி டோக்கன் வழங்குவதற்கு, நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று அதிகாலை, ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்தை, இறால்மடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வழக்கமாக காலை 6 மணிக்கு வழங்க வேண்டிய டோக்கன், 9 மணிக்கு மேல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன.


ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியதாவது: அதிவேக குதிரை சக்தி கொண்ட, பெரிய படகுகள் ஆழம் குறைந்த பாக்ஜலசந்தி கடல் பகுதியில், தடை செய்யப்பட்ட இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வகை மீன்பிடிப்பால் மீன்வளம் அழிவதோடு, இலங்கை மீனவர்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் உருவாகிறது. இரு நாட்டு மீனவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, நமது மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், மீனவர்களும் தாக்கி வருகின்றனர். இரட்டை மடி வலை மீன்பிடிப்பில், ஈடுபடும் மீனவர்கள் மீது அரசு, கடும் நடவடிக்கை கோரி, ஆக.,31ல் இறால்மடி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட படகுகளின் உரிமத்தை, மீன்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து, ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளோம், என்றார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.